இந்த படத்துடைய கதை : ஊட்டியில் காவலாளி சிங்காரத்தின் மகன் ராஜா இருக்கிறார். அவர், செல்வம் என்ற பணக்காரரின் மகள் ராதாவுடன் பள்ளி நாட்களிலிருந்தே நெருங்கிய நண்பராக இருக்கிறார். ராதா அமெரிக்கா செல்லும் முன், தனது செல்ல நாயின் கல்லறையை தினமும் பார்ப்பேன் என்று ராஜா வாக்குறுதி அளித்தார். பத்து ஆண்டுகள் கழித்து, வேலை இல்லாமல் வாழ்ந்தாலும், அந்த நினைவுகளை மனதில் கொண்டே இருக்கிறார். ராதா வெளிநாட்டிலிருந்து நண்பர்களுடன் திரும்பியபோது, பழைய பாசத்தை மறந்து, ராஜாவை சாதாரண கூலிப்பணியாளராகவே நடத்துகிறார். ராஜா, ராதாவை மீண்டும் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார். ஆனால் ராதா அவரை புறக்கணிக்கிறார். இதற்கிடையில், ராஜா தனது அன்பை வெளிப்படுத்த, பல சோதனைகளையும் தாங்குகிறார். இறுதியில், அசோக்கின் தவறான நடத்தை வெளிப்படுகிறது. ராதா, ராஜாவின் உண்மையான அன்பை உணர்ந்து, அவரைத் திருமணம் செய்ய விரும்புகிறார். தந்தையின் வியாபார சிக்கல்களால், ராதா அசோக்குடன் திருமணம் செய்ய வேண்டிய நிலை உருவாகினாலும், உண்மையான அன்பும், பத்து ஆண்டுகள் காத்திருந்த ராஜாவின் நம்பிக்கையும் வெற்றி பெறுகிறது; ராதா மீண்டும் ராஜாவுடன் இணைகிறார் - இந்த படத்தின் பட்ஜெட் மற்றும் ப்ரோடக்ஷன் ஸ்டைல் மிகவும் நேர்த்தியாக இருப்பதே இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது ! பாக்யராஜ் வெகுவாக இந்த படத்தின் கதையில் வேலை செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்களால் படம் ஒரு சிறப்பான கதையமைப்பாக இருக்கிறது - இன்று வரைக்கும் கமர்சியல் படங்களின் முக்கியமான ஒரு ப்ளட் என்று இருக்கும் ஏழை ஹீரோ பணக்கார ஹீரோயின் என்ற சினிமா திரைக்கதை ஸ்டைல்லில் நல்ல வெளியீடாக பெஞ்ச் மார்க் ஒர்க் ஆக இருக்கிறது !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக