வியாழன், 25 டிசம்பர், 2025

CINEMA TALKS - CORNETTO TRIOLOGY - FILM 2 - TAMIL REVIEW !

 


இந்த மாதிரியான ஒரு கிரைம் படத்தை நீங்கள் பார்க்க முடியாது ! நிக்கோலஸ் ஏஞ்சல் (சைமன் பெக்) லண்டன் மெட்ரோபாலிடன் போலீசில் மிகச் சிறந்த அதிகாரி; அவரது கைது சாதனைகள் மிக அதிகம் என்பதால், சக அதிகாரிகள் சங்கடப்படுகிறார்கள். 

அதனால், மேலதிகாரிகள் அவரை சாண்ட்ஃபோர்ட் என்ற அமைதியான கிராமத்திற்கு மாற்றுகிறார்கள். அந்த கிராமம் “வில்லேஜ் ஆப் தி இயர்” விருதை பலமுறை வென்றுள்ளது. நிறைய விறுவிறுப்பான சண்டைகள் நிறைந்த நகர வாழ்க்கையில் இருந்து மெதுவான கிராம வாழ்க்கைக்கு ஏஞ்சல் பழக முடியாமல் தவிக்கிறார். 

அவருடன் பணியாற்றும் டேனி பட்டர்மேன் (நிக் ஃப்ராஸ்ட்) என்ற அனுபவமற்ற காவலர், ஆக்ஷன் படங்களை விரும்பும் சினிமா ரசிகர். ஆரம்பத்தில், ஏஞ்சல் சின்னச் சின்ன வழக்குகள் வாத்து தப்பிப்பது, கடை திருட்டு  போன்றவற்றில் சலிப்படைகிறார். ஆனால் விரைவில், அந்த கிராமத்தின் புன்னகை முகத்திரையின் பின்னால் ஒரு இருண்ட ரகசியம் இருப்பதை உணர்கிறார்.


சாண்ட்ஃபோர்டில் பல “விபத்துகள்” நடக்கத் தொடங்குகின்றன மக்கள் விசித்திரமான சூழ்நிலைகளில் உயிரிழக்கிறார்கள். ஏஞ்சல், இவை அனைத்தும் கொலைகள் என்று சந்தேகிக்கிறார். ஆனால் உள்ளூர் போலீசார், “குற்றமற்ற கிராமம்” என்ற தோற்றத்தை காப்பாற்ற விரும்பி, அவரது சந்தேகங்களை புறக்கணிக்கிறார்கள் உண்மைகளை மறைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்கிறார்.

ஏஞ்சலும் டேனியும் தொடர்ந்து விசாரித்து, சாண்ட்போர்ட் அண்டை வீட்டார் கண்கணிப்பு அமைப்பு (NWA) என்ற அமைப்பு, இன்ஸ்பெக்டர் ஃப்ராங்க் பட்டர்மேன் தலைமையில், இந்த ஊரின் பேரை செய்யப்படும் கொலைகளுக்குப் பின்னால் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். 

கிராமத்தின் “சிறந்த” பெயரை காப்பாற்ற, பத்திரிகையாளர்கள், நடிகர்கள் போன்ற “அபாயம்” தருவோரைக் கொன்று விடுகிறார்கள். குற்றங்கள் இல்லாமல் இருக்க குற்ற்றங்களை செய்து மறைப்பது மேல் என்ற பெயரில் நடக்கும் இந்தக் கொடூரம், அமைதியான கிராமத்தை வன்முறையின் மேடையாக மாற்றுகிறது.

ஏஞ்சலும் டேனியும் NWA-வை எதிர்கொள்கிறார்கள்; அதில் துப்பாக்கிச் சண்டைகள், கார் துரத்தல்கள், மிகைப்படுத்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் இடம்பெறுகின்றன ஹாலிவுட் காவல் படங்களை நையாண்டி செய்யும் விதமாகவும், உண்மையான சுவாரஸ்யத்தையும் தரும் விதமாகவும் இருக்கிறது. கிராம மக்கள், போலீஸ் தலைவரைச் சேர்த்து, கொடூரமான கொலைகாரர்களாக வெளிப்படுகிறார்கள். 

கிளைமாக்ஸில், ஏஞ்சல் சதியாளர்களை தோற்கடித்து, சாண்ட்ஃபோர்டில் நீதியை மீட்டெடுக்கிறார். இறுதியில், அவர் கிராமத்தில் தங்கி, ஹீரோவாக மதிக்கப்படுகிறார்; டேனி, அனுபவமிக்க துணையாக வளர்கிறார். 

இந்த படத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் மக்களே நையாண்டி, நகைச்சுவை, மற்றும் ஆக்ஷனை கலந்த தனித்துவமான படம் என்றே சொல்லலாம் ; காவல் துறை படங்களின் சினிமா காட்சிகளை கலாய்த்து கேலி செய்யும் போதும் கூட இந்த படம் ஊழல், நட்பு, மற்றும் நம்பிக்கை பற்றிய கூர்மையான கதையைச் சொல்கிறது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Semma Padam

CINEMA TALKS - 2023 - ல் வெளிவந்த தமிழ் படங்கள் !

  Dear Death Vindhya Victim Verdict V3 Thunivu Varisu Vallavanukkum Vallavan Beginning Meippada Sei Kalathil Vendr...