Sunday, February 2, 2025

ARC - 086 - இந்த உலகத்தில் எல்லாமே மாறலாம் !






இங்கே எப்போதுமே பணத்துக்கு மட்டும்தான் மதிப்பு. ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்து சென்றபோது செருப்பு பிஞ்சுபோச்சு. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டுக்காரரை அழைத்து. ஐயா, என் செருப்பு பிஞ்சுபோச்சு. இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப் போறேன். காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார். அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து. ஐயா. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்.! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான். நீங்க தாராளமாக வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார். அதுக்கு பிறகு அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி செருப்பை பெற்று கொண்டார் சில ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார். அவரின் இறுதி ஊர்வலம் செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது. அப்போது நல்ல மழை. பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று. ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை. அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு. பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர். அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார். ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? "மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று. அவ்வளவுதாங்க வாழ்க்கை ஒரு செருப்புக்கு கிடைக்குற மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது. ஆக இந்த கதையில் செல்வந்தருக்கு மரியாதை இல்லை. அவரோடு இருந்த பணம் என்ற பேப்பர்தான் அவருக்கான மதிப்பை கொடுக்கிறது. இதனால்தான் நம்பிக்கை வைக்கும்போது யாராக இருந்தாலும் கவனமாக ஆராய்ந்து நண்பர்களாக வேண்டும். நமக்கு நன்மை செய்துவிட்டார்கள் என்பதற்காக கண்களை மூடிக்கொண்டு நம்பக்கூடாது.  இந்த உலகத்தில் எல்லாமே மாறலாம், சமூகத்துக்கு பிடிக்க வேண்டும் என்று இருக்காதீர்கள். உங்களுக்கு சரியான பாதை எதுவோ அதனையே தேடித்தேடி செல்லுங்கள். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...