இது ஜப்பானில் நடக்கும் வளர் இளம் பருவ காலங்களில் நிறுத்தி நிதானமாக சொல்லப்பட்ட பள்ளிக்கூட காதல் கதையாக இருக்கிறது. இந்த படம் இதே பெயரை வைத்துள்ள ஒரு தொடரின் கிளைமாக்ஸ் போர்ஷன்க்கான ஒரு திரைப்பட அடாப்ஷனாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகி எப்போதுமே விளையாட்டுட்டுத்தனமாக அவருடைய கதாநாயகரை கலாய்த்து கொண்டு இருக்கிறார். இவர்கள் இருவருமே பள்ளிக்கூடம் மாணவர்களாக இருப்பதால் விடுமுறை காலங்களில் இவர்கள் தனியாகத்தான் இருக்க வேண்டும் என்று கதாநாயகர் கடினமாக முடிவு எடுக்கிறார் கதாநாயகனுக்கு எப்படியாவது கதாநாயகி பேச்சு சாமர்த்தியத்தில் தோற்கடிக்க வேண்டும் என்று ஆசைதான் இருக்கிறது. ஆனால் கதாநாயகி எப்போதுமே கதாநாயகனை காதலித்துக் கொண்டுதான் இருக்கிறாள். ஒரு அமைதியான சந்தோஷமான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் எப்படி நடக்கக்கூடிய சம்பவங்கள் கதாநாயகியின் காதலை கதாநாயகனிடம் சொல்ல வைக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை. பேண்டஸி காட்சிகள் எல்லாம் இல்லாமல் சராசரி ரொமான்டிக் திரைப்படம் ஆகவே இந்த படம் இருக்கிறது. ஜப்பானிய அனிமேஷன் படங்கள் உங்களுக்கு ஃபேமிலியராக இருந்தால் இந்த படம் உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும். மற்றபடி தமிழ்நாடு ஆடியன்ஸ்க்கு என்று பார்த்தால் இதுவுமே ஒரு சராசரியான காதல் கதை தான்.பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் நம்முடைய வாழ்க்கை சூழ்நிலை நடக்கக்கூடிய ஒரு சராசரியான காதல் கதை நமக்கு வேண்டுமென்றால் இந்த படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். இதுதான் இந்த படத்தை பற்றியே என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் இந்த படத்தை பற்றி உங்கள் கருத்துக்களைப் போல மேலும் நிறைய கருத்துக்கள் தெரிந்து கொள்ள இந்த வலைப்பூவை நீங்கள் சந்தா செய்து கொள்ளவும். இந்த மாதிரியான அருமையான காதல் கதைகளை பார்த்தால் நம்ம தமிழ் படங்களில் இண்டர்வெல் ஷாட்டில் ஹீரோயினை தீர்த்துக்கட்டும் அட்லி படங்களை எல்லாம் பிளேலிஸ்டில் இருந்து எடுத்துவிடுவீர்கள் என்பது சிறப்பான ஒரு ஃபன் ஃபேக்ட் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
GENERAL TALKS - பிரபஞ்சத்துக்கு எதிராக போராட்டம் !!
பிரபஞ்ச சக்திகளை எதிர்த்து நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் கடைசியில் பூஜ்ஜியமாக முடிகிறது என்ற உணர்வு பலருக்கும் வருகிறது. ஆனால், பிரபஞ்சத...
-
என் செல்லம் என் சிணுக்கு என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி அரே மியாவ் மியாவ் ஹே… மியாவ் மியாவ்...
-
அமெரிக்காவில் 'சாட்டர்டே நைட் லைவ்' என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நண்பர்களே, அந்த நிகழ்ச்சியைப் பற்றிய பெரும்பாலான தகவல்களை இ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக