Tuesday, March 4, 2025

MUSIC TALKS - ILAVENIRKALA PANJAMI - AVAL VAANIL VANDHA POURNAMI - CHITHIRAI MADHAM - TAMIL SONG LYRICS

இளவேனிற்கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி
இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி
சித்திர வானம் சித்திரம் தீட்டிடும் மேகம்
ஒரு பத்தரை மாத்து தங்க நிலாவை சந்தித்தேன்
எங்கள் பார்வை நின்று போனது வானம் பூமி என்ன ஆனது ?
இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி

தூக்கம் போனது அவளை நினைத்தே 

ஏக்கமானது பித்தனை போலானேன்
பார்க்குமிடமெல்லாம் அவளை போலே
பாவை தெரிந்தது பைத்தியமாய் ஆனேன்

என்னை போலே அவளும் இருந்தால் என்று
அவள் சொல்ல கேட்டு உள்ளம் எங்கோ போனது
மீண்டும் மீண்டும் அவள்தான் வேண்டும் என்று
எனை தூண்டும் உள்ளம் பச்சை கொடி காட்டுது

இது இன்று வந்த சொந்தமா ? இல்லை ஜென்ம ஜென்ம பந்தமா ?

மஞ்சள் குங்குமம் கொண்ட தேவதை
எந்தன் கையிலே மங்கல நாண் கொண்டாள்
திங்கள் ஆடிடும் வானம் போலவே
எங்கள் வீட்டிலே மழலைகள் தான் தந்தாள்

பாட வைத்து உள்ளம் ஆடவைத்து
அன்பு பாட்டு சொல்லி வீட்டில் இன்பம் தந்தவள்
தேட வைத்து நெஞ்சம் வாட வைத்து
என்னை சோக தீயில் வேக வைத்து போனவள்

இந்த ஏழை என்னை மணந்தாள் !!
எந்தன் ஜீவனுக்குள் கலந்தாள் !!

இளவேனிற்கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி
இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி
சித்திர வானம் சித்திரம் தீட்டிடும் மேகம்
ஒரு பத்தரை மாத்து தங்க நிலாவை சந்தித்தேன்
எங்கள் பார்வை நின்று போனது வானம் பூமி என்ன ஆனது ?
இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி

No comments:

JUST TALKS - ஆஸ்கார் அவார்டு வாங்கிய ஷார்ட் பிலிம்கள் !

2000 : My Mother Dreams the Satan's Disciples in New York 2001 : Quiero Ser (I Want to Be) 2002 : The Accountant 2003 : This Charming Ma...