செவ்வாய், 28 மே, 2024

CINEMA TALKS - ALAIPAYUTHE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



ஒரு நிஜமான வாழ்க்கையில் நடக்கும் லவ் ஸ்டோரி என்று இந்த படத்தை பார்த்தவுடன் நம்பிக்கை வரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் ! அவ்வளவு எதார்த்தமான ஆனால் ரசிக்கும்படியான காதல் கதைதான். சுதந்திரமாக குடும்பத்துக்கு தெரியாமல் காதலித்து ரேஜிஸ்ட்டர் மேரேஜ் செய்து வீட்டை விட்டு பிரிந்து வந்து காதல் செய்து திருமணம் செய்து கொள்ளும் இரண்டு பேருடைய இணைந்த வாழ்க்கை ! புதிதாக வாழ்க்கையை தொடங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் பார்க்க நினைக்கும் இவர்களுடைய வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது ? எப்படி இவர்களுடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய கஷ்டங்களை எல்லாம் வெற்றி அடைந்து சிறப்பான ஒரு காதல் கதையை அமைக்கிறார்கள்  ? என்பது தான் இந்த படத்தின் ஒரு வரி கதை. இயக்குனர் மணிரத்தினம் சராசரியாக பெண்களை காட்சி பொருளாக மட்டும் அமைக்க வேண்டும் என்றமற்ற இயக்குனர்களின் முட்டாள்தனமான கருத்துக்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு மிகவும் ஸ்ட்ராங்கான கேரக்டரை கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் கொடுத்து இருக்கிறார். ஒரு சில குறிப்பிட்ட காட்சிகளில் சராசரியான காதலுக்கு உள்ளே   நடக்கும் இயக்கமும் பிரிவும் பொறாமையும் தவிப்பும் ரசனையும் என்று நிறைய விஷயங்களை இந்த படத்தில் நன்றாகவே கொடுத்துள்ளார். நடிகர் மாதவன் மற்றும் நடிகை ஷாலினி அவர்களின் ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் வேறு லெவலாக இருக்கிறது சாப்ட்வேர் இன்ஜினியராகவும் டாக்டராகவும் படிக்கக் கூடியவர்கள் இரண்டு பேரும் அவர்களோடு துறையில் வெற்றி அடைய நிறை கஷ்டப்படும்போது குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பதை மிகவும் வருந்துவது இந்த படத்தில் நன்றாகவே காட்டப்பட்டுள்ளது‌. படத்துடைய பாடல்களும் பின்னணிய செய்யும் இந்த படத்துக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கின்றன. மக்களின் ரசனை கேட்டு புதிய தலைமுறை காதல் கதையாக இத்தனை படங்கள் வந்தாலும் காதல் கதைகளுக்கென்று தனி ஒரு இடம் இந்த படத்தில் இருக்கிறது. இந்த காலத்தில் இந்த மாதிரியான பட்ஜெட் படங்களை கண்டிப்பாக மக்கள் எல்லா கட்டத்திலுமே எதிர்பார்க்கலாம் ! காரணம் என்னவென்றால் எப்போதுமே கமேர்ஷியல் படங்கள் மட்டுமே சினிமாவில் நிறைந்து இருந்தால் எப்படி ? உண்மையான காதல் என்பது என்ன என்றும் அதனுடைய இனிமையை சொல்லவும் இளைய தலைமுறைக்கு இந்த மாதிரி நல்ல படங்கள் கண்டிப்பாக தேவை !

கருத்துகள் இல்லை:

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16

  நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...