Monday, March 17, 2025

GENERAL TALKS - கடினம் என்றாலும் வென்றாக வேண்டும் !



நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட விஷயம் இங்கே நேருக்கு நேராக எதிர்ப்பவர்களை மன்னிக்க கூடாது. இவர்கள் நம்முடைய உழைப்பால் பெற்ற சக்திகளை நமக்கு எதிராகவே பயன்படுத்துகிறார்கள். நமக்கான உரிமைகளை மறுக்கிறார்கள். நாம்தான் இந்த பணத்தை உருவாக்கினோம். இது அனைத்துமே நாம் கடினமாக உழைத்து சேர்த்த காசு. ஒரே நாளில் பிடுங்கிவிட்டு இப்படி மோசமான விஷயங்களை நமக்கு செய்கிறார்கள். நம்மை என்ன இவர்களுக்காக உயிரை கொடுக்கப்போகும் ஆட்டு மந்தைகள் என்று நினைக்கிறார்களா ? எப்போதுமே தலைவலிகளாக இருக்கிறார்கள். இவர்கள் நிச்சயமாக பூமிக்கு பாரமாகத்தான் இருக்கப்போகிறார்கள். இவர்களை தடுக்க வேண்டும். கண்டிப்பாக நான்கு சுவார்களுக்குள்ளே அடைக்க வேண்டும். இவர்களின் பேராசைகளும் திருட்டுத்தனமாக பணத்தை திருடும் குருட்டு புத்திகளுக்கும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கி இவர்களுக்கான தண்டனைகளை மிச்சம் வைக்காமல் கொடுக்கவேண்டும். இவர்களுக்கு எல்லாம் நிரந்தரமான சிறைவாசம்தான் நன்மை. இவர்களின் மனதுக்குள்ளே கொட்டி வைத்து இருக்கும் சாக்கடைகளை எடுப்பது நம்முடைய வேலை அல்ல. நாற்றமடிக்கும் குமட்டும் சாக்கடை திரவம் தங்க பாத்திரத்தில் இருந்தாலும் அதனை வீட்டின் வெளியேதான் தூக்கி போட வேண்டும். இவர்களும் நமது எல்லைக்கு வெளியே இருப்பதுதான் இரு பக்கமும் நல்ல விஷயமாக அமையபோகிறது. நம்முடைய வாழ்க்கையில் எப்போதுமே இதைத்தான் பண்ணப்போகிறோம் என்ற கிளாரிஃபிகேஷன் உடன் ஒரு செயலை இழக்க வேண்டும் அதாவது தெளிவுடன் ஒரு செயலை இழக்க வேண்டும் நிச்சயமாக அது நல்ல விஷயமாக இருந்தாலும் சரி கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி இதைத்தான் செய்யப் போகிறோம் என்ற தெளிவு நமக்குள் இருந்து விட்டால் நம்மால் அந்த விஷயத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும். இங்கே நிறைய பேரால் வெற்றியடைய முடியவில்லை அதற்கு காரணம் என்ன ? கண்டிப்பாக அவர்களுக்கு வாழ்க்கையில் இது தான் செய்யப் போகிறோம் என்ற தெளிவு இல்லை. காலம் ஒரு மனிதனை ஒரு செயலை செய்ய சொல்லி கட்டாயப்படுத்துகிறது என்றால் கண்டிப்பாக காலத்துக்காக அந்த செயலை செய்து விடுங்களேன். இட் இஸ் இம்பாசிபிள் டு வின் அகெய்ன்ஸ்ட் டைம். கடவுளுடைய கட்டற்ற அதிகாரத்தால் எப்படிப்பட்ட செயல்களை வேண்டும் என்றாலும் முடிக்க முடியும். ஒரு கொடிய மனிதரை திருத்தி நல்லவராக மாற்றி அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை வாழ வைப்பதன் மூலமாக எதிர்காலத்தில் செய்யக்கூடிய பாவங்கள் எதுவாக இருந்தாலும் பின் நாட்களிலும் கூட ஒரு நல்ல வாழ்க்கை உள்ளது என்ற ஒரு நல்ல கருத்து கிடைத்திருந்திருக்குமே. கதைகளின் கதாநாயகர்கள் எதனால் எப்போதும் கொடியவர்களை மாற்ற முயற்சிப்பதே இல்லை ? காரணம் என்னவென்றால் அவர்களால் அந்தளவுக்கு சக்தி இருக்கிறது இருந்தாலும் அவர்கள் அவதாரத்தை வெற்றியடைய வைக்க இப்படிப்பட்ட விஷயங்களில் இறங்கி விடுவார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் சிறப்பான கதையை விட பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை நன்றாக எதிர்பார்க்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன் காலத்தின் பயணத்தை மாற்ற முடியாது காலம் எப்போதுமே அவதாரம் எடுத்தவர்களுக்கு மட்டும்தான் சப்போர்ட்டாக இருக்கும் அந்த அவதாரத்தில் பாதிக்கப்படுபவர்களை காலம் எப்போதும் கண்டு கொள்ளாது. இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் இந்த உலகத்தில் வெற்றி அடைய வேண்டும் என்று வரைமுறைகள் இருக்கிறது.உயிரைக் கொடுத்து கஷ்டப்பட்டாலும் காலத்தை ஜெயிக்க முடியாது. காலம் மட்டும்தான் அவதாரங்களை பஞ்சு மெத்தையில் தூங்க வைக்கும் அடிமட்டங்களை சாக்கடைக்குள் தள்ளவே முயற்சிக்கும்

No comments:

GENERAL TALKS - பிரிவினை நீக்கப்பட வேண்டிய விஷயம்

சமூகத்தில் இருந்து சாதிப் பிரிவினைகளை அகற்ற, கல்வி என்பது நமக்குத் தேவையான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும்.  தரமான கல்வி, மக்கள் தன்னம...