ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

MOTIVATION IS CRAP - TAMIL TALKIES - மோட்டிவேஷன் ஒரு குப்பை !! - [REGULATION-2024-00013]




இது எல்லாமே உங்களுக்கு சொல்லும்போது அப்படியே உற்சாகமாக இருக்கும் இந்த புலிகேசி படத்தில் வருவது போல என்னமோ ஒரு நம்பிக்கையில் வல்லவராயன் மீது படையெடுத்து வெற்றி வேல் வீர வேல் என்று சொல்லிக்கொண்டு மோட்டிவேஷன் கிடைத்ததும் பிரச்சனைகளுடன்  சண்டை போட்டு ஜெய்த்துவிடலாம் என்று கிளம்பிவிடுவீர்கள் !! ஆனால் மோட்டிவேஷன் இப்படித்தான் ஏதாவது கதையை அளக்கும் :

கதை :

உங்களால் தவிர்க்க முடியாத விஷயங்களை நீங்கள் செய்தாக வேண்டும். வாழ்க்கை மிகவும் கடினமானது இதனை மறுக்க யாராலும் முடியாது. ஆனால் பிரச்சினைகள் கடினமாக இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக பிரச்சினைகளை சரி செய்யவே முடியாது என்ற அவசியம் கிடையாது. இந்த உலகத்தில் எந்த ஒரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு. நிறைய நேரங்களில் அந்த தீர்வுக்கு வேறு ஏதாவது காரணங்கள் தேவைப்படலாம். பணம் அறிவு செயல்திறன் என்று எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இந்த விஷயங்கள் இருந்தால் தான் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல முடியும் என்ற நிலைமை உருவாகிறது. மோட்டிவேஷன் என்று இல்லாமல் பொதுவாக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். இந்த உலகத்திலேயே சிறந்த சொல் செயல் என்பதை மறக்க வேண்டாம். தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் மட்டுமே வெற்றிக்கு போதுமானது என்று எண்ண வேண்டாம். காலத்தையும் இடத்தையும் சரியாக பயன்படுத்த முடிந்தால் வெற்றி நம் கையில். இந்த உலகம் மிகவும் பெரியது நிறைய பேருக்கு நிறைய ஆசைகள் தனத்துக்கு தனியான அறையில் அலுவலக வேலைகள் செய்து கொண்டிருக்கும் ஒருவருக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். இந்த உலகமே மிகவும் பெரியது என்று சொல்லுவார்கள் பிரச்சனைகளை எல்லாம் சமாளிக்க முடியாது என்று சொல்லுவார்கள் ஆனால் இதெல்லாம் தவிர்க்க முடியாதது இல்லை. 

உண்மை :

இப்போ மேல இருந்த விஷயத்துல கொஞ்சம் கூட எனக்கு புரியல !! உண்மையில மோட்டிவேஷன் ஒரு குப்பை ! உங்க பைக் போகவேண்டிய இடம் சேரணும்னா GPS தான் தேவை ! மோட்டிவேஷன் மாதிரி ஒரு கற்பனையை நம்பி வாழ்க்கையை பறிகொடுக்க வேண்டாம் !! SWEET சாப்பிடுவதற்க்கு பதிலாக GLUCOSE பவுடர் சாப்புடுவதுதான் MOTIVATION ! அதனாலதான் MOTIVATION IS CRAP ன்னு சொல்லறேன் !! உண்மையான உலகத்தை தெரிஞ்சுக்க நீங்க நிறைய INFORMATION கத்துக்கணும் ! அதுக்குதான் நானும் BLOG ஸ்டார்ட் பண்ணி கடையை நடத்திக்கிட்டு இருக்கேன் ! இந்த BLOG ஐ SUBSCRIBE பண்ணுங்கோ !

GENERAL TALKS - கோபத்தை சரியான செயல்பாடாக மாற்ற வேண்டும் ! [REGULATION-2024-00012]



POST ID : 2024.06.17.02.2

இன்றைக்கு தேதிக்கு இந்த கருத்துக்களை நான் உடைந்துபோன மன நிலையில் வாழ்க்கையில் வெற்றியே அடைய முடியாத ஒரு நிலையில் இருந்து எழுதுகிறேன். கோபப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை என்று சீனியர்ஸ் என்று சொல்லப்படும் முந்தைய ஜெனரேஷன் ஸ்பெஷல்லிஸ்ட்கள் சொல்லும் கருத்துக்களால் பிரயோஜனங்கள் இல்லை. நம்ம கோபம்தான் நம்மை சரியான செயல்களை செய்ய வைக்கும். அல்லது கோபத்தை நம்ம வாழ்க்கையில் சரியான செயல்களை செய்ய ஒரு கருவியாக மாற்ற வேண்டும். நான் முன்னதாக சொன்னது போல ஒரு விதமான உடைந்த மனநிலையில் நான் இந்த கருத்துக்களை எழுதுகிறேன். கொஞ்சம் ஒரு சராசரி மனுஷனாக நம்மை சுற்றி இருக்கும் பிரச்சனைகளை மட்டும் பட்டியல் போட்டு பார்க்கலாமே ! 1. லஞ்சம் 2.கரேப்ஷன் 3, ஊழல் 4. வன்முறை 5. சாதி அடிப்படை குற்றங்கள் 6. மத அடிப்படை குற்றங்கள் 7. மொழி வாரியான பாகுபாடு 8. பணக்காரர்கள் ஏழைகளை நடத்தும் முறை 9. மோசமான கேப்பிட்டலிஸம் 10. போர்கள் 11. ஆண்கள் , பெண்கள் , மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 12. பண மோசடி 13. கல்யாண செலவுகள் 14. குழந்தை வளர்ப்பு சவால்கள் 15. வேலை நேரம் அதிகமாக இருப்பது 16. பொது இடங்கள் சுகாதரமாக இல்லாதது 17. நோய்களும் மருத்துவ செலவுகளும் 18. கொடூர கடன் நிறுவனங்கள் 19. வானிலை பேரிட்ர்கள் 20. சாலை விபத்துகள் 21. மன உளைச்சல்கள் 22. காவல் துறை அலட்சியம் 23. அறியாமை 24. கல்வி மறுப்பு 25. வேலைக்கு செல்லும் கட்டாயம் 26. விபத்துகள் 27. உடனடி மருத்துவ செலவுகள் ! 28. பொறுப்பில் இருப்பவர்கள் கடினமாக நடந்து கொள்ளுதல் 29. நில ஆக்கிரமிப்பு , 30. கட்டப்பஞ்சாயத்து 31. கடத்தல் 32.உடல் உறுப்பு கொள்ளை 33. தவறான பொறியியல் 34. செயற்கை உணவுகள் 35. விவசாய பின்னடைவு 36. உணவு பொருட்கள் விலையேற்றம் இன்னும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது/ ஒரு சராசரி மனிதனாக போதுமான பணம் இல்லாமல் வாழ்ந்தால் இந்த பிரச்சனைகளில் எல்லாமே நாம் சந்திக்க வேண்டியது வரும் இந்த பிரச்சனைகளை தடுக்க அதிகமாக கோபப்பட வேண்டும். தடுக்க நாம் அனைத்து செயல்களையும் செய்ய வேண்டும். இனிமேல் என்னுடய கவனம் கோபத்தை சரியாக தணிக்க வேண்டும். பின்னாட்களில் கோபம் அடைய தேவை இல்லாத ஒரு பெர்ஃப்ஃபேக்ட் வாழ்க்கையை அடுத்த தலைமுறை வாழவேண்டும். நான் இப்போது ஃபோகஸ் பண்ண வேண்டிய விஷயமும் இதுதான் செயல்பாடுகளை உருவாக்க வேண்டிய ஸ்டைல்லும் இதுதான். 




SUPERHERO MOVIES - TAMIL - EXPLAINED - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00011]

உங்களுக்கு மார்வால் vs டி ஸி பற்றி தெரியுமா ? இந்த இரண்டு நிறுவனங்களின் வரைகலை புத்தகங்களின் கத்தப்பத்திரங்கள்தான் இப்போது சூப்பர் ஹீரோ திரைப்படங்களாக ஸ்பைடர் மேன் , அவெஞ்சர்ஸ், எக்ஸ் மென் கதாப்பத்திரங்கள் MARVEL நிறுவனத்தின் காமிக் புத்தகங்களை அடிப்படையாக கொண்டது, பேட் மேன் , சூப்பர் மேன் , ஜஸ்டிஸ் லீக் , சூசைட் ஸ்குவாட், பிளாஷ் கதாப்பாத்திரங்கள் டி ஸி வரைகலை புத்தகங்களின் அடிப்படையாக கொண்டது. 2000 களுக்கு முன்னால் சூப்பர் மற்றும் பேட் மேன் திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றன, அப்போது எல்லாம் MARVEL கத்தப்பத்திரங்கள் அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் என்றால் BLADE திரைப்படங்கள் மட்டும்தான் இருந்தது. இங்கதான் ஜூராசிக் பார்க் திரைப்படங்கள் உருவாக காரணமான ஒரு மாயாஜாலாமான தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்தது. விசுவல் எஃபக்ட்ஸ் மற்றும் சி ஜி ஐ அனிமேஷன். 2000 முதல் 2007 வரை ஸ்பைடர் மேன் திரைப்படங்கள் வெளி வந்து வசூல் சாதனை படைத்தது. எக்ஸ் மென் திரைப்படங்களின் தொடக்கமும் இந்த கால கட்டத்தில்தான் ஆரம்பம் ஆனது. ஆனால் கிறிஸ்டோபர் நோலான் அவர்களின் தி டார்க் நைட் TRIOLOGY பேட் மேன் கதாப்பத்திரத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தையே கொடுத்தது எனலாம். சூப்பர் ஹீரோ படங்களுக்கே ஒரு கௌரவத்தை கொடுத்த படம் THE DARK KNIGHT - இப்போது MARVEL -ஐ பார்க்கலாம், ஒரு சிறந்த திரைப்பட வரிசையை உருவாக்க முயற்சி செய்த MARVEL நிறைய கடினமான பொருளாதார தடைகளை கடந்து IRON MAN , CAPTAIN AMERICA , THOR , மற்றும் THE AVENGERS திரைப்படங்களை வெளியிட்டது. அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் வசூல் சாதனை நிறைய நம்பிக்கையை கொடுத்தது. ஃபாக்ஸ் நிறுவம் எக்ஸ் மென் திரைப்படங்கள் வசூல் சாதனைகள் உருவாக்கும்போது DEADPOOL போல சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வெளிவந்தன. ஜாக் சனைடர் அவர்களின் இயக்கத்தில் சூப்பர் மென் திரைப்படமான மேன் ஆஃப் ஸ்டீல் - டி ஸி உலகத்தின் திரைப்படங்களின் வரிசையை உருவாக்கியது. டி ஸி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் அனிமேஷன் திரைப்படங்களும் நன்றாக இருக்கும். MARVEL க்கும் அனிமேஷன் தொடர்கள் இருக்கிறது. கடைசியாக வெளிவந்த ஜாக் சனைடர் ஜஸ்டிஸ் லீக் , ஷசாம் திரைப்படங்கள் DC க்கும் வெற்றிகளை கொடுத்துள்ளது. அவெஞ்சர்ஸ் திரைப்படங்களின் கதைக்களம் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் எண்டு கேம் திரைப்படங்களில் ஸ்டோரி ஆர்க் நிறைவு செய்து இன்னமும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. சோனியின் ஸ்பைடர் மேன் வரைகலை புத்தக கதாப்பத்திரங்களின் அடிப்படையில் வெனம் போன்ற திரைப்படங்களின் வெற்றிகளையும் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும். வருங்காலத்தில் நிறைய தரமான சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் எதிர்பார்க்கலாம். இப்போது எல்லாம் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யுரியஸ் திரைப்படங்கள் கூட லார்ஜர் தென் லைஃப் என்ற லெவல்க்கு சென்றுவிட்டது. 



THE 2 MOST MAGICAL WORDS IN ALL LANGUAGES - READ THIS RIGHT NOW !!! - [REGULATION-2024-00010]




இந்த உலகத்திலேயே ரொம்ப மேஜிக்கலான மாயாஜாலாமான வார்த்தைகளை தெரிஞ்சுக்கனுமா ? இந்த இரண்டு வார்த்தைகள்தான் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் மாற்றங்களுக்கு முக்கியமான காரணம். வெறும் இந்த இரண்டு வார்த்தைகள் வாழ்க்கையை எந்த அளவுக்கு மாற்றியுள்ளது என்பது உங்களுக்கு கொஞ்சம் நேரம் பொறுமையாக யோசித்து பார்த்தால் கூட புரிந்துவிடும். அது என்ன ஹாரி பாட்டர் படங்களில் வருவது போன்று பறக்கும் துடைப்பத்தில் அமர்ந்து பறந்து செல்ல வைக்கும் வார்த்தைகள் என்று யோசிக்க வேண்டாம். இந்த இரண்டு வார்த்தைகளுக்கு அவ்வளவு சீன் எல்லாம் கிடையாது. முதல் வாரத்தை "LIKE" மற்றும் இரண்டாவது வாரத்தை "DISLIKE" - இந்த வார்த்தைகளை பொறுத்துதான் வாழ்க்கையில் நிறைய முடிவுகள் எடுத்து வாழ்க்கையில் இல்லாத பிரச்சனைகளை உருவாக்கிகொள்கிறோம். உதாரணத்துக்கு ஒருவருக்கு திரைப்படம், இசை, நடனம் என்று வேறு வேறு துறைகளில் பணிபுரிய விருப்பம் இருக்கலாம், ஆனால் அந்த துறையில் போதுமான வெற்றியை அடைய முடியாமல் போகலாம். அதுவே அதே மனிதருக்கு பங்கு சந்தையில் அல்லது எலக்டிரானிக்ஸ் துறையில் அதிக திறமை இருக்கலாம் , ஒரு வேளை அவருக்கு பிடித்த அந்த துறைகளை விட்டுவிட்டு பிடிக்காத இந்த துறைகளை தேர்ந்தெடுத்து வேலை செய்தால் வாழ்க்கை அருமையாக இருந்திருக்கலாம், நெட்பிலிக்ஸ்-ல் ஸ்டிரேஞ்சர் திங்க்ஸ் பார்க்கலாமா ? அல்லது தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியல் பார்க்கலாமா ? இல்லையென்றால் இணையத்தில் ல் "MADAN GOWRI" அவர்களின் காணொளியை பார்க்கலாமா ? என்று எந்த முடிவு எடுத்தாலும் விருப்பத்துக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுக்கிறோம், இது நல்ல விஷயம்தான் இருந்தாலும் பொழுதுபோக்கு அல்லது அதிகமான பயன்களை கொடுக்காத விஷயங்களில் நேரத்தை செலவிடுவதன் மூலமாக நேரத்தை அதிகமாக இழந்துவிட்டால் நேரம் மறுபடியும் கிடைக்காது, இதனால்தான் LIKE அல்லது DISLIKE என்ற வார்த்தைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டாம். இடம் பொருள் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுப்பதே சிறந்த விஷயம் என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு அலைபேசியில் பணம் செலுத்தும் காலகட்டங்களில் வங்கியில் சென்று படிவம் எழுதுவது ஒரு BORING ஆன விஷயமாக இருக்கலாம் ஆனால் இந்த உலகத்தில் சில விஷயங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. அவைகளை விருப்பு வெறுப்புகளை கடந்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...