POST ID : 2024.06.17.02.2
இன்றைக்கு தேதிக்கு இந்த கருத்துக்களை நான் உடைந்துபோன மன நிலையில் வாழ்க்கையில் வெற்றியே அடைய முடியாத ஒரு நிலையில் இருந்து எழுதுகிறேன். கோபப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை என்று சீனியர்ஸ் என்று சொல்லப்படும் முந்தைய ஜெனரேஷன் ஸ்பெஷல்லிஸ்ட்கள் சொல்லும் கருத்துக்களால் பிரயோஜனங்கள் இல்லை. நம்ம கோபம்தான் நம்மை சரியான செயல்களை செய்ய வைக்கும். அல்லது கோபத்தை நம்ம வாழ்க்கையில் சரியான செயல்களை செய்ய ஒரு கருவியாக மாற்ற வேண்டும். நான் முன்னதாக சொன்னது போல ஒரு விதமான உடைந்த மனநிலையில் நான் இந்த கருத்துக்களை எழுதுகிறேன். கொஞ்சம் ஒரு சராசரி மனுஷனாக நம்மை சுற்றி இருக்கும் பிரச்சனைகளை மட்டும் பட்டியல் போட்டு பார்க்கலாமே ! 1. லஞ்சம் 2.கரேப்ஷன் 3, ஊழல் 4. வன்முறை 5. சாதி அடிப்படை குற்றங்கள் 6. மத அடிப்படை குற்றங்கள் 7. மொழி வாரியான பாகுபாடு 8. பணக்காரர்கள் ஏழைகளை நடத்தும் முறை 9. மோசமான கேப்பிட்டலிஸம் 10. போர்கள் 11. ஆண்கள் , பெண்கள் , மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 12. பண மோசடி 13. கல்யாண செலவுகள் 14. குழந்தை வளர்ப்பு சவால்கள் 15. வேலை நேரம் அதிகமாக இருப்பது 16. பொது இடங்கள் சுகாதரமாக இல்லாதது 17. நோய்களும் மருத்துவ செலவுகளும் 18. கொடூர கடன் நிறுவனங்கள் 19. வானிலை பேரிட்ர்கள் 20. சாலை விபத்துகள் 21. மன உளைச்சல்கள் 22. காவல் துறை அலட்சியம் 23. அறியாமை 24. கல்வி மறுப்பு 25. வேலைக்கு செல்லும் கட்டாயம் 26. விபத்துகள் 27. உடனடி மருத்துவ செலவுகள் ! 28. பொறுப்பில் இருப்பவர்கள் கடினமாக நடந்து கொள்ளுதல் 29. நில ஆக்கிரமிப்பு , 30. கட்டப்பஞ்சாயத்து 31. கடத்தல் 32.உடல் உறுப்பு கொள்ளை 33. தவறான பொறியியல் 34. செயற்கை உணவுகள் 35. விவசாய பின்னடைவு 36. உணவு பொருட்கள் விலையேற்றம் இன்னும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது/ ஒரு சராசரி மனிதனாக போதுமான பணம் இல்லாமல் வாழ்ந்தால் இந்த பிரச்சனைகளில் எல்லாமே நாம் சந்திக்க வேண்டியது வரும் இந்த பிரச்சனைகளை தடுக்க அதிகமாக கோபப்பட வேண்டும். தடுக்க நாம் அனைத்து செயல்களையும் செய்ய வேண்டும். இனிமேல் என்னுடய கவனம் கோபத்தை சரியாக தணிக்க வேண்டும். பின்னாட்களில் கோபம் அடைய தேவை இல்லாத ஒரு பெர்ஃப்ஃபேக்ட் வாழ்க்கையை அடுத்த தலைமுறை வாழவேண்டும். நான் இப்போது ஃபோகஸ் பண்ண வேண்டிய விஷயமும் இதுதான் செயல்பாடுகளை உருவாக்க வேண்டிய ஸ்டைல்லும் இதுதான்.
No comments:
Post a Comment