இன்றைக்கு தேதிக்கு எல்லாமே ஆன்லைன் வந்ததால் எதையுமே நம்ப முடியவில்லை ! போதாத குறைக்கு AI விஷயங்கள் வேறு இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் எல்லாமே ரெகார்ட் செய்து நம்மை மிகவும் பிளாக் மெயில் பண்ணக்கூடிய அடிமையாக மாற்றுகிறது ! இன்னைக்கு தேதிக்கு AI வந்ததும் டெக் கம்பெனிகளுக்கு நன்றாக கொம்பு சீவி விட்டது போல ஆகிவிட்டது. இணையத்தில் போட்டோ , வீடியோ , ஆடியோ , கால் ரெகொரடிங் , மெசேஜ் , லொகேஷன் என்று அனைத்தையும் AI கவனித்து இவர் நல்லவர் என்றும் இவர் கெட்டவர் என்றும் AI அதுவாக முடிவுகளை எடுத்துவிடுகிறது ! இன்னைக்கு தேதிக்கு நெட்பிலிக்ஸ் ஒரு மாதத்துக்கு கேட்கும் தொகை சுமாராக 1677/- ரூபாய் பிரதி மாதத்துக்கு கேட்கிறது ! இன்னைக்கு தேதிக்கு சுமாராக 150 கிலோமீட்டர்களை உபர் டாக்சியில் கடக்க வேண்டும் என்றால் நீங்கள் 26000/- பக்கமாக கொடுக்க வேண்டும் ! இப்படி டேக்னாலஜி என்று வந்த கம்பெனிகள் எல்லாம் மக்களிடம் அதிகமாக காசுதான் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் ! உங்களுக்கு குறைவான காசில் இந்த சேவைகள் எல்லாம் வேண்டும் என்றால் மாசம் மாசம் கடமைக்கு 4000/- கம்பெனிக்கு செலுத்தும் வகையில் சந்தாதாரராக மேம்பேர்ஷிப் போட்டு மாறிவிடுங்கள் என்று கட்டாயப்படுத்துகிறது. இப்படி டெக்னோலஜி மக்களுக்கு பிரயோஜனம் இருக்கும் ஒரு விஷயமாக இல்லாமல் மக்களை நசுக்கும் ஒரு கார்ப்பரேட் பணம் தின்னும் ஒட்டுண்ணியாக மாறி இருக்கிறது ! இது அடுத்த தலைமுறைக்கு பெரிய ஆப்பு என்று மாற அதிகமான வாய்ப்புகள் உள்ளது !
No comments:
Post a Comment