வியாழன், 1 ஜனவரி, 2026

GENERAL TALKS - DEADPOOL PADAM URUVAANA KADHAI !!



Deadpool படத்தை உருவாக்கும் யோசனை 2000களின் தொடக்கத்தில் ஹாலிவுட்டில் சுற்றிக் கொண்டிருந்தது. X‑Men Origins: Wolverine (2009) படத்தில் வேட் வில்சன் கதாபாத்திரத்தில் நடித்த ரையன் ரெனால்ட்ஸ் கிட்டத்தட்ட காமிக் புத்தகங்களுக்கு சம்பந்தம் இல்லாத வெர்ஷன் டெட்பூல் கதாப்பாத்திரத்தை கதையில் கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டார், இனி வரும் படங்களில் ரசிகர்களுக்கு உண்மையான அசல் ஸ்டைல் ஹீரோவாக Deadpool கதாபாத்திரத்தை தர வேண்டும் என்று உறுதியானார் ரையன் ரெனால்ட்ஸ் காமிக் புத்தகங்களில் Deadpool கதாப்பாத்திரத்தின் பெரிய ரசிகராக இருந்தார், ஆனால் ஸ்டூடியோ நிறுவனங்கள் தயங்கின—Deadpool வன்முறை, நகைச்சுவை, “திரையை” உடைக்கும் ஆடியன்ஸ் உடன் பேசும் தன்மை கொண்டவர். பாரம்பரிய சூப்பர் ஹீரோ படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர். பல ஆண்டுகள் திட்டம் “தயாரிப்பு தடைகள்” எனப்படும் நிலைமையில் சிக்கிக் கொண்டது. 2014ல், டிம் மில்லர் இயக்கிய CGI டெஸ்ட் காட்சி இணையத்தில் “மர்மமாக” கசிந்தது. அதில் Deadpool காரில் சண்டையிடும் காட்சி, அவரது அடாவடி ட்ரேட் மார்க் நகைச்சுவை மற்றும் மிரட்டலான வேற லெவல் அச்டின் என்று உடன் வந்தது. ரசிகர்கள் அதற்கு பைத்தியமாகி, சமூக ஊடகங்களில் முழு படத்தை தயாரிக்க கோரினர். அந்த பெரும் எதிர்வினை 20th Century Fox நிறுவனத்தை திட்டத்தை ஆப்ரூவல் செய்ய வைத்தது. ரையன் ரெனால்ட்ஸ் பின்னர் நகைச்சுவையாக, “யாரோ” அந்த காட்சியை கசிந்துவிட்டார்கள் என்று கூறினார் அது அவரோ அல்லது மில்லரோ இருக்கலாம் என்று ரசிகர்கள் ஊகித்தனர், ஆனால் யாரும் அதை ஒப்புக்கொள்ளவில்லை. பட்ஜெட் வெறும் $58 மில்லியன் மட்டுமே, சூப்பர் ஹீரோ படங்களுக்கு மிகவும் குறைவானது. இதனால், பெரிய துப்பாக்கி சண்டை காட்சிகள் குறைக்கப்பட்டன; Deadpool தனது “துப்பாக்கி நிறைந்த பையை காரில்” மறந்துவிட்டதாக வரும் நகைச்சுவை மீண்டும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த குறைந்த பட்ஜெட், படக்குழுவுக்கு அதிக சுதந்திரம் கொடுத்தது. R‑rated நகைச்சுவை, ஆடியன்ஸை கலாய்க்கும் ஜோக்குகள், வன்முறை இவைகள் ஸ்டூடியோ தலையீடு இல்லாமல் இடம் பெற்றது. ரையன் ரெனால்ட்ஸ், நடிகராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் தீவிரமாக ஈடுபட்டார், படத்தை காமிக்ஸ் உணர்வுக்கு உண்மையாக வைத்தார் 2016 பிப்ரவரியில் வெளியான Deadpool படம் உலகளாவிய கலாச்சார நிகழ்வாக மாறியது. படம் $782.6 மில்லியன் வசூலித்து, அப்போது வரை அதிக வசூல் செய்த R‑rated படம் ஆனது. விமர்சகர்கள் அதன் புதுமையை பாராட்டினர்; ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த Deadpool கதாபாத்திரத்தை பெற்றதில் மகிழ்ந்தனர். இந்த வெற்றி, ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்களைப் பற்றிய பார்வையை மாற்றியது புதிய, பெரியவர்களுக்கு ஏற்ற காமிக் படங்களும் லாபகரமாகவும் பிரபலமாகவும் இருக்க முடியும் என்பதை நிரூபித்தது.

கருத்துகள் இல்லை:

SPECIAL TALKS - இந்த உலகமே கவனிக்க வேண்டிய பிரச்சனை !

  நம்ம வாழ்க்கையில் மொத்தமாக இந்த போதை விஷயங்களை அழிக்க வேண்டும்  மக்களே ! மதுபானத் துறை கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளத...