ஒரு சராசரி குடும்பமாக புறநகர் பகுதியில் வாழும் மிட்செல் குடும்பத்தினர் இந்த உலகத்தையே கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட ஒரு மிகப்பெரிய ரோபோட்களின் படையையே எதிர்க்கவேண்டிய நிலையில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை மிக நகைச்சுவையாக சொல்லியுள்ளது இந்த படத்தின் கதை, படத்தின் முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரையில் நிறைய விஷயங்கள் நகைச்சுவையுடன் பின்னப்பட்டு சொல்லப்பட்டுள்ளது, படம் முழுவதும் அட்வென்சர்க்கு பஞ்சமே இல்லை, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக சில படங்களை சொல்லிக்கொள்ளும் நம்ம ஊரு பிளாக் பஸ்டர் பிரியர்கள் படங்கள் கொஞ்சம் இந்த படத்தை பார்த்து கற்றுக்கொள்வது நல்லது, காட்சிகள் , வசனங்கள் , படத்தொகுப்பு என அனைத்தையும் மிக சரியாகவே செய்துள்ளது இந்த அனிமேஷன் காமெடி திரைப்படம், ஒரு படம் இன்னொரு முறை பார்க்கும்போதும் விறுவிறுப்பாக ஸ்வரஸ்யமாக இருக்குமா இல்லையா என்பதை உங்களுடைய ரசனை முடிவு செய்யும் என்றால் மிட்செல்ஸ் வி. மெஷின்ஸ் அனிமேஷன் சினிமா பிரியர்களுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல படைப்புதான். இந்த படத்தை பார்த்தவர்களுக்கு நிஜமாகவே ஒரு ஃபேமிலியின் வேல்யூக்கள் கண்டிப்பாக புரியும், இதை யாரோ ஒருவர் குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கும்தான் , நமக்கு என்று இருப்பது ஒரு குடும்பம்தான் என்று சுமாரான வசனங்களில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று புரியவரும். சோனி அனிமேஷன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் அனிமேஷன் பட வரலாற்றில் மிகச்சிறந்த கிரேயடிவ் ஆன திரைப்படம் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த படம் பெர்ஸனலா எனக்கு ரொம்ப பிடிச்ச படம் கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள் !! நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது.
No comments:
Post a Comment