செவ்வாய், 4 மார்ச், 2025

GENERAL TALKS - தற்காலிகமான யோசனையாளர்கள் , நிரந்தரமான முடிவாளர்கள்.


இங்கே நிரந்தரமான புத்தி இருப்பவர்கள் நிறுத்தி நிதானமான வகையில்தான் முன்னேறுவார்கள். பொதுவாக தற்காலிக புத்தி இருப்பவர்களுக்கு நிரந்தரமாக யோசித்து முடிவு எடுப்பவர்களை பார்த்தால் முட்டாள்தனமாகத்தான் தோன்றும். நிதானமாக யோசிப்பவர்கள் பயந்தவர்கள் அல்ல. உண்மை என்னவென்றால் நிதானமாக யோசிப்பவர்கள்தான் ஆபத்தான மனிதர்கள். இவர்களுடைய திறன் தெரியாமல் பேசிக்கொண்டு இருக்க கூடாது. ஒரு சின்ன துகள் அளவுக்கு கூட எதுவுமே தெரியாத ஆட்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தவளை தான் வாயால் கெடும் என்பதை போல தங்களது வாழ்க்கையை தானாகவே கெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். தற்காலிகமான யோசனை என்பது ஒரு மணி  நேரத்தில் இருந்து ஒரு நாள் வரைக்கும்தான் தாக்குபிடிக்கும். உண்மையில் நிரந்தரமான யோசனை மட்டும்தான் உலகத்தில் நிலைக்கும். நிறுத்தி நிதானமாக யோசிப்பவர்கள் கடவுளை கூட ஜெயிக்கிறார்கள். தற்காலிக யோசனை எந்த விஷயத்திலும் பெரிதாக எதுவுமே சாதிப்பது இல்லை. ஒரு சில பணக்கார வீட்டு ஆட்கள் தற்காலிக யோசனைகளில் வாழ்க்கையை நகர்த்திவிட்டு தொலைநோக்கு பார்வை இல்லாமல் காலத்தை கழித்து வாழ்வதை பாரத்து நடுத்தர வர்க்கமும் நிரந்தர யோசனைகளையும், நிதானமாக யோசித்து செயல்படும் மனநிலையையும் கைவிட்டுவிட்டு தற்காலிக யோசனைகளுக்கு தாவிவிடுகிறார்கள். தற்காலிக யோசனைகள் எளிமையானது. வாழ்க்கைக்கு அவசியமானது என்றாலும் தற்காலிக யோசனைகளை மட்டுமே நம்பி வாழ்க்கையை நகர்த்திவிட முடியாது. நம்முடைய வாழ்க்கைக்கு நிரந்தரமான யோசனைகள்தான் தேவை. தலைமுறை தலைமுறை பணக்காரர்களை பார்த்து புத்தி மழுங்க வேண்டாம். இவர்களின் தற்காலிக யோசனைகளை செயல்படுத்தும் அணுகுமுறை பலன் அளிக்கவில்லை என்றாலும் இவர்களை காப்பாற்ற பின்னணியில் பணம் உள்ளது. நீங்கள் இப்போதுதான் உங்களுடைய வீட்டின் நிரந்தர பணக்காரர் என்று மாறவேண்டும் என்பதால் நீங்கள்தான் நிரந்தர யோசனைகளை உருவாகும் மனிதராக உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். 

கருத்துகள் இல்லை:

generation not loving music