இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு தெரிந்த வரையில் சின்ன சின்ன டிரிக்ஸ் மட்டுமே மொத்த கதையாக இருக்கும் HEIST படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். குறைவான லெவல்லில் திருட்டு தொழிலையும் மோசடிகளையும் செய்யும் நிக்கி ஸ்பர்ஜன் அனுபவமுள்ள ஒரு திருட்டு குழுவை நிர்வாகிக்கிறார்.
காதலுக்கு முக்கியம் கொடுக்காத இவர் ஜெஸ் என்ற பெண்ணோடு காதலில் விழுகிறார். கொள்ளையடிப்பதை கற்றுக்கொள்ள பழகும் ஜெஸ் ஒரு கட்டத்தில் நெருக்கமாக காதலிப்பதை அப்போதைக்கு நிக்கி சந்தோஷமாக நினைத்தாலும் அவர்களது உறவு நெருக்கமாக மாறும்போது ஜெஸ்ஸை வருங்காலத்தில் எப்படித்தான் காப்பாற்ற போகிறோம் என்று நினைக்கும்போது நிக்கியின் மனது பயங்கரமாக குழப்பமாகிறது.
கல்யாணம் பண்ணினால் நலமாக வாழ முடியாது என்ற நம்பிக்கையின்மையால் பிரிந்த பின்னர் பல ஆண்டுகளுக்கு பிறகு பாரிஸ் நகரத்தில், மிகப் பெரிய மோட்டார் விளையாட்டு குழு உரிமையாளரை இலக்காகக் கொண்ட கொள்ளை திட்டத்தில் நிக்கி ஈடுபடுகிறார். இங்கே உயிருக்கு ஆபத்தாக திட்டம் இருக்கும்போது ஜெஸ்ஸை மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதால் பிரிந்த இந்த ஜோடி ஒன்று சேர்க்கின்றனரா ? என்பதே படத்தின் கதை !
நிறைய திருப்பங்கள், கொஞ்சம் துரோகம் மற்றும் புத்திசாலித்தனமான நூதன மோசடிகள் மத்தியில் காதல் கைகூடும் என்ற நம்பிக்கை மற்றும் கொள்ளை சதியின் எல்லைகள் என்று கதை நகர்ந்தாலும் இது கிளைமாக்ஸ்ஸில் எதிர்பாராத சுவாரஸ்யக் முடிவுக்கு வழிவகுக்கிறது. இது அடல்ட்ஸ் ஒன்லி ஆடியன்ஸ்கான படம் ! ஒரு முறை பார்க்கலாம் !
1 comment:
climax mokkai
Post a Comment