Monday, February 5, 2024

GENERAL TALKS - வேண்டுமென்றே கொடுக்கப்படும் அறியாமை !

 



பணம் இருப்பவர்களின் வாழ்க்கை சுட சுட வெற்றிகளை நிறைந்த வாழ்க்கையாக இருக்கும் ஆனால் பணம் இல்லாத நம்முடைய வாழ்க்கை கெட்டுப்போன பழைய சாதத்தில் சலித்து போன சாம்பாரை பிசைந்து சாப்பிடுவதாக இருக்கும். மிட் லைஃப் கிரிஸிஸ் என்று வயதான வாழ்க்கையின் மரண பயத்தை கொடுக்கும் மனநிலையும் நமக்குள்ளே நன்றாக வளர்ந்துவிடும். இது எல்லாவற்றுக்குமே அடிப்படையான காரணம் என்னவென்று கேட்டால் யாருமே நமக்கு சப்போர்ட் பண்ணவிலையே என்றும் மற்றவர்களை போல எனக்கும் சப்போர்ட் கிடைத்து இருந்தால் நான் வெற்றி அடைந்து இருப்பேனே என்ற ஏக்கமான ஒரு மனநிலையில் வாழ்க்கை டிஸெப்பாய்ண்ட்மென்ட்டாக இருக்கிறது என்பது ஒரு விஷயம். இன்னொரு விஷயம் நாம் மிகப்பெரிய அறியாமையில் மூழ்கியிருக்கும் ஒரு நிலை. நாம் ஒரு பெரிய கடலின் ஆழத்தில் கடல்நீரில் ஆழம் அதிகமாக அதிகமாக நேரடியாக அழுத்தம் அதிகமாகும் நிலையில் புதைந்து கிடப்பது போல புதைந்து கிடக்க வேண்டும். இந்த அறியாமையின் ஆழத்தில் இருந்து யாராவது நம்மை காப்பாற்ற வேண்டும் இல்லையென்றால் நாமே கஷ்டப்பட்டு மேலே வரவேண்டும். யாராவது நம்மை இத்தகைய போராட்டத்தால் கிடைக்கும் அறியாமையில் இருந்தும் பணம் காசு இல்லாததால் உருவாகும் மன சோர்வில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கின்றோம் ஆனால் நம்மை காப்பாற்ற அப்படி ஒரு சக்திவாய்ந்த மனிதர் வருவது மிகவும் அரிதானது. இதனால் நாமே நம்முடைய பலத்தை அதிகப்படுத்தி நம்முடைய அறியாமை இருளில் இருந்து வெளியே வந்துதான் ஆகவேண்டும். இன்னொரு வகையில் நம்மை காப்பாற்றும் மனிதர்களுக்காக நாம் காத்திருக்கலாம் ஆனால் என்னதான் போராடினாலும் அதிர்ஷ்டம் மாதிரியான ஒரு கற்பனையான விஷயம் நமக்கு ஆபத்தில் இருக்கும் நேரத்தில் உதவி பண்ணி நம்மை அறியாமையில் இருந்து காப்பாற்ற இன்னொரு மனிதரால் உதவியை அனுப்பும் வரை காத்திருக்கலாம் என்று சொல்வது முட்டாள்தனமானது. நம்முடைய உள்ளூர் அரசியல் போல நமக்கு நாமே என்று வாழ்ந்துகொண்டு இருப்பதுதான் நடைமுறை வாழ்க்கைக்கு சரியானதாக இருக்கும். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...