Friday, March 7, 2025

TAMIL QUOTES - EP.1

இடி , மின்னல் , சூறாவளிக்கு பயப்படாமல் போராடும் மக்களை கூட பொறாமையும் பேராசையும் மனதை மழைத்துளி குளிருக்கு அஞ்சும் சோம்பேறிகளாக மாற்றிவிடும். 

நீங்கள் பார்க்கும் மனிதர்களுக்குள்ளே ஒருவராக உங்களின் உயிருக்கு உயிராக வாழப்போகும் வாழ்க்கைத்துணை ஒளிந்து இருப்பதால் உங்களுடைய தேடலை விரிவுபடுத்த வேண்டும். 

இங்கே இருக்கும் மொத்தத்தையும் இழந்தாலும் கூட மறுபடியும் இன்னொரு முறை போராட வேண்டும். இது தாமதப்படுத்தி வேலையை செய்யும் பழக்கத்தை விட்டால் மட்டும்தான் சாத்தியப்படும். இல்லையென்றால் மறுமுறை வேலை செய்ய நேரம் போதாது. 

உங்களை யாரேனும் நிரந்தரமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் உலக பணக்காரர் வரிசையில் இடம்பெறவேண்டும், பணம்தான் மனிதர்களோடு நிரந்தர இணைப்பை உருவாக்குகிறது. பணம் தவிர்த்து உருவாகும் இணைப்புகள் தற்காலிகமானவை !

தொடர்ந்து வேலை செய்யும்போதும் மன சோர்வு உருவாகலாம் , உங்களுடைய ஓய்வு நேரத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம், உங்களுடைய ஓய்வு ஒரு புதிய புத்துணர்ச்சி கொடுக்கும். 

வெற்றியடைபவர்கள் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்று கவலைப்படுவதை விடவும் எதிர்காலத்தில் இத்தகைய நிலைக்கு வரவேண்டும் என்று முடிவை எடுத்துவிட்டுத்தான் வேலைகளை செய்துகொண்டு இருப்பார்கள் 

நம்முடைய வாழ்க்கையில் எடுக்கும் சரியான முடிவுகள் ஆரம்பத்தில் தவறான முடிவுகளை போல தோன்றலாம் இது நடக்கும் விஷயம்தான். இருந்தாலும் சரியான முடிவு எடுப்பவர்கள் மட்டுமே ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள். 

No comments:

TAMIL QUOTES - EP.2

இப்போது சராசரி வலிமையில் இருக்கும் நம்முடைய உடலுக்குள்ளேதான் ஒரு கட்டுமஸ்தான பலசாலி ஒளிந்துகொண்டு இருக்கிறான் என்றும் ஆரோக்கியமான பாதுகாப்பா...