படத்துடைய கதை பணக்கார பெண்மணி சீதா தனது மகன் சுரேந்தருக்காக ஒரு நல்ல மனைவியைத் தேர்ந்தெடுக்க விரும்புவதைச் சுற்றி நகர்கிறது. செழிப்பான வாழ்க்கையை இழந்து வறுமையில் வாழும் சுமதி, சீதாவின் வீட்டில் வேலைக்காரியாக வருகிறார்.
சுமதியின் அறிவும், நல்ல மனமும், எழுத்துத் திறனும் சீதாவை கவர்கிறது. சுமதி எழுதிய நாவலைப் படித்த சீதா, தனது மகன் சுரேந்தரும் சுமதியும் கதாபாத்திரங்களாகக் கற்பனை செய்து, சுமதியை மருமகளாக ஆக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்துகிறார்.
துரதிர்ஷ்டவசமாக, சீதா தனது கணவர் சந்தோஷ் மற்றும் மகன் சுரேந்தர் வருவதற்கு முன் விபத்தில் இறக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த மருமகளின் பெயரைச் சொல்லாமல் விட்டதால், சுரேந்தர் தாயின் ஆசையை நிறைவேற்ற அந்தப் பெண்ணைத் தேடத் தொடங்குகிறார்.
சுமதி வறுமையிலும், வேலைக்காரியாக இருப்பதால் தன்னை வெளிப்படுத்தாமல் இருக்கிறார். சந்தோஷ், தனது மகனுக்கு பணக்கார பெண்ணைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார் , பல திருப்பங்களுக்குப் பிறகு, சுரேந்தரின் நெருக்கமான தோழராக இருக்கும் சம்பூரணம், சுமதியே சீதா தேர்ந்தெடுத்த பெண் என்பதை கண்டுபிடிக்கிறார். சுமதி எழுதிய நாவலே அதற்கான சான்றாகிறது. இறுதியில் என்ன நடந்தது என்பதே கதை !
இந்த படத்தின் ஸ்பெஷல் என்பது கதைக்குள் கதை என்ற போர்மட்டில் திரைக்கதையை நகர்த்திய விதம்தான். படத்துக்கு தனியாக இரு பரிமாணங்களை கொடுத்து ஒரே கதையில் இணைத்துள்ளது.
1 கருத்து:
சுமாரான படம், கதை நல்லா இருக்கும்.
கருத்துரையிடுக