ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

ARC - 089 - மதிப்பும் மரியாதையும் இல்லாத வாழ்க்கையா !



ஒரு நாய் கடைக்கு வந்துச்சு!! கடைக்காரர் விரட்டி விட்டார். திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு. என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு. கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார். அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது. அப்போது ரெட் சிக்னல். அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது. கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது.  ஒரு குறிப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது. கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார். இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது. கடைக்காரரும் அதன் பின்னால் இறங்கினார்.. நாய் ஒரு தெருவை கடந்து நடந்து போனது/  ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது. கதவு திறந்து ஒரு ஆள் வந்தார். நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார். கடைக்காரர் ஓடி சென்று நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே.?? அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க... நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு. நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான், நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது. வேண்டுமென்றே குறைகளை சொல்லி உங்களுடைய வாழ்க்கையை கெடுக்கதான் பார்ப்பார்கள் ! இது போல விஷமத்தனமான ஆட்களின் வேலைக்கு ஆகாத கரிசனம் எதுக்கும் பிரயோஜனம் இல்லாதது என்பதால் இவர்களுக்கு வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் கவனமாக வேறு வேலை தேடிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கொஞ்சமும் மதிப்பும் மரியாதை இல்லாத வாழ்க்கையை வாழவேண்டிய கட்டாயம் உருவாகும். 

கருத்துகள் இல்லை:

ஜெட் லீ அவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் !!

  Jet Li Filmography Jet Li Movies List with Years 1982 – The Shaolin Temple 1984 – Kids from Shaolin 1986 ...