விழியிலே விழியிலே இதழிலே இதழிலே
நீ பழகி போன நிமிடம் இன்னும் விலகி போகவில்லை
நீ எழுதி போன கவிதை இன்னும் ஈரம் காயவில்லை
நீ சிந்தி போன வெட்கம் இன்னும் சிதறி போகவில்லை
உயிரிலே உயிரிலே உணர்விலே உணர்விலே
நீ வந்து போன சுவடு இன்னும் மறைந்து போகவில்லை
நீ சிந்தி போன வெட்கம் இன்னும் சிதறி போகவில்லை
நீ வந்து போன சுவடு இன்னும் மறைந்து போகவில்லை
நீ சிந்தி போன வெட்கம் இன்னும் சிதறி போகவில்லை
இளவேனிற் காலம் போலவே
இதய தேசம் இன்று பசுமை ஆனதே
உனக்கு இந்த மாற்றம் தெரியாதா ?
தடுமாறும் குழந்தை போல என்
இளமை இன்று ஏனோ மிரண்டு போனதே
உனக்கு இந்த மாற்றம் புரியாதா ?
உனக்கு இந்த மாற்றம் புரியாதா ?
ஒரு அழகிய கலவரம் மனசுக்குள்ளே
புது அதிசயம் புரிகிறதே !
என் உயிரினில் ஒரு வித சுகம் சுடுகிறதே
ஒரு கவிதை போல உனது நினைவு மலர்கிறதே
மின்சார பறவை போலவே
மின்சார பறவை போலவே
காலை மாலை மனம் உன்னை சுதறுதே
என்னை என்ன செய்தாய் சொல்வாயா ?
மின்காந்த துகள்கள் போலவே
என்னை என்ன செய்தாய் சொல்வாயா ?
மின்காந்த துகள்கள் போலவே
மனம் உன்னை கண்டவுடன் ஒட்டி கொள்ளுதே
என்னை என்னை செய்தாய் சொல்வாயா ?
இது இருபது வருடத்தின் முதல் சுகமே
என் இதயத்தில் வலம் வருமே
இரு மனங்களும் நடக்கின்ற இடைவெளியில்
ஒரு கோடி மின்னல் ஓடி உணர்வில் ஒளிகிறதே
உயிரிலே உயிரிலே உணர்விலே உணர்விலே
நீ வந்து போன சுவடு இன்னும் மறைந்து போகவில்லை
நீ சிந்தி போன வெட்கம் இன்னும் சிதறி போகவில்லை
உயிரிலே உயிரிலே உணர்விலே உணர்விலே
நீ வந்து போன சுவடு இன்னும் மறைந்து போகவில்லை
நீ சிந்தி போன வெட்கம் இன்னும் சிதறி போகவில்லை
No comments:
Post a Comment