Friday, March 7, 2025

TAMIL QUOTES - EP.2

இப்போது சராசரி வலிமையில் இருக்கும் நம்முடைய உடலுக்குள்ளேதான் ஒரு கட்டுமஸ்தான பலசாலி ஒளிந்துகொண்டு இருக்கிறான் என்றும் ஆரோக்கியமான பாதுகாப்பான உணவு பழக்கத்துக்கும் முறையான உடற்பயிற்சிக்கும் காத்துக்கொண்டு இருக்கிறான் என்றும் சொல்லபடுகிறது. 

நம்மை காயப்படுத்திய முட்டாள் மனிதர்களிடம் இணைந்து அவர்களோடு இருந்தே நம்முடைய காயங்களை சரிசெய்துவிடலாம் என்பது முட்டாள்தனம். ஒரு மனித கூட்டம் முட்டாள்கள் என்றால் தொலைவில் வைத்து வேலை பார்ப்பதே நல்லது. 

உங்களுடைய வசதி வாய்ப்பையும் மீறி ஒருவருக்கு உதவி பண்ணினாலும் ஒரு சில நன்றிகெட்ட ஜென்மங்கள் உங்களை வெறுக்கத்தான் செய்வார்கள். உங்களுடைய வாழ்க்கையில் இதுபோல கிறுக்கு ஜென்மங்களை சந்தித்து ஆகவேண்டும். இவர்களோடு பழகலாம் ஆனால் அதிகாரத்தில் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். 

ஒரு சந்தோஷமான நாளுக்காக , உங்களுடைய வாழ்க்கையில் நிரந்தரமான முன்னேற்றத்தை உருவாகும் ஒரு பெரிய வெற்றியை அடையும் அந்த ஒரு சந்தோஷமான நாளுக்காக ஒரு வருடம் மொத்தமும் நம்பிக்கையோடு வேலை பார்க்கலாம். தப்பே இல்லை. 

பெரிய லட்சியங்களை வைத்து இருப்பவர்கள் போதாத காலத்தால் அந்த இலட்சியங்களை நிறைவுபடுத்த முடியாமல் போவதால் உருவாகும் வெட்கத்தால் தாழ்வு மனப்பான்மை , பதட்டம் , மனச்சோர்வு போன்ற விஷயங்களால் கஷ்டப்படுகிறார்கள். 

உங்களுடைய மன நிறைவையும் , உங்களுடைய குடும்பத்தோடு நீங்கள் இருக்கும் நாட்களையும் தியாகம் செய்து நீங்கள் ஒரு வேலையை பார்த்தால் அது உண்மையில் மிகப்பெரிய பாராட்ட வேண்டிய ஒரு விஷயம். இது உங்களுடைய பெர்ஸனல் முன்னேற்றத்துக்கு நீங்கள் செய்யும் ஒரு வகையான பெரிய லெவல் தியாகம். 

காலத்துக்கு ஏற்றத்து போல மாறாமல் ஏதோ ஒரு காலத்தில் ஒரு வகை கருத்துக்கள் ஜெயித்தது என்பதற்காக அந்த கருத்துக்களை கண்ணை மூடிக்கொண்டு பண்ணும் மூடத்தனம்தான் பிற்போக்கு வாதம், 




No comments:

TAMIL QUOTES - EP.2

இப்போது சராசரி வலிமையில் இருக்கும் நம்முடைய உடலுக்குள்ளேதான் ஒரு கட்டுமஸ்தான பலசாலி ஒளிந்துகொண்டு இருக்கிறான் என்றும் ஆரோக்கியமான பாதுகாப்பா...