Wednesday, May 29, 2024

GENERAL TALKS - இங்கே வெற்றிக்கான செயல்பாடு என்ன ?


தொடர்ந்து தோல்விகள் வந்துகொண்டே இருக்கிறது. செய்ய வேண்டிய செயல்களும் அளவுக்கு அதிகமாக உள்ளது. நாம் என்னதான் மிகவுமே தெளிவாக சொன்னாலும் நாம் சப்போர்ட் பண்ணுவார்கள் என்று நினைப்பவர்கள்தான் கடைசியில் நம்மை காலை வாரிவிட்டு சென்றுவிடுகிறார்கள். மனதுக்கு இதுவே மிகப்பெரிய பாரமாக உள்ளது. தரையில் விழுந்து உடைவது நான் அல்லவா ? இங்கே அடிப்படையில் விதியை மாற்றுவது அவ்வளவு சாத்தியமான விஷயம் கிடையாது. ஒரு கண்ணாடி பொருள் தரையை தொட்டு உடையும் முன்னால் எப்படியாவது தடுத்து நிறுத்தி பிடிக்கதான் பார்க்கின்றோம் ஆனால் வாழ்க்கை அவ்வாறு பிடிக்க இடம் கொடுப்பது இல்லையே ? இந்த பொருள் உடைய வேண்டும் என்று விதி முடிவு பண்ணிவிட்டால் நாம் என்னதான் பாதுகாப்பு கொடுத்தாலும் விதி அந்த பொருளை உடைத்துவிடுகிறது. நாம் என்னதான் ஒருவரை காப்பாற்ற நினைத்தாலும் விதி நினைத்தால் அவர்களுடைய வாழ்க்கையை நாசமாக்க செய்கிறது அல்லது சாகடிக்கவும் செய்கிறது. இருந்தாலும் வெற்றியை அடைந்தே ஆகவேண்டும். நாளைக்கு கடவுள் வந்து முன்னால் நின்றால் கூட நம்முடைய வெற்றிகளையே மதிப்பார். நம்முடைய பொருட்களை எல்லாம் மதிக்கவே மாட்டார். இதுதான் இந்த நேரம் நான் சொல்லும் கருத்து. இந்த வலைப்பூவின் தகவல்கள் மற்றும் கருத்து பதிவுகள் பிடித்து இருந்தால் மறக்காமல் சந்தாவை பண்ணிக்கொள்ளுங்கள் !

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...