சனி, 25 மே, 2024

TAMIL TALKS - EP.97 - இன்றைக்கு தேதிக்கு மனதில் இருக்கும் கருத்துக்கள்




நிறைய நேரங்களில் நாம் ஸ்மார்ட்டாக இருப்பதாக நினைக்கிறோம் , இந்த உலகத்துடைய மொத்த ஸ்மார்ட்னஸ்ஸையுமே பார்த்தால் நாம் வெறும் சிறிய மழை துளிதான். நமக்கென்று வெற்றி அடைய கண்டிப்பாக ஏதேனும் மாயாஜாலம் தேவை. இது எதனால் நான் சொல்கிறேன் என்றால் இந்த மொத்த உலகத்துக்கும் ஒரு கவனமான மாற்றம் தேவை. பிளாஸ்டிக் பொல்யூஷன் முதல் தாய் குலத்துக்கு எதிரான குற்றங்கள் வரை எல்லா விஷயங்களையும் வெற்றி அடைய நமக்கு ஒரு மிகப்பெரிய சக்தி தேவைப்படுகிறது. இந்த குற்றங்களை தடுக்க அதனை விட பெரிய குற்றங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் மோசமான எண்ணங்களில் இருந்து யோசிப்பவர்களுடைய கருத்து. நம்ம கண்களின் முன்னால் குற்றங்கள் நடக்கிறது. இந்த குற்றங்களை தடுக்க மட்டும் அல்ல இந்த குற்றங்களை தடுத்த பின்னால் நம்மை இந்த குற்றங்களின் பின்னணியில் இருப்பவர்களிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும் அதிகமான சக்தி தேவைப்படுகிறது. நாம் எப்போதுமே வாழ்க்கையை விளையாட்டாக நினைத்துககொள்கிறோம். இப்படி நினைப்பதால் நமக்கு வாழ்க்கையை சமாளிக்க போதுமான சக்திகள் இருப்பதாக நாம் ஒரு போஸிட்டிவான கருத்தை நமக்குள்ளே கொண்டுவந்து போதுமான சக்திகள் இருந்தாலும் இல்லை என்றாலும் பிரச்சனைகளை எதிர்த்து வெற்றிகளை அடைகிறோம். இருந்தாலும் இதுவரைக்கும் நடந்த பிரச்சனைகளில் நான் கடவுளிடம் சொல்லிக்கொள்வது என்னவென்றால் இதுவரைக்கும் நடந்த எல்லா விஷயங்களிலும் பாதிப்பு எனக்கு அதிகமாக இருக்கிறது. கண்டிப்பாக பெரிய காம்பென்ஸேஷன் கொடுத்தே ஆகவேண்டும். இல்லையென்றால் இந்த உலகத்தை காப்பாற்றவே முடியாது. இந்த உலகத்தை சப்போஸ் இதுவரைக்கும் பண்ணியது போல ஒரு கொடிய மனிதனை உருவாக்கி அராஜகம் பண்ணி அட்டூழியம் பண்ணி மக்கள் எல்லாம் கஷ்டப்படும்போது கடவுள் அவதாரம் எடுத்து பூமிக்கு வந்து வலியும் வேதனைகளையும் அனுபவிப்பது போல நடித்து கெட்டவனின் வாழ்க்கையை நாசம் பண்ணி கடைசியில் அவனை காலி பண்ணிவிட்டு நல்லவனாக ஸீன் போட்டுவிட்டு கெத்தாக வாழ்க்கையை வாழ்வது எல்லாம் அப்போது மொக்கை சிஸ்டம் வைத்து படிப்பறிவு இல்லாத மக்களை ஏமாற்றுவதற்கு செட்டாக இருந்து இருக்கலாம். இப்போது படிப்பும் ஸ்மார்ட்னஸ்ஸூம் ஒருங்கிணைந்த ஆடியன்ஸ்ஸாக இருப்பதால் கடவுள் அவதாரம் எல்லாம் வேலைக்கே ஆகாது. நல்லோருக்கு சக்திகளை கொடுப்பதை விட நல்ல யோசனை என்று வேறு இல்லை. அவ்வளவுதான் என்னுடைய கருத்து. மற்றபடி இந்த வலைப்பூவுக்கு ஆதரவு கொடுத்ததுக்கு நன்றிகள். நான் உங்களுடைய சப்போர்ட்டை அப்ரிஷியேட் பண்ணுகிறேன்.  

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...