இங்கே துகள்மட்டத்தில் டெலிபோர்டேஷன் சாத்தியமே, ஆனால் அது குவாண்டம் டெலிபோர்டேஷன் என்ற முறையில் மட்டுமே. இதில் ஒரு துகளின் நிலை - அதாவது ஸ்டேட் பற்றிய தகவல் மற்றொரு துகளுக்கு மாற்றப்படுகிறது, துகளே இடம் மாறுவதில்லை.
விஞ்ஞானிகள் இதை என்டாங்கிள்மென்ட் (எண்டாங்கல்மென்ட்) என்ற குவாண்டம் நிகழ்வின் மூலம் நிரூபித்துள்ளனர். இரண்டு துகள்கள் ஒன்றோடொன்று இணைந்த நிலையில் இருக்கும் போது, ஒன்று அளவிடப்பட்டால் மற்றொன்றும் உடனடியாக அதற்கேற்ப மாறுகிறது.
குவாண்டம் டெலிபோர்டேஷன் முதலில் 1993-இல் கோட்பாடாக முன்வைக்கப்பட்டது. பின்னர் ஒளியணுக்கள் அதாவது போட்டான்ஸ், அணுக்கள், அயன்கள் (அயனிகள்) ஆகியவற்றில் பரிசோதனையாக வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதில் அனுப்புபவர் துகளின் நிலையை அளவிட்டு, அதன் முடிவுகளை சாதாரண தகவலாக (கிளாசிக்கல் இன்போர்மஷன்ஸ்) பெறுபவருக்கு அனுப்புகிறார்.
பெறுபவர் அந்த தகவலைப் பயன்படுத்தி தனது துகளின் நிலையை மாற்றுகிறார். இதனால், அனுப்புபவரின் துகளின் நிலை பெறுபவரின் துகளுக்கு “டெலிபோர்ட்” செய்யப்படுகிறது. ஆனால் துகளே இடம் மாறுவதில்லை; அதன் அடையாளம் மட்டுமே மாற்றப்படுகிறது.
ஆழமான ஆய்வுகள் காட்டுவது, இது குவாண்டம் கணினி மற்றும் பாதுகாப்பான தொடர்பு துறைகளில் மிகப் பெரிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஒளிக்கேபிள்கள், விண்வெளி இணைப்புகள், செயற்கைக்கோள்கள் வழியாகவும் டெலிபோர்டேஷன் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது பொருள் அல்லது ஆற்றலை நேரடியாக மாற்ற முடியாது
நிலை மட்டுமே மாற்றப்படுகிறது. அதனால், மனிதர்கள் அல்லது பொருட்களை டெலிபோர்ட் செய்வது அறிவியல் கற்பனையில் மட்டுமே சாத்தியம். தற்போதைய இயற்பியல், துகள்களின் நிலை மாற்றத்திற்கே அனுமதிக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக