Sunday, August 26, 2018

SUPERHERO MOVIES - TAMIL - EXPLAINED - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00011]

உங்களுக்கு மார்வால் vs டி ஸி பற்றி தெரியுமா ? இந்த இரண்டு நிறுவனங்களின் வரைகலை புத்தகங்களின் கத்தப்பத்திரங்கள்தான் இப்போது சூப்பர் ஹீரோ திரைப்படங்களாக ஸ்பைடர் மேன் , அவெஞ்சர்ஸ், எக்ஸ் மென் கதாப்பத்திரங்கள் MARVEL நிறுவனத்தின் காமிக் புத்தகங்களை அடிப்படையாக கொண்டது, பேட் மேன் , சூப்பர் மேன் , ஜஸ்டிஸ் லீக் , சூசைட் ஸ்குவாட், பிளாஷ் கதாப்பாத்திரங்கள் டி ஸி வரைகலை புத்தகங்களின் அடிப்படையாக கொண்டது. 2000 களுக்கு முன்னால் சூப்பர் மற்றும் பேட் மேன் திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றன, அப்போது எல்லாம் MARVEL கத்தப்பத்திரங்கள் அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் என்றால் BLADE திரைப்படங்கள் மட்டும்தான் இருந்தது. இங்கதான் ஜூராசிக் பார்க் திரைப்படங்கள் உருவாக காரணமான ஒரு மாயாஜாலாமான தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்தது. விசுவல் எஃபக்ட்ஸ் மற்றும் சி ஜி ஐ அனிமேஷன். 2000 முதல் 2007 வரை ஸ்பைடர் மேன் திரைப்படங்கள் வெளி வந்து வசூல் சாதனை படைத்தது. எக்ஸ் மென் திரைப்படங்களின் தொடக்கமும் இந்த கால கட்டத்தில்தான் ஆரம்பம் ஆனது. ஆனால் கிறிஸ்டோபர் நோலான் அவர்களின் தி டார்க் நைட் TRIOLOGY பேட் மேன் கதாப்பத்திரத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தையே கொடுத்தது எனலாம். சூப்பர் ஹீரோ படங்களுக்கே ஒரு கௌரவத்தை கொடுத்த படம் THE DARK KNIGHT - இப்போது MARVEL -ஐ பார்க்கலாம், ஒரு சிறந்த திரைப்பட வரிசையை உருவாக்க முயற்சி செய்த MARVEL நிறைய கடினமான பொருளாதார தடைகளை கடந்து IRON MAN , CAPTAIN AMERICA , THOR , மற்றும் THE AVENGERS திரைப்படங்களை வெளியிட்டது. அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் வசூல் சாதனை நிறைய நம்பிக்கையை கொடுத்தது. ஃபாக்ஸ் நிறுவம் எக்ஸ் மென் திரைப்படங்கள் வசூல் சாதனைகள் உருவாக்கும்போது DEADPOOL போல சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வெளிவந்தன. ஜாக் சனைடர் அவர்களின் இயக்கத்தில் சூப்பர் மென் திரைப்படமான மேன் ஆஃப் ஸ்டீல் - டி ஸி உலகத்தின் திரைப்படங்களின் வரிசையை உருவாக்கியது. டி ஸி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் அனிமேஷன் திரைப்படங்களும் நன்றாக இருக்கும். MARVEL க்கும் அனிமேஷன் தொடர்கள் இருக்கிறது. கடைசியாக வெளிவந்த ஜாக் சனைடர் ஜஸ்டிஸ் லீக் , ஷசாம் திரைப்படங்கள் DC க்கும் வெற்றிகளை கொடுத்துள்ளது. அவெஞ்சர்ஸ் திரைப்படங்களின் கதைக்களம் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் எண்டு கேம் திரைப்படங்களில் ஸ்டோரி ஆர்க் நிறைவு செய்து இன்னமும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. சோனியின் ஸ்பைடர் மேன் வரைகலை புத்தக கதாப்பத்திரங்களின் அடிப்படையில் வெனம் போன்ற திரைப்படங்களின் வெற்றிகளையும் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும். வருங்காலத்தில் நிறைய தரமான சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் எதிர்பார்க்கலாம். இப்போது எல்லாம் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யுரியஸ் திரைப்படங்கள் கூட லார்ஜர் தென் லைஃப் என்ற லெவல்க்கு சென்றுவிட்டது. 



No comments:

Post a Comment

GENERAL TALKS - நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கலப்பு உலோகங்கள் !

  1. Steel (Iron + Carbon) 2. Stainless Steel (Iron + Chromium + Nickel) 3. Bronze (Copper + Tin) 4. Brass (Copper + Zinc) 5. Sterling Silve...