Saturday, May 25, 2024

TAMIL TALKS - EP. 95 - மன நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோமா ? - 1



 

இந்த உலகத்தில் பிறந்ததுக்கான காரணமாக என்னதான் சொல்ல முடியும் ? இப்போதைக்கு என்னுடைய மனதுக்குள்ளே இருக்கக்கூடிய காரணம் என்னவென்றால் ஒரு விதமான மன நிறைவை அடைவதுதான். நம்ம மனதுக்குள்ளே ஒரு மன நிறைவை அடையவேண்டும். மனது நிறைவாக இல்லை என்றால் வாழ்க்கை சந்தோஷமாக அமையவே அமையாது. இந்த மன நிறைவைத்தான் மக்கள் எல்லோருமே தேடுகிறார்கள். கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் வாழ்க்கையில் எல்லாமே இருந்தாலும் இந்த மன நிறைவும் சேர்ந்து இருக்கும். நாம் உண்மையில் எப்படி வாழவேண்டும் என்று ஆசைப்பட்டோம் ? நம்முடைய உள்மனது சொல்லும் வாழ்க்கை என்ன ? அந்த வாழ்க்கை ரொம்ப எக்ஸ்பென்ஸிவ்வாக இருந்தாலும் அப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தால் மட்டும்தான் மன நிறைவை அடைய முடியும். மறு ஜென்மங்களில் நமக்கு நம்பிக்கை கிடையாது. இருப்பது ஒரு உயிர்தான். இங்கே அவ்வளவு தங்கமாக வாழ்ந்தாலும் வாழ்க்கையில் விதி நமக்கு கஷ்டத்துக்கு மேலே கஷ்டம் கொடுத்து உலகம் மன நிறைவை கடைசி வரைக்கும் அடையமுடியாத அளவுக்கு மிகவும் தெளிவாக வைத்துசெய்துவிடுகிறது. உங்களுடைய ஆசைகளிலும் உங்களுடைய நேசிப்பவர்களுக்கு நீங்கள் என்னென்ன செய்யவேண்டும் என்று பிளான் போடுவதிலும் மனநிறைவு கிடைக்காது. அந்த ஆசைகள் எல்லாமே நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றினால் மட்டும்தான் மனதுக்குள்ளே நிறைவு கிடைக்கும். கடைசி காலத்தில் சாகுமபோது அப்பாடா ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டோம் என்ற சந்தோஷம் உங்களுடைய மனதுக்குள்ளே உருவாவதை நீங்கள் பார்த்து சந்தோஷப்படுவீர்கள். உங்களுடைய மனதின் ஆசைகளை நிறைவேற்றினால் மட்டுமே மன நிறைவு கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. மொத்ததமாக முழுமையாக நிறைவேற்ற வேண்டும். எல்லா ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டும். நம்ம மனதுக்கு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து சாவதுதான் வெற்றி , நம்ம மனதுக்கு நிறைவாக இல்லை , பற்றாற்குறையாக இருக்கிறது என்றால் அது கண்டிப்பாக ரொம்ப பாதிப்புகளை கொடுக்கக்கூடிய விஷயம். இந்த மன நிறைவு கிடைக்காமலே ஒருவர் இறந்து போகிறார் என்றால் அவரை விட அதிர்ஷ்டம் கெட்ட மரணம் வேறு யாருக்குமே அமையாது இங்கேயும் ஒரு ஸ்பெஷல் கேஸ் இருக்கிறது. அதாவது நடிப்பவர்கள். நடிப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நல்ல மனநிறைவு கிடைத்தால் எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டுமோ அப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள். நடிப்பதில் கிடைக்கும் மன நிறைவே போதும் வாழ்க்கையை சமாளித்துவிடலாம் என்ற ஒரு அபாரமான நம்பிக்கை அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கிறது. இந்த உலகத்தில் எல்லாமே கிடைத்தது போல கற்பனை பண்ணிக்கொண்டு வாழ்வது கொஞ்சம் தர்மசங்கடமான செயல். கற்பனையை சாப்பிட முடியாது. ஆனால் நிஜத்தை அடைந்தால் சாப்பிடலாம். நமக்கான மன நிறைவு உண்மையான பொருட்களில் மட்டுமே உள்ளது. கற்பனை பொருட்களுக்கு மதிப்பு இல்லை என்று தெரிந்துகொண்டு நிஜமான பொருட்களை வாங்க வேண்டும். மன நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும். கண்ணால் பார்க்கும் எல்லாவற்றையும் அடைந்தால்தான் அந்த மன நிறைவு கிடைக்கும் என்றால் அப்படி அடைவது தவறே இல்லை. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...