Tuesday, May 28, 2024

CINEMA TALKS - SARKARU VAARI PATTA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




பொதுவாக வங்கி கடன்கள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்களில் கடன்களை ஏழை எளிய மக்களிடம் இருந்து வசூல் பண்ணும் அணுகுமுறை மக்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதை மிகவும் தெளிவான கம்மேர்ஷியல் படமாக இந்த படம் இருக்கிறது. மக்கள் ரசிக்கும்படியான ஒரு தெலுங்கு திரைப்படத்தில் காதல், ஆக்ஷன், காமெடி , ஸாங்க்ஸ் என்று எல்லாமே கலந்த கதையாக இந்த படத்தின் திரைக்கதை இருப்பதால் கமேர்ஷியல் படங்களில் இருக்கும் அந்த ஸ்டைல்லை விட்டுவிடாமல் திரைக்கதையில் பின்னப்பட்ட படம் என்று இந்த படம் மாஸ் காட்டி இருக்கிறது. மகேஷ்பாபுவின் ஐக்கானிக்கான பஞ்ச் டயலாக்குகள் , மரண மாஸ் சண்டை காட்சிகள் மேலும் கியூட்டான ஆட்டிட்யூட் ரொமான்ஸ் காட்சிகள் என்று கிட்டத்தட்ட 2.30 மணி நேரத்துக்கு ஆடியன்ஸ்க்கு வழக்கமான மகேஷ் பாபுவின் பிளாக் பஸ்ட்டர் படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காட்சிகள் எல்லாம் இந்த படத்தில் தாறுமாறாக அமைந்துள்ளது.கீர்த்தி சுரேஷ் வழக்கமான சமர்த்தான கதாநாயகியாகவே இந்த படத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.இந்த படத்தில் எத்தனை காட்சிகள் வேகமாக நகர  செய்தாலும் கடைசியில் இந்த படத்தின் கருத்தை நன்றாகவே கதையில் சொல்லி முடித்து இருக்கிறார்.  இயக்குனர் கமேர்ஷியல் ஆங்கில்லில் இருந்து ஃபைனான்ஸ் லெவல் அட்டூழியங்களை தட்டி கேட்கும் விதமாக கருத்தாக சொல்ல வந்த விஷயத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக மிகவும் கஷ்டப்படுகிறார் அதுவே இந்த படத்தை நன்றாக பிளஸ் பாயிண்டாக இருக்கிறது. நிறைய கமர்சியல் காட்சிகள் இந்த படத்தில் வந்து கொண்டே இருந்தாலும் படத்தோட கதை இந்த படத்தில் முதல் காட்சி யிலிருந்து கடைசி காட்சி வரை சரியாக பிரித்து அமைக்கப்பட்டுள்ளது மற்றபடி தெலுங்கு படங்களில் இருக்கக்கூடிய சண்டைக் காட்சிகளில் குறைவே இல்லை மேலும் தெலுங்கு படங்களில் இருக்கக்கூடிய கமர்சியல் வேல்யூக்களுக்கும் இந்த படத்தில் குறைவே இல்லை. நடிப்பு பிரமாதமானதுதான் ஒருவரி கதையாக இருந்தாலும் இந்த படத்துடைய கதைக்களத்தை நன்றாகவே கொண்டு வந்துள்ளார்கள். வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு தரமான படம் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் இந்த படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...