Wednesday, May 29, 2024

GENERAL TALKS - இது தேவைப்படக்கூடிய கருத்து !




பொதுவாக தொழில் அடிப்படையான விஷயம் என்றால் நாம் யாரை இன்ஸ்பிரேஷன் பண்ணும் குருவாக ஏற்றுக்கொள்கிறோம் என்பது மிகவுமே முக்கியமான விஷயம் !ஒரு சீடனின் வீட்டுக்கு கடவுளும் சீடனின் குருவும் வருகை தந்தனர்.கடவுளையும், குருவினையும் ஒன்றாகப் பார்த்த சீடன் உடனடியாக கடவுளின் அருகில் சென்று அவரின் பாதத்தை தொட்டு வணங்கச் சென்றான்.உடனே கடவுள் அவனைத் தடுத்து, “முதலில் நீ உன் குருவை வணங்கு” என்றுச் சொன்னார். சீடன் குருவினை பணியச் சென்ற போது, “சீடனே, நான் உன் வீட்டுக்கு கடவுளை அழைத்து வந்திருக்கிறேன், அதனால் நீ கடவுளைத்தான் முதலில் வணங்க வேண்டும்” என்றுச் சொன்னார். குருவின் உபதேசத்தைக் கேட்ட சீடன் மீண்டும் கடவுளின் அருகில் சென்று அவர் பாதம் பணிய முயன்றான். ”அப்பனே, உன் வாழ்க்கையில் கடவுளை கொண்டு வந்தவர் உன் குரு தான். அவர் தான் என்னை அடைவதற்கு உரிய வழியைக் காட்டி உனக்கு அருளினார், ஆகையால் அவரையே நீ முதலில் வணங்க வேண்டும். ஆகவே நீ அவரிடம் சென்று அவரின் ஆசியைப் பெறுவாயாக “ என்றார் கடவுள். சீடன் மீண்டும் குருவிடம் சென்றான். “சீடனே! நான் தான் கடவுளை அடைய வழி காட்டினேன் என்றாலும், அவர் தான் அனைத்துக்கும் பொறுப்பானவர். ஆகவே நீ முதலில் கடவுளிடம் ஆசி பெறுவதுதான் சிறந்தது” என்றார் குரு. மீண்டும் கடவுளிடம் சென்றான் சீடன்“அப்பனே, அவர் சொல்வது எல்லாம் சரிதான். கடவுள் யார்? குரு என்பவர் யார்? என்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொருவர் செய்யும் செயலுக்கேற்ற கர்ம வினைகளைப் பொறுத்து எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நான் மனிதர்களுக்கு சந்தோஷத்தையோ துக்கத்தையோ அளிக்கிறேன். நான் யாருக்கும் தீமையோ அல்லது நன்மையோ செய்வதில்லை. அவரவர் செய்யும் கர்ம பலனைத் தான் அவரவர்களுக்கு வழங்குவேன். ஆனால் குரு என்பவர் அப்படியல்ல. அவர் தூய்மையானவர். எளிமையானவர். அன்பானவர். குருவினைத்தேடிச் செல்லும் சீடனை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். என்னை அடைய அவனுக்கு வழி காட்டி அருள்வார். அவன் எப்படி இருந்தாலும் அவனை அவர் நெறிப் படுத்தி விடுவார். சீடனின் கர்ம பலன் அவனைப் பாதிக்காமல் காப்பார். அவனுடன் கூடவே இருந்து அவனுக்கு வழிகாட்டி அருள்வார். ஆனால் நான் அதைச் செய்வதே இல்லை. ஆகவே கடவுளை விட குருவே உயர்வானவர்” என்றார் கடவுள். இதுதான் சொல்ல வரும் விஷயம் ! கடவுளால் நேரடியாக நன்மை என்றும் தீமை என்றும் பாரபட்சம் பார்த்து செயல்பட முடியாது ஆகவே நமக்கு தொழில் முறையில் முன்னேற்றமோ பின்னடைவோ ஏற்பட்டால் கடவுள்தான் காரணமா என்பதை நன்றாக யோசித்தே முடிவு எடுக்க வேண்டும். ஒரு நிறுவனம் ஆரம்பிக்கும்போது இதுவரை இருக்கும் மற்ற நிறுவனங்களில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தானாக தான்தோன்றலாக வேலையில் இறங்கி பணத்தை முதலீடு போடுவது ரிஸ்க்தான். மேச்சுரிட்டி என்று இருந்தால் மற்ற மனிதர்களை குருவாக ஏற்றுக்கொண்டு இன்ஸ்பிரேஷன் பண்ணிக்கொள்வது தவறு இல்லை ! இதுதான் இன்றைக்கு என்னுடைய கருத்து !

No comments:

Post a Comment

MUSIC TALKS - YAARO MANADHILE YEDHO KANAVILE NEEYAA UYIRILE THEEYAA THERIYALE KAATRU VANDHU MOONGIL ENNAI PAADA SOLKINDRATHO MOONGILUKUL VAARTHTHAI ILLAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறயே மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் ...