Thursday, June 8, 2023

GENERAL TALKS - யோசிக்க வேண்டிய விஷயம்பா !! - [REGULATION 2024 - 00088]

 

"இந்த கதை ஒரு சுவாரஸ்யமான கதை , ஒரு ஆராய்ச்சி கூடத்தில் ஒரு மிகப்பெரிய கூண்டுக்குள் ஐந்து குரங்குகள் வளர்க்கப்பட்டது, அந்த ஐந்து குரங்குகளில் ஒரு குரங்கு மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு எப்போது அந்த குரங்கு கூண்டின் மேல் கம்பிகளை பிடித்து ஏறி வந்தாலும் அந்த குரங்குக்கு பரிசாக சுவையான பழங்கள் கொடுக்கப்பட்டது, ஆனால் மற்ற நான்கு குரங்குகள் கூண்டின் மேலே வந்தால் எந்த பழங்களும் கொடுக்கப்படுவதே இல்லை !, மற்ற குரங்குகள் அந்த குரங்கை பார்த்து பொறாமைப்பட்டன. அதனால் அந்த குரங்கு எப்போது கூண்டின் கம்பிகளை தொட்டு மேலே செல்ல முயற்சி செய்தாலும் மற்ற குரங்குகள் அந்த தேர்ந்தேடுக்கப்பட்ட குரங்கை சண்டை போட்டு அடித்து தாக்கின. இதனால் பயந்து போன அந்த குரங்கு கூண்டின் கம்பியை தொடுவதையே விட்டுவிட்டது, சுவையான பழங்கள் அந்த குரங்குக்கு அதன் பின்னால் கிடைக்கவே இல்லை. இந்த சம்பவங்களுக்கு பின்னால் கூண்டின் கம்பிகளை தொட்டாலே போதும் மற்ற குரங்குகள் சேர்ந்து அந்த குரங்கை அடிக்க ஆரம்பித்து விட்டன. ஆனால் கதை இங்கே முடியவில்லை, காலப்போக்கில் எந்த குரங்கு கூண்டின் கம்பிகளை தொட்டாலும் மற்ற குரங்குகள் சேர்ந்து அந்த குரங்கை தாக்க ஆரம்பித்தன. இது இந்த குரங்குகளுக்கு ஒரு கலாச்சார நிபந்தனையாக மாறிவிட்டது, இன்னும் புதிதாக ஐந்து குரங்குகள் அந்த கூண்டுக்குள் விடப்பட்டது. ஆனால் அவைகள் எல்லாம் இந்த செயல்முறையை பார்த்து கூண்டின் கம்பிகளை பிடித்து மேலே செல்ல முயற்சித்தாலே அதுவே பெரிய தவறு என்று கற்றுக்கொண்டு முடிவு செய்து விட்டன ! அவைகளும் மற்ற குரங்குகளை போலவே கூண்டின் கம்பியை தொட்டால் கொலை குற்றம் செய்ததை போல தாக்க ஆரம்பித்து விட்டன,  இதுபோலதான் வாழ்க்கையும் , வாழ்க்கையில் யாராவது முன்னேற நினைத்தாலே போதும் அவர்கள்  என்னமோ ஒரு மிகப்பெரிய தவறை செய்தது போல மற்ற எல்லோரும் சேர்ந்து தண்டனைகளை கொடுக்க பார்க்கிறார்கள், இவர்கள் தானும் முன்னேற மாட்டார்கள் அடுத்தவர்களையும் முன்னேற விட மாட்டார்கள், இங்கே குரங்குகளின் பொறாமை கூண்டுக்கு மேலே வருவது என்பதே ஒரு கொடிய குற்றம் என்றும்  , எப்போதும் தரையில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றும் , மேலே போகவே கூடாது என்றும் தேவையற்ற கட்டுப்பாடுகளை உருவாக்கியதை போல மனிதர்களும் யாராவது முன்னேறுவதை பார்த்தால் அவர்களை கேலி செய்யவும் தாக்கவும் ஆரம்பித்து விடுகிறோம், பரவைக்கு கால்கள் இருக்கலாம், கடைசி வரையில் பறக்காமல் தரையில் இருந்து கிடைக்கும் தீனிகளை கொண்டே அந்த பறவை உயிர் வாழ்ந்து விடலாம் , ஆனால் இறக்கைகள் இருப்பது பறந்து வானம் செல்லத்தானே ? அவைகளை தரையில் மட்டுமே வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று சொல்வது எந்த வகையில் சரியான செயல் ?" - இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் இணைப்பில் இருக்கும் சிறப்பு நெட்பிலிக்ஸ் நகைச்சுவை காணொளியை பார்க்கவும். TAMILNSA.BLOGSPOT.COM - NICE TAMIL BLOG  - SIMPLE TALKS - TAG : TAMIL DEMOTIVATIONAL STORY XD.

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...