செவ்வாய், 4 மார்ச், 2025

GENERAL TALKS - உங்களுடைய வாழ்க்கையில் உங்களுடைய முன்னேற்றம் !



நம்முடைய சொந்தங்கள் நம்முடைய நட்புகள் என்று எல்லோருமே நம்மை கைவிட முயற்சிப்பார்கள், உலகமே நமக்கு நரகமாக மாறும். நாம் அவர்களுக்கு நன்மைதான் நினைப்போம் , நன்மையைத்தான் செய்ய முயற்சிப்போம், ஆனால் பதிலுக்கு அவர்கள் தீமையைத்தான் நமக்கு செய்வார்கள்.  இவர்கள் மேலே நம்பிக்கை வைப்போர் நாசமாக போகிறார்கள். இப்படி பண்ணுபவர்கள் உங்களுடைய பெற்றோர் , உங்களுடைய உடன்பிறப்புகள், உங்களுடைய கணவர் , மனைவி , மக்கள் என்று யாராக வேண்டுமென்றாலும் இருக்கலாம். முன்னேற்றத்துக்கு இவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்றால் இவர்களை தலை முழுகி தூக்கி எறிந்தால் மட்டும்தான் உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் , நம்முடைய இயலாமை , நம்முடைய பணம் இல்லாமை , நம்முடைய கவனக்குறைவு என்று எல்லாவற்றையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நம்மை ஒரு பலவீனமான மனிதராகவே வாழ வைப்பதுதான் இவர்களுக்கு இலாபமானதாக இருக்கும். இவர்களுடைய சுயநல போதைக்கு உங்களை ஊறுகாயாக பயன்படுத்திக்கொள்ள நீங்கள் அனுமதிக்க வேண்டாம். இவர்கள் சுத்த மாங்காய் மடையர்களாக இருப்பதால் நம்மையும் அதே போல மாங்காய் மடையராக இருந்து வாழ்க்கையில் தோற்க சொல்வார்கள். இவர்களுக்காக உங்களுடைய வாழ்க்கையில் ஒரு நொடியை செலவு செய்தாலும் உங்களுக்குத்தான் அந்த நொடியின் நீங்கள் செய்த வேலை பாதகமாக வேலையாக போகும். உங்களை நீங்களே கத்தியால் குத்திக்கொள்வதுபோல இரத்தம் போகும் ஒரு வேலை ஆகும். உங்களுடைய நம்பிக்கையை நீங்கள் இழக்க வேண்டாம். தீயோர்கள் இவர்கள் என்பதால் இவர்களுடைய சகவாசம் உங்களுக்கு கேடு. உங்கள் சந்தோஷங்களுக்காக இவர்கள் வருத்தப்படுவார்கள், உங்களுடைய வருத்தங்களுக்காக இவர்கள் குதூகலம் அடைவார்கள். இவர்கள் மிகவும் கசப்பான மண்டை கஷாயங்கள் !

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...