CORRECTIVE MEASURES - இந்த படத்துடைய கதை, உலகத்தில் நடந்த ஒரு பேரழிவை தொடர்ந்து நிறைய பேருக்கு ரேடியேஷன் காரணமாக செல்கள் மியூடெஷன் அடைந்தது சூப்பர் பவர்கள் கிடைக்கிறது, ஆனால் அரசாங்கத்தால் சக்திகள் கட்டுப்படுத்தப்பட்டு அனைவரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர், இவர்களால் வெளியே செல்ல முடியுமா ? வெளியே செல்ல இவர்களின் திட்டம் என்ன என்பதுதான் ஒரு வரிக்கதை , குறைவான பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம். இந்த படத்தில் நடிப்பவர்கள் எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர், கிளைமாக்ஸ் காட்சி பிரமாதம். ஒரு வரி கதையை கூட ஒரு நல்ல படமாக மாற்ற முடியும் என்ற கருத்துக்கு இந்த படம் ஒரு நல்ல எக்ஸாம்பிள். ஒரு பட்ஜெட் படமாக சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களை எடுத்தால் என்னென்ன குறைகள் இருக்குமோ இந்த படத்திலும் அதே குறைகள் இருக்கதான் செய்கிறது. இருந்தாலும் கதைக்கு கொடுத்த டேடிகேஷன் படத்துக்கு நல்ல சப்போர்ட்டாக இருக்கிறது.
No comments:
Post a Comment