இந்த தென்மேற்கு பருவ காற்று என்ற திரைப்படம் ஒரு உணர்ச்சி பூர்வமான கிராமத்து தமிழ் திரைப்படம். இது குடும்பத்தில் தாய்மையின் அன்பு, கிராமத்தில் வறுமை, பகையினால் உருவாகும் விதி ஆகியவற்றை மையமாகக் கொண்டது.
கதை தேனியில் ஒரு சின்ன கிராமத்தில் நடக்கிறது. அங்கு ஆடுகளை மேய்க்கும் சுதந்திரமான நண்பர்களோடு சுற்றும் இளைஞராக முருகையன் வாழ்கிறார்.
அவரது தாய் வீராயி கடினமாக உழைத்து கணவர் இல்லாமல் வறுமையிலும், கோபமாக கண்டிப்பாக தன் மகனை அன்போடு வளர்த்து, அவனுக்காக பல தியாகங்களைச் செய்கிறார்.
ஒரு இரவு ஆடுகளைத் திருட வந்த கும்பலை எதிர்கொள்ளும் முருகையன், அவர்களில் ஒருவரை பிடிக்கிறார். ஆனால் அது பவுன்மொழி என்ற இளம் பெண் என்பதை அறிகிறார்.
இந்தச் சந்திப்பு கதாநாயகன் மறுமுறை பார்த்து பேசி பின்னால் அழகான காதலாக மாறுகிறது. ஆனால், அவர்களின் உறவு குடும்பங்களாலும், கிராம சமூகத்தாலும் எதிர்க்கப்படுகிறது.
காதல், தாய்மையின் வலிமை, சமூகப் பிரிவுகள், விதியின் தவிர்க்க முடியாத தன்மை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் படம் உணர்ச்சி பூர்வமாக நகர்கிறது - குறைந்த பொருள் செலவில் சிறப்பாக இயக்கப்பட்ட இந்த படம் இன்றளவும் பேசும் பொருளாக நமது வரலாறில் நிலைக்கிறது.
1 கருத்து:
எமேஷனலான ஸ்டோரி இந்த படம், கடைசி விவசாயி படம் பாத்தாச்சா ப்ரோ ? தயவுசெஞ்சு பாருங்க.
கருத்துரையிடுக