ஒரு உலக அளவில் மரியாதை கொடுக்கக்கூடிய மிகப்பெரிய நிறுவனத்தை ஆரம்பித்து அந்த நிறுவனத்தின் மூலமாக கணிசமான தொகையை ஆண்டுக்கான வருமானமாக பார்ப்பது என்பது எல்லோருக்குமே கனவாக தான் இருக்கிறது. இங்கே நான் நிறைய வருடங்களில் போராடிவிட்டேன் அனைத்து வருடங்களிலும் நான் தோற்றுப் போய் விட்டேன். மற்றவருடைய அவமானமும் கேலியும் அவர்கள் கொடுக்கும் கொடூரமான வலிகளும் என்னுடைய மனதுக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் நான் என்னை தரையில் விட்டு செல்ல விடுவதில்லை என்று நான் எனக்காக ஒரு சத்தியம் செய்துள்ளேன். இந்த வார்த்தைகளை நான் எப்போதுமே மீற மாட்டேன். இந்த வாக்கு நான் எதனால் கொடுத்திருக்கிறேன் என்றால் அப்போது என்னுடைய வாழ்க்கையின் நான் அதிகபட்ச கஷ்டத்தில் இருந்தேன் எனக்கென்று ஒரு சிறிய சந்தோஷம் கூட கிடைக்காமல் இருந்தது. என்னை நானே பெருமளவு சேதம் செய்து கொண்டு ஒரு குறிப்பிட்ட நாள் வரும்போது நான் என்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளத்தான் நினைத்தேன். அப்போதுதான் எனக்கு புரிந்தது என்னை நானே நான் தரையில் விட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த மாதிரியான நிலையில் தான் யாருமே உதவ மாட்டார்கள் மேலும் யாரிடம் மனமார்ந்த உதவி கேட்டால் அவர்கள் நம்முடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளக்கூடிய நம்முடைய இந்த யோசனை தான் நம் வாழ்க்கையிலேயே நாம் எடுத்த உருப்படியான யோசனை என்றுதான் கருத்துக்களை சொல்வார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் போரில் நேருக்கு நேர கொத்திக் கொல்லப்பட வேண்டிய எதிரிகளுக்கு சமமானவர்கள் என்பதை நான் கவனித்தேன். இத்தகைய மனிதர்களிடம் தோற்றுப் போவதில் நான் எப்போதுமே விரும்பவில்லை. இந்த வலைப்பூவில் பல வருடங்களாக நிறைய விஷயங்களை பேசி பேசி இவ்வாறு பேசுவதன் மூலமாகவே கொஞ்சமாக பணம் சம்பாதிப்பதும் கூட இதனுடைய நிறுவனத்தை உருவாக்கும் விஷயங்களில் ஒரு பாகம் தான். என்னை நானே சேதப்படுத்திக் கொள்ளும் மனநிலை என்னுடைய வாழ்க்கை மிகவும் அதிகமாக பாதித்தது என்று சொல்லலாம். பெரும்பாலான நேரங்களில் என்னை நானே மேம்படுத்திக் கொண்டு வாழக்கூடிய ஒரு மனநிலையை நான் உருவாக்கிக் கொண்டது குறித்து மிகவும் கௌரவப்படுகிறேன். இந்த உலகம் இன்றைய தேதி கூட என்னுடைய மிகப்பெரிய போராட்டக் களமாக தான் இருக்கிறது இன்னும் என்னுடைய இறப்பு வரைக்கும் இந்த உலகம் இது போன்ற ஒரு போராட்டக் களமாக தான் இருப்பது என்பது எனக்கு தெளிவாக புரிந்து விட்டது. இந்த டெஸ்டின் அர்த்தம் படிக்கும்போது உங்களுக்கு இப்போதெல்லாம் புரியாது இந்த வலைப்பூவில் போடப்பட்டிருக்கும் ஒவ்வொரு பதிவுகளுடைய அர்த்தமும் நான் எப்போது வெற்றி அடைகிறேனோ அப்போதுதான் உங்களுக்கு புரியும்.
No comments:
Post a Comment