வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
CORRECTIVE MEASURES - இந்த படத்துடைய கதை, உலகத்தில் நடந்த ஒரு பேரழிவை தொடர்ந்து நிறைய பேருக்கு ரேடியேஷன் காரணமாக செல்கள் மியூடெஷன் அடைந்தது சூப்பர் பவர்கள் கிடைக்கிறது, ஆனால் அரசாங்கத்தால் சக்திகள் கட்டுப்படுத்தப்பட்டு அனைவரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர், இவர்களால் வெளியே செல்ல முடியுமா ? வெளியே செல்ல இவர்களின் திட்டம் என்ன என்பதுதான் ஒரு வரிக்கதை , குறைவான பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம். இந்த படத்தில் நடிப்பவர்கள் எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர், கிளைமாக்ஸ் காட்சி பிரமாதம். ஒரு வரி கதையை கூட ஒரு நல்ல படமாக மாற்ற முடியும் என்ற கருத்துக்கு இந்த படம் ஒரு நல்ல எக்ஸாம்பிள். ஒரு பட்ஜெட் படமாக சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களை எடுத்தால் என்னென்ன குறைகள் இருக்குமோ இந்த படத்திலும் அதே குறைகள் இருக்கதான் செய்கிறது. இருந்தாலும் கதைக்கு கொடுத்த டேடிகேஷன் படத்துக்கு நல்ல சப்போர்ட்டாக இருக்கிறது.
"இந்த கதை ஒரு சுவாரஸ்யமான கதை , ஒரு ஆராய்ச்சி கூடத்தில் ஒரு மிகப்பெரிய கூண்டுக்குள் ஐந்து குரங்குகள் வளர்க்கப்பட்டது, அந்த ஐந்து குரங்குகளில் ஒரு குரங்கு மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு எப்போது அந்த குரங்கு கூண்டின் மேல் கம்பிகளை பிடித்து ஏறி வந்தாலும் அந்த குரங்குக்கு பரிசாக சுவையான பழங்கள் கொடுக்கப்பட்டது, ஆனால் மற்ற நான்கு குரங்குகள் கூண்டின் மேலே வந்தால் எந்த பழங்களும் கொடுக்கப்படுவதே இல்லை !, மற்ற குரங்குகள் அந்த குரங்கை பார்த்து பொறாமைப்பட்டன. அதனால் அந்த குரங்கு எப்போது கூண்டின் கம்பிகளை தொட்டு மேலே செல்ல முயற்சி செய்தாலும் மற்ற குரங்குகள் அந்த தேர்ந்தேடுக்கப்பட்ட குரங்கை சண்டை போட்டு அடித்து தாக்கின. இதனால் பயந்து போன அந்த குரங்கு கூண்டின் கம்பியை தொடுவதையே விட்டுவிட்டது, சுவையான பழங்கள் அந்த குரங்குக்கு அதன் பின்னால் கிடைக்கவே இல்லை. இந்த சம்பவங்களுக்கு பின்னால் கூண்டின் கம்பிகளை தொட்டாலே போதும் மற்ற குரங்குகள் சேர்ந்து அந்த குரங்கை அடிக்க ஆரம்பித்து விட்டன. ஆனால் கதை இங்கே முடியவில்லை, காலப்போக்கில் எந்த குரங்கு கூண்டின் கம்பிகளை தொட்டாலும் மற்ற குரங்குகள் சேர்ந்து அந்த குரங்கை தாக்க ஆரம்பித்தன. இது இந்த குரங்குகளுக்கு ஒரு கலாச்சார நிபந்தனையாக மாறிவிட்டது, இன்னும் புதிதாக ஐந்து குரங்குகள் அந்த கூண்டுக்குள் விடப்பட்டது. ஆனால் அவைகள் எல்லாம் இந்த செயல்முறையை பார்த்து கூண்டின் கம்பிகளை பிடித்து மேலே செல்ல முயற்சித்தாலே அதுவே பெரிய தவறு என்று கற்றுக்கொண்டு முடிவு செய்து விட்டன ! அவைகளும் மற்ற குரங்குகளை போலவே கூண்டின் கம்பியை தொட்டால் கொலை குற்றம் செய்ததை போல தாக்க ஆரம்பித்து விட்டன, இதுபோலதான் வாழ்க்கையும் , வாழ்க்கையில் யாராவது முன்னேற நினைத்தாலே போதும் அவர்கள் என்னமோ ஒரு மிகப்பெரிய தவறை செய்தது போல மற்ற எல்லோரும் சேர்ந்து தண்டனைகளை கொடுக்க பார்க்கிறார்கள், இவர்கள் தானும் முன்னேற மாட்டார்கள் அடுத்தவர்களையும் முன்னேற விட மாட்டார்கள், இங்கே குரங்குகளின் பொறாமை கூண்டுக்கு மேலே வருவது என்பதே ஒரு கொடிய குற்றம் என்றும் , எப்போதும் தரையில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றும் , மேலே போகவே கூடாது என்றும் தேவையற்ற கட்டுப்பாடுகளை உருவாக்கியதை போல மனிதர்களும் யாராவது முன்னேறுவதை பார்த்தால் அவர்களை கேலி செய்யவும் தாக்கவும் ஆரம்பித்து விடுகிறோம், பரவைக்கு கால்கள் இருக்கலாம், கடைசி வரையில் பறக்காமல் தரையில் இருந்து கிடைக்கும் தீனிகளை கொண்டே அந்த பறவை உயிர் வாழ்ந்து விடலாம் , ஆனால் இறக்கைகள் இருப்பது பறந்து வானம் செல்லத்தானே ? அவைகளை தரையில் மட்டுமே வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று சொல்வது எந்த வகையில் சரியான செயல் ?" - இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் இணைப்பில் இருக்கும் சிறப்பு நெட்பிலிக்ஸ் நகைச்சுவை காணொளியை பார்க்கவும். TAMILNSA.BLOGSPOT.COM - NICE TAMIL BLOG - SIMPLE TALKS - TAG : TAMIL DEMOTIVATIONAL STORY XD.
வார் டாக்ஸ் - இந்த படத்துடைய கதை - தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற படிப்பு முடிந்ததும் மொத்த பணத்தையும் செலவு செய்து சாஃப்ட் போர்வைகள் விற்பனை செய்யும் நம்ம கதாநாயகன் , இவருடைய வாழ்க்கையில் போர் ஆயுதங்களை வாங்கல் விற்றல் செய்து அதிக லாபம் பார்க்கும் ஒரு நண்பன் வந்தால் என்ன நடக்கும் ? கொஞ்சம் உண்மை சம்பவங்களை மையமாக கொண்ட கதையாக இருந்தாலும் இருவரின் நடிப்பு மிரட்டல் செய்கிறது , "இந்த இடம் பேசிக்கலி காமிக் கான் தான், ஆனால் ஆயுதங்களுக்கு !" என்று சொல்லும் காட்சிகள் வேறு லெவல், அல்பேனியாவில் வியாபாரம் பேசும் காட்சிகளாக இருக்கட்டும் , டிராயான்கிள் ஆஃப் டெத் என்ற இடத்தை கடந்து வரும் காட்சிகளாக இருக்கட்டும் , ஸ்கிரீன்பிளே படுவேகமாக பிரகாசிக்கிறது, இவர்களின் சுமாரான கம்பெனிக்கு ஒரு முன்னூறு மில்லியன்கள் ஆர்டர் கிடைத்த அடுத்த ஒரு மாதங்களில் இந்த இரண்டு நண்பர்கள் பண்ணக்கூடிய ரிஸ்க் ஆன வேலைகள் எல்லாம் க்ரைம் காட்சிகளுக்கு ஒரு புதிய பரிமாணம். இவ்வளவு நல்ல திரைக்கத்தையை படத்தின் காட்சிப்படுத்துதல் என்றால் ஒரு முறை கூட சொதப்பாமல் நூறு சதம் சரியாக செய்துள்ளது, மொத்தத்தில் மிக பிரமாதமான படம் எனலாம், இந்த படத்தை தனியாக பார்க்கலாம். ஆனால் 2008 களில் உண்மையாகவே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பது கொஞ்சம் அதிசயம்தான். இந்த படம் கிளைமாக்ஸ்ல கெத்து காமிச்ச படம். இந்த மாதிரி படங்கள் ஹாலிவுட் சினிமாவில் கிடைப்பது ரேர்ரான விஷயம்.
ஒரு சராசரி குடும்பமாக புறநகர் பகுதியில் வாழும் மிட்செல் குடும்பத்தினர் இந்த உலகத்தையே கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட ஒரு மிகப்பெரிய ரோபோட்களின் படையையே எதிர்க்கவேண்டிய நிலையில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை மிக நகைச்சுவையாக சொல்லியுள்ளது இந்த படத்தின் கதை, படத்தின் முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரையில் நிறைய விஷயங்கள் நகைச்சுவையுடன் பின்னப்பட்டு சொல்லப்பட்டுள்ளது, படம் முழுவதும் அட்வென்சர்க்கு பஞ்சமே இல்லை, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக சில படங்களை சொல்லிக்கொள்ளும் நம்ம ஊரு பிளாக் பஸ்டர் பிரியர்கள் படங்கள் கொஞ்சம் இந்த படத்தை பார்த்து கற்றுக்கொள்வது நல்லது, காட்சிகள் , வசனங்கள் , படத்தொகுப்பு என அனைத்தையும் மிக சரியாகவே செய்துள்ளது இந்த அனிமேஷன் காமெடி திரைப்படம், ஒரு படம் இன்னொரு முறை பார்க்கும்போதும் விறுவிறுப்பாக ஸ்வரஸ்யமாக இருக்குமா இல்லையா என்பதை உங்களுடைய ரசனை முடிவு செய்யும் என்றால் மிட்செல்ஸ் வி. மெஷின்ஸ் அனிமேஷன் சினிமா பிரியர்களுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல படைப்புதான். இந்த படத்தை பார்த்தவர்களுக்கு நிஜமாகவே ஒரு ஃபேமிலியின் வேல்யூக்கள் கண்டிப்பாக புரியும், இதை யாரோ ஒருவர் குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கும்தான் , நமக்கு என்று இருப்பது ஒரு குடும்பம்தான் என்று சுமாரான வசனங்களில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று புரியவரும். சோனி அனிமேஷன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் அனிமேஷன் பட வரலாற்றில் மிகச்சிறந்த கிரேயடிவ் ஆன திரைப்படம் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த படம் பெர்ஸனலா எனக்கு ரொம்ப பிடிச்ச படம் கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள் !! நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது.