இங்கே எப்போதுமே பணம் தகுதியை உள்ளவர்களுக்கு மட்டுமே சேரும் என்று சொல்ல முடியாது. கெட்டவர்களின் கைகளில் பணம் என்ற சக்தி கிடைக்கும்போது அவர்களுடைய மோசமான எண்ணங்களை எல்லாம் அவர்களை விட சக்திகளில் பொருளாதாரத்தில் குறைந்தவர்களை நன்றாக போட்டு வாட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். ரஞ்சித் , மாரி செல்வராஜ் , வெற்றி மாறன் படங்களை எல்லாம் பார்க்க பிடிக்கவில்லை என்று பிறந்ததில் இருந்தே உயர்வான பிறப்பு மற்றும் வளர்ப்பு என்று வசதி வாய்ப்புகளால் வாழ்ந்து மற்றவர்களை கஷ்டப்படுத்தியே சந்தோஷமாக இருந்த மனங்கள் பேசுகிறது. குழந்தையாக இருக்கும்போதே யாரை எப்படி நடத்த வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து விடுகிறார்கள். இவர்களை சொல்லி குற்றம் இருக்காது. இருந்தாலும் இவர்கள் பண்ணும் விஷயங்கள் எல்லாம் குற்றங்கள்தான். ஒரு மனிதனை சக மனிதன் நன்றாக மதிக்க வேண்டும். ஒரு வீட்டு குழந்தையை இன்னொரு வீட்டு குழந்தை வளர்ந்து பெரிய ஆளாக மாறினாலும் இப்படித்தான் தாழ்வாக நடத்த வேண்டும் என்று எல்லாமே சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார்கள். இது எல்லாமே சமூகத்தில் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று இவர்கள் கண்டுகொள்வதே இல்லை. இவர்களிடம் எப்படியோ பணம் நன்றாக சேர்ந்துவிடுகிறது. பிறப்பு முதல் பிரிவிலேஜ் வி.ஐ. பி வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருப்பதால் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு சாம்பார் இல்லாமல் வெறும் தயிரையும் ரசத்தையும் பிசைந்து சாப்பிட்டு குழந்தைகளை அன்பாக வளர்த்து கொடியோர் கைகளில் சிக்காமல் பார்த்துக்கொண்டு பெற்றவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள் என்று இவர்களுக்கு எல்லாம் எப்படி புரியப்போகிறது. ? இவர்கள் வார்த்தைகளை கடைசி வரைக்கும் நம்பவே முடியாது. வசதி வாய்ப்புகள் இருப்பதால் நம்பிக்கை வைத்தவர்களை நன்றாக தூக்கி எறிந்துவிடுவார்கள். வசதி வாய்ப்புகள் இருப்பதாக இருந்தால் அவர்கள் தலைவராக இருக்க தகுதி உள்ளவர்கள் என்று சொல்ல கூடாது. மக்களுடைய கஷ்டத்தை எடுக்க வேண்டும் என்று போராடுகிறார்கள் , இதுவரைக்கும் மக்களுக்கு நடந்த அநியாயங்கள் இனிமேல் நடக்க கூடாது என்று விழிப்புணர்வை உருவாக்குகிறார்கள் இளைய தலைமுறை இயக்குனர்கள். இவர்களை சப்போர்ட் செய்யவில்லை என்றாலும் உங்களிடம் வசதி வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக தவறாக பேசாதீர்கள் !
No comments:
Post a Comment