கடந்த புஷ்பா படத்தின் கதையை பார்த்தால் செம்மரம் கடத்த முயற்சி செய்யும் ஒரு கடத்தல் தலைவராக மாறிய புஷ்பாவின் இப்போதைய வாழ்க்கையில் இருந்து திரைக்கதை தொடர்கிறது.
ஒரு வருடத்துக்குள்ளே செம்மரக் கடத்தல் உலகத்தில் சூப்பர் பவராக புஷ்பா மாறி, தனது குற்ற செயல்களின் செல்வாக்கை நாட்டைத் தாண்டி பரப்புகிறார். பன்வார் சிங் (பகத் பாசில்) ஒரு பக்கம் இவரை மாட்டிவிட போராட இன்னொரு பக்கம் மங்களம் சீனு (சுனில்) இவரை மிஞ்ச முயற்சிக்க இதுக்கு சம்மந்தமே இல்லாமல் CM தன்னோடு போட்டோ எடுத்துக்கொள்ள மறுத்ததால் CM - ஐ மாற்ற 5000 கோடி கலேக்ஷன் எடுக்க புஷ்பா அலைவதோடு கதை போகிறது !
கடைசி ஒரு மணி நேரத்தில் தன்னை தூக்கி எறிந்த அண்ணன் குடும்பத்தில் ஒரே ஒரு அண்ணன் மகள் தன்னை சித்தப்பாவாக மதித்து பேசுவதால் அந்த அண்ணன் மகள் கடத்தப்பட்டபோது உயிரை பணயம் வைத்து சண்டை போட்டு புஷ்பா காப்பாற்றுகிறார் ! - கதை நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா ? படத்தை பாருங்கள் - விஷமம் மட்டும் படத்தில் இருக்கும் , விஷயம் கொஞ்சமாக இருக்கும் !
அரசியல், வியாபாரம் மற்றும் புஷ்பாவின் தனிப்பட்ட வாழ்க்கை ஒன்றோடொன்று மோதும் நிலையில் இந்த படம் அதிரடியான சண்டைக்காட்சிகளாலும் புஷ்பராஜின் வலிமையான வசனங்களாலும் புறநகர் மற்றும் கிராமத்து ரசிகர்களை மிகவும் கவரும் என்ற எதிர்பார்ப்பில் டார்கெட் ஆடியன்ஸ் பார்த்து விட்டதால் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
இந்த மாதிரி படங்களுக்கு சப்போர்ட் பண்ணாமல் நல்ல படங்கள் வந்தால் சப்போர்ட் பண்ணுங்கள் , இல்லையென்றால் படத்துக்கு பதிலாக குப்பையாக இருக்கும் பெரிய பட்ஜெட் தோல்விகள் புது இளைஞர்களின் சினிமா கனவுகளை உடைப்பது தொடர்ந்துகொண்டே இருக்கும் !
புஷ்பா அடிப்படையில் ஒரு பயங்கரமான வில்லன் , மனதுக்குள்ளே கொஞ்சம் நல்லவர் , யார் பேச்சையும் கேட்க மாட்டார் , எல்லோரும் தனக்கு அடங்கி இருக்க வேண்டும் என்று வேலையை பார்ப்பார். இந்த கேரக்ட்டர் டிசைன் புதிதானது அதுதான் வெற்றிக்கு காரணமாக இந்த கமெர்ஷியல் படத்தில் இருக்கிறது என்று நம்புகிறேன் !
No comments:
Post a Comment