புதன், 29 மே, 2024

GENERAL TALKS - உடலும் மனதும் சரியான நிலையில் இருக்க வேண்டும் !



நம்ம உடலும் மனதும் சரியான நிலைமையில் இல்லாத போது நாம் என்னதான் முயற்சிகள் பண்ணினாலும் நம்மால் வெற்றி அடைய முடியாது . இது நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் தப்பான விஷயங்களாலும் நம்முடைய வாழ்க்கைக்கு சப்போர்ட் இல்லாத சுற்றுப்புறச் சூழல்களாலும் கூட நடக்கிறது. பெரும்பாலும் பணக்கார குடும்பங்களில் இருப்பவர்கள் இது போன்ற கஷ்டங்களை அனுபவிப்பது இல்லை. உடலையும் மனதையும் எப்போதும் சரியாக நிலைமையில் பார்த்துக் கொள்ள அவர்களிடம் எப்போதுமே போதுமான பணம் இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் உடலையும் மனதையும் சரியான முறையில் பராமரிக்கவில்லை என்றால் நாம் வெற்றியை அடைந்தாலும் அந்த வெற்றிக்கான சந்தோஷம் நமக்கு இருக்காது. இது ஒரு விதமான கலை வாழ்க்கையின் ஒரு கட்டத்தில்தான் இத்தகைய கலையை நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும். வெற்றியடைய போராடுபவர்கள் அனைவருக்குமே வெற்றி கிடைக்காது ஏனென்றால் ஜெயிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். யாராவது வாழ்க்கையில் வெற்றி அடைவது சுலபமான விஷயம் என்றும் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது சுலபமான விஷயம் என்றும்  சொன்னால் அவர்களிடம் ஏற்கனவே பணமும் வெற்றியும் இருக்கிறது என்று தான் அர்த்தம். இல்லையென்றால் அவர்கள் உங்களை ஏமாற்றவும் மேலும் தவறாக பயன்படுத்தவும் இத்தகைய வார்த்தைகளை சொல்லலாம். நம்முடைய உடலும் மனதும் எதனால் இப்போது சரியாக இல்லை என்பதை கவனமாக யோசிக்க வேண்டும் ! சொல்லப் போனால் இன்னும் நன்றாக யோசித்து கண்டிப்பாக ஒரு நிதானமான முடிவு எடுக்க வேண்டும். இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கப் போகும் கஷ்டங்கள் ஒரு வரைபடத்தை போல வெற்றியை நோக்கி உயரத்தில் சென்று கொண்டே தான் இருக்கும். கஷ்டங்கள் குறைய வாய்ப்பில்லை ஆனால் நம்முடைய திறமைகளை குறைய நாம் விடக்கூடாது. இந்த உலகத்தில் நீங்கள் யாரைத்தான் நம்புவீர்கள் உங்களுடைய பெற்றோர்களையா ஆசிரியர்களையா நண்பர்களையா சகோதரர்களையா இல்லை சொந்தமா பந்தமா யாராக இருந்தாலும் சரி அவர்கள் உங்களுடைய தோல்வியில் உங்களை விட்டு விட்டு தரையில் விட்டு விட்டு சென்று தான் விடுவார்கள் ! இந்த உலகத்தில் கடைசி வரைக்கும் உங்களுக்கு சப்போர்ட் என்று நீங்கள் மட்டும் தான் இருக்க வேண்டும் மற்றவர்களுடைய கருணையின் பார்வையையும் கைகளில் ஆதரவையும் நீங்கள் எப்போதும் பெற முயற்சிக்க வேண்டாம்‌. உங்களுக்கு என்று ஒரு கௌரவமான வாழ்க்கையை கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்களுடைய உடலை மனதையும் சரியாக வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமான ஒரு விஷயமாகும். இந்த விஷயத்தை இந்த வலைப்பூவில் இருந்து தெரிந்துகொண்டு வலைப்பூவுக்கு சந்தா செய்துவிடுங்கள் !

கருத்துகள் இல்லை:

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16

  நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...