Tuesday, May 28, 2024

TAMIL TALKS - EP. 100 - நம்ம நம்பிக்கையும் நாணயமும் !



பொதுவாக தொழில் முறைப்படி நாம் யாருக்காவது பரோமிஸ் பண்ணிக்கொடுத்தால் கண்டிப்பாக நாம் நிறைவேற்ற வேண்டும். நம்மால் நிறைவேற்ற முடியாத சத்தியங்களையும் வாக்குகளையும் கொடுப்பது மிக பெரிய தவறு என்பதை விடவும் நம்மை நம்பி இருப்பவர்களுக்கு நஷ்டத்தையும் பின்னடைவையும் கொடுத்துவிடும். நம்பிக்கைகள் இருந்தால்தான் நம்மை நம்பி நமக்காக நிறைய வேலைகளை அல்லது ப்ராஜக்ட்களை கொடுப்பார்கள். நமக்கு அந்த அளவுக்கு திறமை இல்லை என்னும் பட்சத்தில் நாம் எதுக்காக இப்படி எல்லாம் பிராமிஸ் கொடுத்து மாட்டிக்கொள்கிறோம் என்று நிச்சயமாக புரிவதே இல்லை. இப்படி ஒரு பிராமிஸ் பண்ணிக்கொடுத்து அவைகளில் மாட்டிக்கொண்டால் எப்படி வெளியே வருவது ? இந்த மாதிரி நேரங்களில் மட்டும்தான் நம்முடைய வாழ்க்கையில் யோசிக்கவும் முடிவை எடுக்கவும் நிறைய நேரம் நமக்கு கிடைக்கிறது. நாணயம் என்பது பண அளவிலான வரவு செலவுகளை மிக சரியாக பண்ணிக்கொண்டு இருந்தால்தான் கிடைக்குமே தவிர்த்து எப்போதுமே சும்மா சாலையில் போகிறவர் வருகிறவர் எல்லாம் நாணயமான மனிதர் என்று சொல்லிவிட முடியாது. நமக்கு பெர்ஸனலாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை என்று வந்தால் நாம் வாய்ப்புகளை எதிர்பார்ப்பதில் ஒரு நியாயம் உள்ளது ! இன்றைக்கு தேதிக்கு என்னுடைய பிரச்சனைகளை சமாளிக்க என்னுடைய மூளையின் ஏதேனும் ஒரு மூலையில் இருந்து நன்றாக யோசித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். காரணம் என்னவென்றால் நிறைய மிகப்பெரிய லட்சியங்களாக நாம் வைத்துள்ளதால் இதுபோன்ற விஷயங்களுக்காக நிறைய பணம் மற்றும் நிறைய நேரம் செலவு செய்வது கண்டிப்பாக தவறானது. 

No comments:

ARC - 063 -