Sunday, August 26, 2018

THE 2 MOST MAGICAL WORDS IN ALL LANGUAGES - READ THIS RIGHT NOW !!! - [REGULATION-2024-00010]




இந்த உலகத்திலேயே ரொம்ப மேஜிக்கலான மாயாஜாலாமான வார்த்தைகளை தெரிஞ்சுக்கனுமா ? இந்த இரண்டு வார்த்தைகள்தான் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் மாற்றங்களுக்கு முக்கியமான காரணம். வெறும் இந்த இரண்டு வார்த்தைகள் வாழ்க்கையை எந்த அளவுக்கு மாற்றியுள்ளது என்பது உங்களுக்கு கொஞ்சம் நேரம் பொறுமையாக யோசித்து பார்த்தால் கூட புரிந்துவிடும். அது என்ன ஹாரி பாட்டர் படங்களில் வருவது போன்று பறக்கும் துடைப்பத்தில் அமர்ந்து பறந்து செல்ல வைக்கும் வார்த்தைகள் என்று யோசிக்க வேண்டாம். இந்த இரண்டு வார்த்தைகளுக்கு அவ்வளவு சீன் எல்லாம் கிடையாது. முதல் வாரத்தை "LIKE" மற்றும் இரண்டாவது வாரத்தை "DISLIKE" - இந்த வார்த்தைகளை பொறுத்துதான் வாழ்க்கையில் நிறைய முடிவுகள் எடுத்து வாழ்க்கையில் இல்லாத பிரச்சனைகளை உருவாக்கிகொள்கிறோம். உதாரணத்துக்கு ஒருவருக்கு திரைப்படம், இசை, நடனம் என்று வேறு வேறு துறைகளில் பணிபுரிய விருப்பம் இருக்கலாம், ஆனால் அந்த துறையில் போதுமான வெற்றியை அடைய முடியாமல் போகலாம். அதுவே அதே மனிதருக்கு பங்கு சந்தையில் அல்லது எலக்டிரானிக்ஸ் துறையில் அதிக திறமை இருக்கலாம் , ஒரு வேளை அவருக்கு பிடித்த அந்த துறைகளை விட்டுவிட்டு பிடிக்காத இந்த துறைகளை தேர்ந்தெடுத்து வேலை செய்தால் வாழ்க்கை அருமையாக இருந்திருக்கலாம், நெட்பிலிக்ஸ்-ல் ஸ்டிரேஞ்சர் திங்க்ஸ் பார்க்கலாமா ? அல்லது தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியல் பார்க்கலாமா ? இல்லையென்றால் இணையத்தில் ல் "MADAN GOWRI" அவர்களின் காணொளியை பார்க்கலாமா ? என்று எந்த முடிவு எடுத்தாலும் விருப்பத்துக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுக்கிறோம், இது நல்ல விஷயம்தான் இருந்தாலும் பொழுதுபோக்கு அல்லது அதிகமான பயன்களை கொடுக்காத விஷயங்களில் நேரத்தை செலவிடுவதன் மூலமாக நேரத்தை அதிகமாக இழந்துவிட்டால் நேரம் மறுபடியும் கிடைக்காது, இதனால்தான் LIKE அல்லது DISLIKE என்ற வார்த்தைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டாம். இடம் பொருள் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுப்பதே சிறந்த விஷயம் என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு அலைபேசியில் பணம் செலுத்தும் காலகட்டங்களில் வங்கியில் சென்று படிவம் எழுதுவது ஒரு BORING ஆன விஷயமாக இருக்கலாம் ஆனால் இந்த உலகத்தில் சில விஷயங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. அவைகளை விருப்பு வெறுப்புகளை கடந்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

No comments:

ARC - 085 - பொறுப்புகளை எடுத்து செய்தல் !

  ஒரு காலத்தில் மிகவும் வசதி படைத்த ஒரு படகின் உரிமையாளர் அதை பெயிண்ட் அடித்து அழகாக்க விரும்பி ஒரு பெயிண்ட் காண்ட்ராக்டரிடம் பணியை ஒப்படைத்...