Friday, March 7, 2025

MUSIC TALKS - KANNE KANNIL KAADHAL VEITHU ENNAI KOLLATHEY - INNUM UNNAI NAMBUVEN ENDRU PENNE YENNATHEY - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


கண்ணே கண்ணில் 
காதல் வைத்து 
என்னைக் கொல்லாதே
இன்னும் உன்னை நம்புவேன் என்று 
பெண்ணே எண்ணாதே
கண்கள் மூடி காதல் 
செய்ய காதல் செய்ய கற்று தந்தாயே
உண்மை தெரிந்தும் 
உன்னை நான் இன்னும் 

காதல் புனிதம்னு சொல்றாங்க 
ஆனா எத்தனை அளவு உண்மை தெரியலங்க !

பலபேரு சிக்கிதான் தவிக்கிறாங்க 
காதலே வேணாமுனு நினைக்கிறாங்க

இது யாரு செஞ்ச தப்பு 
யாரு மேல வெறுப்பு
காதலிய நினைக்கும் போது 
வருது பாரு கடுப்பு
இந்த காதல் ஒரு வலி 
அதற்கு இல்ல இரு விழி
காதல் வழி போக என்னிடம்
மருந்தும் இல்லயடி
காதலை குறை சொல்லி
பிரயோஜனம் இல்ல !
சில காதலிக்கிற பொண்ணுங்களுக்கு
மனசே இல்ல மனசாட்சி இல்ல
இன்னும் கொஞ்சம் சொல்ல போனா 
அவங்க நம்மளை மனுசனாவே நினைக்கலை
பொன்னுங்க துரத்தி துரத்தி காதலிப்பாங்க 
நீங்க கேட்டது எல்லாமே வாங்கித்தருவாங்க
உங்க நண்பனை அண்ணனு அழைப்பாங்க
நீங்க வெளியூரு போகும் வரை காத்திருப்பாங்க
அந்த அண்ணன் அண்ணன் இல்ல !!

இந்த உறவுக்கு போரு என்னாங்க 
இத கேட்க போனா நாங்க கெட்டவங்க
இத துரோகம்ன்னு நான் சொல்லவில்லை
இது தவிர இதற்கு வேற வார்த்தை இல்லை
என் காதல் என்னனு உனக்கு தெரியல 
காதல் ரொம்ப புனிதம் 
அதை ஏன் நீ கெடுக்கிற  ?

கண்ணே கண்ணில் 
காதல் வைத்து 
என்னைக் கொல்லாதே
இன்னும் உன்னை நம்புவேன் என்று 
பெண்ணே எண்ணாதே
கண்கள் மூடி காதல் 
செய்ய காதல் செய்ய கற்று தந்தாயே
உண்மை தெரிந்தும் 
உன்னை நான் இன்னும்ம்

பத்து பத்து பத்து பத்தையும் 
வாங்கும் போது 
பத்துமேல ஆசைப்படும் பொம்பள
நீ கேட்டத என்னால 
வாங்கித்தர முடியல 
விட்டுட்டு போனியே பாதியில
இன்னும் கல்யாணம் 
கூட ஆகவில்லை ஆனா
ஒரு நாளைக்கு நூறு வாட்டி 
ஹஸ்பண்ட் ஹஸ்பண்ட் ஹஸ்பண்ட்
சொன்ன இந்த பொம்பளை 
என்னை தெரியவே தெரியாது
சொல்லி தள்ளி விட்டுடு போனியே
நடு ரோட்டுலே
என் பாடு அந்த இடத்திலே
ஐயோ அம்மா திண்டாட்டத்திலே
உங்க அப்பா கொண்டு வந்த
பணக்கார மாப்பிள்ளை
நீ கல்யாணம் பண்ண 
அந்த அப்பாவியை
இப்ப அவன் கூட சேர்ந்து
உன்னால வாழ முடியல 
பழைய காதல நினைச்சு 
நீ வாடி வதங்குற
என்னை சந்திக்க நினைச்சு 
நீ தவியா தவிக்கிற
இது யாருக்கு லாபம்னு 
எனக்கு தெரியல
இன்னும் யார் யார் என்னாவ
போறானு எனக்கு தெரியல

இதை நினைத்து பார்க்கையில் 
உயிர் தீயில் வேகுதடி
அவனை எதிரில் வைத்து 
என்னை மடியில் வைத்து கொஞ்சனுமா ?
என்னமா கண்ணமா 
ஆசை இன்னும் தீரவில்லையா ? 
சொல்லமா இனியும் 
ஏமாறுவேனா நானா ?

இங்கு யாரையும் குறிப்பிட்டு 
நான் சொல்லவில்லை
இனி யார் மனதையும் 
என் வார்த்தை வரி 
கொல்ல போவதில்லை
நீதி இது காதலின் நீதி 
இங்கு இல்லை நீதிபதி 
நீதான் வலி உன் மேல் பழி 
அதில் வேற ஒன்றுமில்லை
இது காதல் செய்த சதி 
உன் தலை விதி 
வெல்லும் பார் மதி
.
ஏன் என்றால் நான் தான் 
ஆண்களின் பிரதிநிதி
காதலின் தோல்வி கொண்ட 
ஆண்களின் நிலை
அது ஒரு கோடி சிறைசாலையில் 
தினம் ஒரு நொடி இந்த நிலைக்கு 
ஆளான ஆண்களின் எண்ணிக்கை 
இன்று கோடி கோடி 

காதல் தோல்வியில் உயிரும் 
இங்கு போகுதடி
இனி உங்க போலியான 
காதல் வேணுமாடி

எங்களுக்கும் பல லட்சியங்கள் உள்ளதடி
நாங்களும் வாழ்க்கையில் 
சாதிக்கிறோம் பாருங்கடி
பல நல்ல பொண்ணுங்களும் இருக்காங்க
அவங்கள பார்த்தாவது புதுசா திருந்த பாருங்க
நம்மை பெத்த தாயும் கூட பொண்ணுதானுங்க
அவங்க அருமை பெருமைய 
கேட்டு தெரிஞ்சிக்கிங்க

No comments:

TAMIL QUOTES - EP.2

இப்போது சராசரி வலிமையில் இருக்கும் நம்முடைய உடலுக்குள்ளேதான் ஒரு கட்டுமஸ்தான பலசாலி ஒளிந்துகொண்டு இருக்கிறான் என்றும் ஆரோக்கியமான பாதுகாப்பா...