1. ஒரு போர் வாள் கடினமான உலோகத்தில் செய்யப்பட்டால் அதனை மதிப்பாக மதிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. கலைப்பொருளாக பத்திரமாக பார்த்துக்கொள்ள நினைப்பது அதனை தகரமாக மதிப்பதற்க்கு சமமானது. ஒரு போர் வாளின் வேலையை அது செய்யும்போதுதான் மதிப்பு அதுபோல அறிவு உள்ளவர் அதனை பயன்படுத்தி முன்னேறினால்தான் மதிப்பு !
2. இன்றைய காலத்து இளைஞர்கள் குடும்பம் குழந்தைகள் என்று ஒரு நிஜமான சந்தோஷத்துக்காக வாழவேண்டும். போலியான சந்தோஷங்களாக இருக்கும் போதை போன்ற விஷயங்களில் விழுந்து பின்னாட்களில் வருந்த கூடாது.
3. உங்களின் விதியே உங்களுக்கு எதிராக செயல்பட்டாலும் வெற்றி அடைந்து காட்ட வேண்டும், உங்களுடைய முயற்சி உங்களின் விதியை மாற்றி எழுதுவதுதான் என்றால் இந்த கேலக்ஸி அதனுடைய சக்திகளை பயன்படுத்தி எப்போதுமே உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது.
4. உங்களுடைய நேரம் , உங்களுடைய பணம் , உங்களுடைய திறமைகள் இவைகள் எல்லாம் எங்கே எப்படி செலவாகிறது என்பதை கவனித்துக்கொண்டே இருங்கள், சரியான இடத்தில் சரியான பொருளுக்காக அல்லது சரியான சேவைகளுக்காக மட்டுமே இவைகள் செலவாக வேண்டும், நினைவிருக்கட்டும் இவைகள் காலத்தால் தீர்ந்து போக்கக்கூடியவை என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
5. ஒரு காதல் என்பது உங்களுடைய வாழ்க்கையின் அடுத்த இருபது வருடங்களுக்கு ஒரு சரியான துணையை தேர்ந்தெடுப்பதாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தை கவனமாக யோசித்து பாருங்கள். உங்களுடைய தேர்ந்தெடுப்பு சரியானதாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment