WAR DOGS
வார் டாக்ஸ் - இந்த படத்துடைய கதை - தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற படிப்பு முடிந்ததும் மொத்த பணத்தையும் செலவு செய்து சாஃப்ட் போர்வைகள் விற்பனை செய்யும் நம்ம கதாநாயகன் , இவருடைய வாழ்க்கையில் போர் ஆயுதங்களை வாங்கல் விற்றல் செய்து அதிக லாபம் பார்க்கும் ஒரு நண்பன் வந்தால் என்ன நடக்கும் ? கொஞ்சம் உண்மை சம்பவங்களை மையமாக கொண்ட கதையாக இருந்தாலும் இருவரின் நடிப்பு மிரட்டல் செய்கிறது , "இந்த இடம் பேசிக்கலி காமிக் கான் தான், ஆனால் ஆயுதங்களுக்கு !" என்று சொல்லும் காட்சிகள் வேறு லெவல், அல்பேனியாவில் வியாபாரம் பேசும் காட்சிகளாக இருக்கட்டும் , டிராயான்கிள் ஆஃப் டெத் என்ற இடத்தை கடந்து வரும் காட்சிகளாக இருக்கட்டும் , ஸ்கிரீன்பிளே படுவேகமாக பிரகாசிக்கிறது, இவர்களின் சுமாரான கம்பெனிக்கு ஒரு முன்னூறு மில்லியன்கள் ஆர்டர் கிடைத்த அடுத்த ஒரு மாதங்களில் இந்த இரண்டு நண்பர்கள் பண்ணக்கூடிய ரிஸ்க் ஆன வேலைகள் எல்லாம் க்ரைம் காட்சிகளுக்கு ஒரு புதிய பரிமாணம். இவ்வளவு நல்ல திரைக்கத்தையை படத்தின் காட்சிப்படுத்துதல் என்றால் ஒரு முறை கூட சொதப்பாமல் நூறு சதம் சரியாக செய்துள்ளது, மொத்தத்தில் மிக பிரமாதமான படம் எனலாம், இந்த படத்தை தனியாக பார்க்கலாம். ஆனால் 2008 களில் உண்மையாகவே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பது கொஞ்சம் அதிசயம்தான். இந்த படம் கிளைமாக்ஸ்ல கெத்து காமிச்ச படம். இந்த மாதிரி படங்கள் ஹாலிவுட் சினிமாவில் கிடைப்பது ரேர்ரான விஷயம்.
No comments:
Post a Comment