வியாழன், 5 அக்டோபர், 2023

CINEMA TALKS - POKEMON : DETECTIVE PICKACHU - TAMIL REVIEW - திரை விமர்சனம் 😍

POKEMON - DETECTIVE PICKACHU இந்த திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளிவந்தது.  இந்த திரைப்படத்தின் கதை - இந்த திரைப்படம் போகிமொன் யுனிவர்ஸ் இல் அமைந்துள்ளது. உங்களுக்கு எல்லாம் போகிமொன் யுனிவர்ஸ் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும். போகிமொன் யுனிவர்ஸ்ல் மனிதர்கள் போகிமொன் என்ற மாயாஜால சக்திகளை கொண்ட தனித்தனியான ஜீவராசிகள் வாழும் உலகத்தில் வசிக்கிறார்கள். மனிதர்கள் போகிமொன்க்கு போதுமான அளவிற்கு பயற்சி கொடுத்து போகிமொன்கள் மாயாஜால சக்திகள் பயன்படுத்தி கொள்ளும் சண்டை போட்டிகளில் கலந்துகொள்ளலாம். இப்போது கதைக்களத்தில் வருவோம் - TIM GOODMAN (டிம் குட்மென்) அவருடைய தந்தை ஹாரியின் மறைவுக்கு பின்னால் ரைம் சிட்டி என்ற போகிமொன்களின் மோதல் போட்டிகள் தடை செய்யப்பட்ட ஒரு பாதுகாப்பான நகரத்தில் கொஞ்சம் நாட்கள் தங்க நினைக்கிறார். இப்போது ஹேரி யின் வளர்ப்பு போகிமொன் PIKACHU (பிகாச்சுவை) சந்திக்கிறார். ஆனால் பிகாசு பேசும் அனைத்து வார்த்தைகளும் குட் மெனால் புரிந்துகொள்ள முடிகிறது. வேறு யாருக்கும் அந்த பிகாசு பேசுவது புரிவதில்லை. பிகாச்சு உதவியுடன் அவருடைய தந்தை வேலை செய்த நிறுவனத்தை அடைந்து அங்கே MEWTWO என்ற பேசும் சக்திகளை உடைய அதிசக்திவாய்ந்த போகிமொன் கொடுத்த தகவல்களைக் கொண்டு அவனுடைய தந்தை இன்னமும் எங்கேயோ உயிரோடு இருப்பதை அறிந்துகொள்ளும் TIM அவருடைய குழுவினர் மற்றும் PIKACHU இன் SUPPORT உடன் அவருடைய தந்தையை எப்படி காப்பாற்றினார் ? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை. 


பொகேமொன் யுனிவர்ஸ் சார்ந்த முதல் லைஃப் ஆக்சன் திரைப்படம் என்றாலும் இந்த படத்தின் கதைக்களம் போகிமொன் என்ற அனிமேஷன் தொடரில் இருப்பது போல அமைந்துள்ளது. இந்த திரைப்படம் சிறந்த வசூலை குவித்தது. இந்த படம் POKEMON தொடரின் ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு ஸ்பெஷல்லான படமாக இருக்கலாம். ஆனால் மொத்தமாக அனைத்து ஆடியன்ஸ்க்கும் புரிய வாய்ப்பு இல்லை. ASH , BROCK , MISTY மற்றும் TEAM ROCKET -ன் JESSY மற்றும் JAMES இல்லை என்றாலும் படம் ஒரு புதுவகை ஸ்டோரிலைன்னுடன் ப்ரெசெண்ட் பண்ணப்பட்டு உள்ளது. பொதுவாக POKEMON படங்களை LIVE ACTION -ல் கொடுப்பது சாத்தியமே இல்லை. காரணம் என்னவென்றால் POKEMON ஒரு பெரிய யுனிவெர்ஸ் !! இன்றைக்கு வரைக்கும் RYAN REYNOLDS தான் PIKACHU வுக்கு VOICE கொடுத்து இருக்கிறார் என்பது பெரிய சர்ப்ரைஸ். இந்த மாதிரி படங்கள்தான் பொதுவாக VIDEOGAME கதைகள் அதிகமாக வசூல் சாதனை கொடுக்கப்போவது இல்லை என்று ஒரு பொதுவான கருத்தை உடைக்கிறது. போகெமோன்களை  அனிமேஷன் டிசைன்னில் இருந்து லைவ் ஆக்ஷன் உயிரினங்களாக கொண்டு வருவதில் விஷுவல் VFX  டிசைன்னர்ஸ் கண்டிப்பாக மெனக்கெட்டு இருக்கிறார்கள். ஆனால் ஃபேன்ஸ் எதிர்பார்ப்பை ஒரு அளவுக்கு நன்றாகவே இந்த WORLDBUILDING - ல் கொடுத்துள்ளனர். கிளைமாக்ஸ்ஸில் லைவ் ஆக்ஷன் GUEST  APPEARANCE கொடுத்து நமது RYAN REYNOLDS சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இது ஒரு STANDALONE படம்தான் என்றாலும் அடுத்த பாகத்தை கொடுத்தால் நன்றாக இருக்கும். இந்த படம் DRAGON BALL - EVOLUTION போல சோதப்பாமல் படத்தின் SOURCE க்கு ஒரு அளவுக்கு கௌரவத்தை தேடிக்கொடுத்து இருக்கிறது. அதுவரைக்கும் சந்தோஷம் !!

சனி, 30 செப்டம்பர், 2023

CINE TALKS - இது ஒரு DC பிரச்சனை !! - திரை விமர்சனம் !!

இன்னைக்கு ஒரு காம்பெரிஸன்க்கு எடுத்து பார்த்துகிட்டால் கூட எங்கேயோ கடனில் இருந்த மார்வேல் ஸ்டுடியோஸ் இன்னைக்கு பாக்ஸ் ஆபீஸ்ஸில் நம்பர் ஒன் நிலையில் இருக்கிறது, ஆனால் ஆரம்பத்தில் இருந்து மார்வேல்க்கு நேர் எதிர் போட்டியாக படங்களை கொடுக்கும் டிஸி பார்க்காத பிரச்சனைகளை இல்லை. அதைத்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். 

டி  ஸி எக்ஸ்டென்டெட் யுனிவெர்ஸ் !! அதாவது DCEU - அதிகாரப்பூர்வமாக இந்த பெயர் இல்லை என்றாலும் குறிப்பாக DC படங்கள் என்று சொன்னாலே போதுமானது. இந்த படங்கள் DC யின் வெப் சீரிஸ்ஸ்ஸான FLASH , AIRROW , GOTHAM , SUPERGIRL , மேலும் DC க்கே உரித்தான சிறப்பான பிளஸ் பாயிண்ட்டான அனிமேஷன் படங்களின் யுனிவெர்ஸ் இவைகளோடு இணைக்கப்பட்ட ஒரு MULTIVERSE ல் நடக்கிறது. ஆனால் நடப்பு ஹிட் padangal JOKER மற்றும் THE BATMAN தனியான MULTIVERSE அதனால இந்த படங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மேலும் CHRISTOPHER NOLAN இன் THE DARK KNIGHT படங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். 

இப்போ இந்த படங்கள் பற்றி பார்க்கலாம் . மொத்தம் 15 படங்கள் வெளிவந்துள்ளது. 

1. Man of Steel 

2. Batman v. Superman : Dawn of Justice

3. Suicide Squad

4. Wonder Woman

5. Justice League 

6. Zack Snyder Cut of JL

7. Aquaman

8. Shazam

9. Birds of Prey

10. Wonder Woman 1984

11. The Suicide Squad

12. Black Adam

13. Shazam Fury of The Gods

14. The Flash

15. Blue Beetle

1. MAN OF STEEL - இந்த படம் வெளிவந்த உடனே பாராட்டப்பட்ட ஒரே விஷயம் சூப்பர் மென் கதாப்பத்திரத்தில் இருக்கும் ஒரு உண்மைத்தன்மை , மற்ற படங்களை போல சூப்பர் மேன்னை வில்லன்கள் எதிர்ப்பததாக இந்த படத்தின் கதை இல்லாமல் நிஜமாகவே ஒரு ஏலியன் பூமியில் வாழ்ந்தால் பிரச்சனை எனும்போது என்ன நடக்குமோ அதுதான் கதையாக இருந்தது. மற்ற படங்களில் காட்டப்பட்ட அதே கதையையே மறுமுறை சொல்ல வேண்டாம் என்று புதிதாக எடுத்தது பிளஸ் பாயிண்ட். 

2.BATMAN V. SUPERMAN - பெரிய எதிர்பார்ப்புகளில் வெளிவந்த இந்த படம் DC யின் இரண்டு ICONIC காதப்பாத்திரங்களின் மோதல் , ஆனால் கொஞ்சம் லாஜீக் சொதப்பல் இதுதான் DC க்கு பெரிய பேக்லாஷ். குறிப்பாக ஃபைட் ஸீன்களில் ஃபோகஸ் பண்ணி எடுக்கும் மார்வேல் அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் களம் இறக்கி CAPTAIN AMERICA CIVIL WAR வெளியிட்டது. மேலும் இந்த படத்தை நேரடியாக மோதவே SPIDER MAN ஐயும்  MCU வுக்குள் கொண்டுவந்தது. 

3. SUICIDE SQUAD - வில் ஸ்மித் , மார்க்கட் ராபி , ஜெராட் லிடோ என்று டாப் லெவல் ஸ்டார்களை களம் இறக்கி போன படத்தின் மார்க்கேட்டை பிடிக்க வெளிவந்த இந்த படம் சக்ஸஸ் மேல சக்ஸஸ் , ஆனால் வில் ஸ்மித் மறுபடியும் அவருடைய இந்த ரோல் பிளே பண்ணவில்லை. இந்த படம் கேஷுவல் ரிலீஸ் என்றாலும் நல்ல வெளியீடு கொடுத்தது. 

4. WONDER WOMAN - டிஸியின் மாஸ்டர் பீஸ் என்று இந்த படத்தை சொல்வார்கள் ஆனால் கதை என்ற அடிப்படையில் கொஞ்சம் ஸ்பெஷல் என்றாலும் அடிப்படியான அதே சூப்பர் ஹீரோ ஃபார்முலாதான். கொஞ்சம் பேமினிஸம் கலந்து படம் பாக்ஸ் ஆபீஸ் கலக்கல் பெர்ஃபார்மன்ஸ். 

5, JUSTICE LEAGUE - ஸ்டுடியோவின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைத்த படம் இந்த படம். ஸ்கிரிப்ட் மற்றும் எக்ஸிக்யூஷன் கொஞ்சம் கூட சரியில்லை. விமர்சனங்களை குறைக்க WB அவர்களின் படங்களின் ஒரு ஸ்டில்லை பயன்படுத்தினால் கூட COPYRIGHT ஸ்டிரைக் பண்ணி சேனல்லை தூக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த படம் ZACH SNYDER இடம் இருந்தாலும் அவருடைய வாழ்க்கையில் நடந்த சோகத்தால் ப்ரொடக்ஷன் விட்டு வெளியேற அவெஞ்சர்ஸ் படங்களின் இயக்குனர் JOSS WHEDON கிட்ட கொடுத்தபோது அவ்வளவாக படத்தின் நிஜமான பாயிண்ட்டை ஃபேன்ஸ்க்கு கொடுக்க முடியவில்லை. 

6. ZACH SNYDERS JUSTICE LEAGUE - ஃபேன்ஸ்க்கு பெரிய ஹாப்பியான மோமென்ட் , இந்த படம் நிஜமாக ZACH SNYDER கொடுக்க நினைத்த FOLLOW UP
ஆக இருந்தது. மேற்கொண்டு முக்கியமான 6 சூப்பர் ஹீரோக்களுக்கும் தனித்தனி ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்து படத்துக்கு பக்காவான டேவலப்மெண்ட் கொடுக்கப்பட்டது. குறிப்பாக FLASH டைம் டிராவல் ஸீன் இந்த படத்தில் வேற லெவல். 

7. AQUAMAN - ஜேஸன் மேமொவா - பார்க்க WWE யின் ஃபைட்டர் போல இருந்தாலும் அவருடைய AQUAMAN காதப்பாத்திரத்துக்கு பக்காவான பேர்பார்மென்ஸ் கொடுத்து இருப்பார். மேலும் ஆர்த்தர் லவ்ஸ் மேரா என்று DC யின்  ஃபர்ஸ்ட் லவ் ஷிப் இந்த படத்தில்தான் ஆரம்பிக்கும் மற்றபடி ஸ்டோரி ஆர்க் மற்றும் விஷுவல்ஸ் எந்த வகையில் ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வெளிவந்த பக்காவான என்டர்டென்மெண்ட் இந்த படம். இன்னைக்கு தேதி வரைக்கும் DC யில் அதிகமாக கலெக்ஷன் பண்ணுண படம் இதுதான். 

8. SHAZAM - DC யின் டோன்னை தரை லோக்கல் வரைக்கும் இறக்கி ஹியூமர்ராக சேர்த்து சேர்த்து ஃபேமிலியோடு பார்க்கும் என்டர்டென்மெண்ட் படமாக வெளிவந்து SHAZAM . இந்த படத்தின் கதாப்பாத்திரங்கள் மிகவும் சிறப்பாக படத்தை நடித்து கொடுத்து இருப்பார்கள். DC யின் வரலாற்றில் ஸீரியஸான படங்களை புறக்கணித்துவிட்டு நார்மல் லெவல் படங்களின் சாப்டர்ரை ஸ்டார்ட் பண்ணிய படம் இந்த ஷசாம் . 

9. BIRDS OF PREY - நான் பார்க்காத படங்களை பற்றி கருத்துக்களை சொல்ல முடியாது. இந்த படம் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பார்த்தால் இந்த வரிகளை அப்டேட் பண்ணுகிறேன். 

10. WONDER WOMAN 1984 - முதல் படத்தின் நல்ல பேரை அடுத்த படம் சோதப்பிவிடும் என்பதற்கு நிஜ வாழ்க்கை உதாரணம் இந்த படம் , ஒரு கடமைக்கு யோசித்துக்கொள்ளுங்களேன் மாயாஜாலத்தால் எல்லாமே மாறிவிடும் என்றால் அப்புறம் எதுக்கு சூப்பர் ஹீரோ மற்றும் வில்லன்கள். ஆனால் இந்த படத்தின் கிரேயடிவிட்டியை பாராட்டியே ஆகவேண்டும். ஒரு சில காட்சிகள் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே தெரியாது என்ற வகையில் இருந்தாலும் படம் பார்க்க டீசண்ட்டாகத்தான் இருந்தது. 

11. THE SUICIDE SQUAD - மறுபடியும் ஃபேமஸ்ஸான ஹீரோக்களுடன் களம் இறங்கிய இந்த சூப்பர் ஹீரோ படம் அடிப்படியில் ரொம்ப நல்ல படம் இருந்தாலும் கரோனா வைரஸ் பண்ணிய பாவம் இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் எடுக்கவில்லை. கண்டிப்பாக ஹிட் ஆகியிருக்க வேண்டிய படம்தான். 

12. BLACK ADAM - இங்கே ஷசாம் படம் வெற்றிக்கு பின்னால் DC யின் ஒரு புது முயற்சி. குறிப்பாக ஜஸ்டிஸ் சொசைட்டி என்ற சூப்பர் ஹீரோ அமைப்பை கதைக்குள் கொண்டுவந்த விதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. 

13. 



வெள்ளி, 29 செப்டம்பர், 2023

CINEMA TALKS - NARUTO SHIPPUDEN - TAMIL DUBBING - PROBLEM !!

இப்போது சமீபத்திய பிரச்சனை என்னவென்றால் மற்ற கதைக்களம் போல இல்லாமல் NARUTO மற்றும் NARUTO SHIPPUDEN தொடர்ந்து 720 எபிசோட்களாக NARUTO வின் ஒரே ஒரு நேர்க்கோடான ஸ்டோரிலைன்னை மட்டுமே ஃபாலோ பண்ணிக்கொண்டு இருந்தது. இப்போது இந்த தொடரை ஃப்யுர் ஜப்பான்னிஸ் மொழியில் பார்த்த அந்த கால ரசிகர்கள் இந்த புதிய தமிழ் மற்றும் ஆங்கில மொழி டப்பிங்களுக்கு வெறுப்பு போஸ்ட் பண்ணிக்கொண்டு வருகின்றனர். 

அதாவது மொத்தமாக 720 எபிசோட்களாக ஒரே கதையாக பார்த்து ஜப்பானில் சொந்த மொழியில் பார்த்து பழக்கப்பட்டதால் மறுபடியும் ஆங்கிலத்தில் பார்த்து ஆங்கில வெர்ஷன் நன்றாக இருக்கிறது என்று சொல்வதை இந்த சீனியர் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் இந்த பிரச்சனைக்கான காரணம். உதாரணத்துக்கு பிரேமம் , கீதா கோவிந்தம் , ஓம் சாந்தி ஓஷானா போன்ற படங்களை தமிழ் டப்பிங்கில் பார்ப்பதும் இல்லையென்றால் சொந்த மொழியாக மலையாளத்தில் பார்ப்பதும் அவரவர் விருப்பத்துக்கு உட்பட்டது என்றால் இந்த மொழியில்தான் பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. 

ஜப்பானிய , கொரியா , மேல் நாட்டு ஆங்கில மொழிகளில் நேரடியாக அல்லது சப்டைட்டில் சேர்த்து பார்க்கும்போது அந்த கதாப்பத்திரங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு பார்க்க முடியும் என்பது  ஒரு பக்க கருத்து, இருந்தாலும் எல்லோராலும் எல்லா மொழியையும் கற்றுக்கொள்ள முடியாது, உங்களுக்கு BTS இசைக்குழு பிடிக்கிறது, உங்களால் கொரியன்னில் பேச முடியும் என்றால் உங்களுக்கு நிஜ மொழியில் அவர்கள் சொல்லும் வசனங்கள் புரியலாம் ஆனால் உங்களை போலவே எல்லோருமே இருக்க மாட்டார்கள். ஆகவே சீனியர் ரசிகர்கள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. 

குறிப்பாக மூன்று வருடங்களுக்கு முன்னால் அவஞ்சர்ஸ் என்ட் கேம் படத்தில் விஜய் சேதுபதி வாய்ஸ்கொடுக்கும்போதே உண்மையான டப்பிங் குழுவை கொண்டுவருவதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் டப்பிங்கில் பார்க்கவே நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். NARUTO SHIPPUDEN பொறுத்த வரைக்கும் எடிட்டிங் பண்ண வேண்டிய ஃபேன் சர்வீஸ் விஷயங்கள் நிறைய இருக்கின்றனர் ஆனால் நேரடியான ஸ்டோரிலைன்னில் இந்த ஃபேன் சர்வீஸ் விஷயங்கள் இடம்பெறவில்லை. இந்த ஃபில்லர் எபிசோட்கள் இல்லை என்றாலும் நேரான கதையை உங்களால் பார்க்க முடியும். 

டெலிவிஷன் டெலிகேஸ்ட்டில் இந்த தமிழ் டப்பிங் கொண்டுவருவது கடினம் ஆனால் OTT யில் தமிழ் டப்பிங் வருவதற்க்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. NARUTO SHIPPUDEN ஒரு மெச்சூரிட்டி நிறைந்த நெடுந்தொடர் என்றும் இந்த தொடர் வழக்கமான ஜாக்கி சான் மற்றும் டோராவின் பயணங்கள் போல இருக்காது என்றும் ஃபேன்ஸ் புரிந்துகொள்ள வேண்டும்.

வியாழன், 28 செப்டம்பர், 2023

CINEMA TALKS - ENCHANTED - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 பொதுவாக டிஸ்னி படங்களில் பெரும்பாலான படங்கள் ஹிட் ஆக ஒரே காரணம் ஒரே ஒரு விஷயமாகத்தான் உள்ளது , அதுதான் ஃபேர்ரி டேல் இளவரசி - இந்த வகையில் நான் பார்த்த இன்னொரு வகையான ஒரு நல்ல காமெடி படம் தி என்ச்சான்டெட் - இந்த படத்துடைய கதையே மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது ஒரு அனிமேஷன் ஃபேர்ரி டேல் இளவரசி அவளுடைய ஃபேர்ரி டேல் கதையின் ஒரு பகுதியில் ஒரு போர்டல் உருவானதால் இன்றைய மாடர்ன் உலகத்தில் லைவ் ஆக்ஷன் உலகத்துக்குள் வந்துவிடுகிறாள். நிறைய இடங்களுக்கு தனியாகவே செல்லும் இந்த இளவரசி ஒரு இளவரசனை கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சி பண்ணவே இப்போது மகளுடன் தனியே வசிக்கும் குடும்ப நல விவாகரத்து லாயரான ராபர்ட் வீட்டில் தங்குகிறாள், இந்த போர்டல் மூலமாகவே இளவரசியை காப்பாற்ற வரும் இளவரசன் என்ன பண்ணுகிறான், வில்லனாக இருக்கும் சூனியக்காரியின் சதித்திட்டங்கள் என்ன என்ன என்று வழக்கமான டிஸ்னி கதைகளில் தொடர்ந்து வரும் கான்செப்ட்களை ஒரு ஆஃப்பிஷியல் டிஸ்னி படத்திலேயே கலாய்த்து இருப்பதுதான் ஸ்வரஸ்யமாக இருக்கிறது. 

இந்த படத்தின் ஒரு ஒரு காட்சியிலும் பிரைமரியாக கதாநாயகி யேமி ஆடம்ஸ் ஒரு சீனியர் ஆக்டர்ராக அவருடைய பெஸ்ட் ஆஃப் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்துள்ளார். ஒரு இளவரசி காதப்பாத்திரமாக நன்றாகவே அவருடைய காதாப்பத்திரத்தை தாங்கியுள்ளார். மியூஸ்ஸிக்கல் படம் , கொஞ்சம் ஃபேமினிஸம் , அழகான காஸ்ட்யூம் டிசைன் என்று மற்ற பிரின்சஸ் படங்களின் எந்த அம்சங்களும் இந்த படத்துக்கு விட்டுப்போகவில்லை. அதுவே இந்த படத்துக்கு மிகவும் பிளஸ் பாயிண்ட்தான்.  மேலும் சொல்லப்போனால் காமெடியை ஃபோகஸ் பண்ணிய திரைக்கதை இந்த வகையில் பாக்ஸ் ஆபீஸ் கொடுப்பது கடினம் [இன்ஸ்பெக்டர் கேட்ஜெட் படத்தை மறக்க வேண்டாம்] அந்த வகையில் புதிதான முயற்சியை கொடுத்தாலும் இந்த படம் வெற்றி அடைந்துள்ளது பாராட்டுக்கு உரியது. கண்டிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸ்க்காக எடுக்கப்பட்ட ஒரு பெரிய பட்ஜெட் படம்தான் இந்த என்சான்டட். இந்த படத்தின் அடுத்த பாகம் டிஸ்ஸென்சாண்டட் 2022  இல் வெளிவந்தது. இந்த படம் பார்த்தால் என்னுடைய கருத்துக்களை போஸ்ட் பண்ணுகிறேன். 

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...