ஒரு நாய் கடைக்கு வந்துச்சு!! கடைக்காரர் விரட்டி விட்டார். திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு. என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு. கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார். அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது. அப்போது ரெட் சிக்னல். அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது. கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. ஒரு குறிப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது. கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார். இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது. கடைக்காரரும் அதன் பின்னால் இறங்கினார்.. நாய் ஒரு தெருவை கடந்து நடந்து போனது/ ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது. கதவு திறந்து ஒரு ஆள் வந்தார். நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார். கடைக்காரர் ஓடி சென்று நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே.?? அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க... நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு. நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான், நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது. வேண்டுமென்றே குறைகளை சொல்லி உங்களுடைய வாழ்க்கையை கெடுக்கதான் பார்ப்பார்கள் ! இது போல விஷமத்தனமான ஆட்களின் வேலைக்கு ஆகாத கரிசனம் எதுக்கும் பிரயோஜனம் இல்லாதது என்பதால் இவர்களுக்கு வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் கவனமாக வேறு வேலை தேடிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கொஞ்சமும் மதிப்பும் மரியாதை இல்லாத வாழ்க்கையை வாழவேண்டிய கட்டாயம் உருவாகும்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025
ARC - 088 - கணக்கு இல்லாமல் அடம்பிடிக்கும் எண்ணங்கள் !
அவர் தன் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க சந்தைக்கு சென்றார். அவர் போகும் வழியில் ஓரிடத்தில் கூட்டம் கூடியிருந்தது. என்னவென்று அறிவதற்காக அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்தார். அங்கே. கழுதைகளுடன் வணிகன் ஒருவன் நின்றிருந்தான். அவனுக்கும், சிறுவன் ஒருவனுக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. வணிகனைப் பார்த்து “உங்களுக்குள் என்ன தகராறு?" என்று கேட்டார். “ஐயா! நான் வெளியூர். பத்துக் கழுதைகளின் மேல் வெல்லத்தை ஏற்றிக் கொண்டு இந்த ஊர் சந்தைக்கு வந்தேன். இங்கே வரும் போது என் கழுதைகளில் ஒன்று துள்ளிக் குதித்தது. அதன் முதுகில் இருந்த மூட்டை கீழே விழுந்து விட்டது. அந்த மூட்டை மிகுந்த எடையுள்ளதாக இருந்தது. என் ஒருவனால் அதைத் தூக்க முடியவில்லை. அப்போது இந்தச் சிறுவன் அங்கு வந்தான். அவனை அழைத்த நான், “தம்பி! இந்த மூட்டையைக் கழுதையின் மேல் ஏற்ற உதவி செய். உனக்கு நிறைய வெல்லம் தருகிறேன். நீ மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம்" என்றேன். இவனும் என்னுடன் சேர்ந்து மூட்டையைத் தூக்கி கழுதையின் முதுகில் மூட்டையை ஏற்றினான். “நான் சொன்னது போலவே, கை நிறைய வெல்லத்தை எடுத்து இவனிடம் தந்தேன். " ஆனாலும் இவன், “நீங்கள் நிறைய வெல்லம் தருவதாகச் சொன்னீர்கள். சொன்னது போல நடந்து கொள்ளவில்லை. குறைவான அளவு வெல்லமே தருகிறீர்கள். நான் பெற்றுக் கொள்ள மாட்டேன்" என்று மறுத்தான். “நான் முதலில் எடுத்ததைப் போல இன்னொரு பங்கு வெல்லம் எடுத்து நிறைய வெல்லம் இது. பெற்றுக் கொள்" என்று தந்தேன். “இதுவும் குறைவாகத்தான் இருக்கிறது. நீங்கள் நிறைய வெல்லம் தந்தால்தான் வாங்கிக் கொள்வேன் என்று மறுத்தான். " மேலும், சிறிதளவு வெல்லத்தைச் சேர்த்து இவனிடம் தந்தேன். “இதுவும் நிறைய இல்லை" என்று வாங்க மறுத்தான். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இவனோ, “நிறைய வெல்லம் கொடு. நிறைய வெல்லம் கொடு" என்று அடம் பிடிக்கிறான். அதற்குள் இங்கே கூட்டம் கூடி விட்டது. கூட்டத்தில் உள்ளவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. வேடிக்கை பார்த்தபடி நிற்கின்றனர். அந்தச் சிறுவன் குறும்பு செய்து விளையாடுகிறான் என்பது புரிந்தது. வணிகனிடமிருந்து வெல்லத்தை வாங்கினார். தன் ஒரு கையில் சிறிதளவு வெல்லத்தை வைத்தார். இன்னொரு கையில் இன்னும் அதிகமாக வெல்லத்தை வைத்தார். இரண்டு கைகளையும் அந்தச் சிறுவனின் முன் நீட்டினார். “எந்தக் கையில் எவ்வளவு வெல்லம் உள்ளது? உன்னால் சொல்ல முடியுமா?" என்று கேட்டார். “இந்த கையில் வெல்லம் குறைவாக உள்ளது. அந்த கையில் வெல்லம் நிறைய உள்ளது," என்றான் சிறுவன். “எந்த கையில் நிறைய வெல்லம் உள்ளது?" என்று கேட்டார். நிறைய வெல்லம் இருந்த கையைக் காட்டினான் சிறுவன். “இந்தக் கையில் நிறைய வெல்லம் உள்ளது என்று நீயே ஒப்புக் கொண்டாய். இதை வாங்கிக் கொண்டு போ. இனி வீணாக இங்கே தகராறு செய்யாதே," என்ற அவர் அதைச் சிறுவனிடம் நீட்டினார். வேறு வழியில்லாத அந்தச் சிறுவன் வெல்லத்தை எடுத்துக் கொண்டான். ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றான். நம்ம எண்ணங்களும் இதுபோல கணக்கு இல்லாமல் அடம்பிடிக்கலாம். நாம்தான் உண்மை நிலைகளை எப்போதும் எண்ணங்களுக்கு புரியவைக்க வேண்டும்.
ARC - 087 - வெட்டி பந்தா வேஸ்ட்டாகும் வாழ்க்கை !
ஒரு எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது. மிகவும் விலை உயர்ந்த வைரம் அது. வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து எப்படியாவது அந்த எலியை "ஷூட்"செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார். எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கியுடன் வந்துவிட்டான். அதை ஷூட் செய்ய. எலி அங்கே இங்கே என்று போக்கு காட்டி ஓடியதில் திடீரென்று ஆயிரக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன. ஆயிரக்கணக்கான எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது. எலி பிடிப்பவனுக்கு அது வசதியாக போய்விட்டது. சரியாக குறி பார்த்து அந்த எலியை டுமீல். என சுட்டான். எலி ஸ்பாட் அவுட் ! வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக்கொண்டான். ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி கேட்டான். ஆமா.! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய். என்ன காரணம்? என்றான். அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான். இப்படித்தான். “பலபேர், திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னை சேர்க்காமல், தூரத்தில் வைத்துக் கொள்வார்கள்" அதுவே. ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது. என்றான். உறவுகளும் அப்படித்தான் சிலர் இடையில் வந்து அழிந்துபோகும் செல்வத்தை நம்பி கடவுள் கொடுத்த உறவுகளை அசட்டை செய்து விட்டுவிடுகிறார்கள். ஆயிரம் கோடி செல்வம் இருந்தாலும் சொந்த பந்தமும், நல்ல நட்புமுமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும். நீங்கள் எப்போதுமே உங்களுடைய மனதுக்குள் தப்பான எண்ணங்களை எந்த வகையிலும் வளர்த்துக்கொள்ள விரும்ப வேண்டாம். உங்களோடு பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களுக்கு சரியான விஷயம் என்று என்ன படுகிறதோ அதனையே செய்யுங்கள் !
ARC - 086 - இந்த உலகத்தில் எல்லாமே மாறலாம் !
இங்கே எப்போதுமே பணத்துக்கு மட்டும்தான் மதிப்பு. ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்து சென்றபோது செருப்பு பிஞ்சுபோச்சு. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டுக்காரரை அழைத்து. ஐயா, என் செருப்பு பிஞ்சுபோச்சு. இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப் போறேன். காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார். அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து. ஐயா. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்.! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான். நீங்க தாராளமாக வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார். அதுக்கு பிறகு அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி செருப்பை பெற்று கொண்டார் சில ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார். அவரின் இறுதி ஊர்வலம் செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது. அப்போது நல்ல மழை. பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று. ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை. அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு. பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர். அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார். ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? "மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று. அவ்வளவுதாங்க வாழ்க்கை ஒரு செருப்புக்கு கிடைக்குற மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது. ஆக இந்த கதையில் செல்வந்தருக்கு மரியாதை இல்லை. அவரோடு இருந்த பணம் என்ற பேப்பர்தான் அவருக்கான மதிப்பை கொடுக்கிறது. இதனால்தான் நம்பிக்கை வைக்கும்போது யாராக இருந்தாலும் கவனமாக ஆராய்ந்து நண்பர்களாக வேண்டும். நமக்கு நன்மை செய்துவிட்டார்கள் என்பதற்காக கண்களை மூடிக்கொண்டு நம்பக்கூடாது. இந்த உலகத்தில் எல்லாமே மாறலாம், சமூகத்துக்கு பிடிக்க வேண்டும் என்று இருக்காதீர்கள். உங்களுக்கு சரியான பாதை எதுவோ அதனையே தேடித்தேடி செல்லுங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ
நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...

-
எழுத்தாளர் ஜோடி சுபா — சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் — இன்றைய காலத்திய மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்கள். குறி...
-
சுஜாதா ரங்கராஜன், தமிழ் இலக்கியத்தின் மிகப் புகழ்பெற்ற நவீன எழுத்தாளர்களில் ஒருவராக, அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் மனித உணர்வுகளை திறம்பட...