இந்த மாதிரியான ஒரு விஷயத்தை நான் கவனித்தே ஆகவேண்டும். நிறைய பிராமிஸ்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். போதுமான நேரம் கிடைக்கவில்லை. போதுமான சக்திகளும் பொருட்களும் நம்மிடம் இல்லை. இந்த காலம் என்னை கொஞ்சம் கொஞ்சமாக வாட்டுகிறது. வாழக்கை நாரகமாக செல்கிறது. வாழ்க்கையில் எந்த ஒரு வகையிலும் நமக்கு இந்த உலகத்தை பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும். உதாரணத்துக்கு நம்முடைய உலகத்தில் ஜப்பானிய படங்களின் கதாப்பாத்திரங்கள் எடுத்துக்கொள்ளும்போது வளர்இளம் பருவ மாணவர்கள் கூட நன்றாக மெச்சூரிட்டியாக நடந்துகொள்வது போல காட்சிகள் அமைக்கப்படுகிறது. நம்முடைய ஊரில் இருக்கும் ஃபிக்ஷன் வொர்க்ஸ்கள் எல்லாம் எப்போதுமே வயதில் பெரியவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் ஆக்ஷன், ரொமான்ஸ் , அட்வென்சர் நிறைந்த படங்களாகத்தான் இருக்கிறது. இளம் ஆடியன்ஸ்க்கு நம்ம கலாச்சாரத்தில் அதிகப்படியான சுதந்திரம் கொடுக்க கூடாது என்ற ஒரு கட்டுப்பாடு நம்முடன் இருக்கிறது. ஆனால் அந்த கட்டுப்பாடுகள் நமக்கு அறியாமையை உருவாக்க விட்டுவிட கூடாது. நாம் வாழ்க்கையில் நிறைய இடங்கள் செல்ல வேண்டும் நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டும் அவர்களோடு பேசி அவர்களின் குணங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை நன்றாக இருக்கும். நாமும் எதுவும் தெரியாமல் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தால் அவர் எந்த வகையிலும் போதுமான அறிவுத்திறன் இல்லாமல் இருந்தால் நம் மீது காரணமே இல்லாமல் கோபப்படுவார்கள். நம்மை தாக்க முயற்சிப்பர்கள். இவர்களிடம் பேசிக்கொண்டு இருப்பது வேஸ்ட்தான். இவர்களுடைய கணிப்புகளை கண்மூடித்தனமாக நம்பினால் முட்டாள்களுடைய வளர்ப்பில் வளர்ந்த பெரிய முட்டாளாகத்தான் வாழ்ந்துகொண்டு இருக்க வேண்டும். இது எல்லாவற்றுக்குமே முக்கியமான காரணம் அறியாமைதான். இவர்களுடைய அறியாமையான வாழ்க்கையை மாற்றுவது அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தால் கூட ஒரு கட்டத்துக்கு மேலே மாற்ற முடியாது. அறியாமை ஒரு நோய். முதலாளித்துவம் அறியாமையை பயன்படுத்திக்க மட்டும்தான் ஆசைப்படுவார்கள். ஏமாற்றத்துக்கும் போதை பழக்கத்துக்கும் ரொம்பவே அடிமைப்படுத்த பார்ப்பார்கள். அறியாமையை அடுத்த தலைமுறைக்கு எஜூக்கேஷன் ஸ்டாண்டர்ட்ஸ் என்று சொல்லப்படும் கல்வி தரத்தை மேம்படுத்தினால் மட்டுமே முடியும். நீங்கள் வாகை சூட வா படம் பார்த்து இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். இந்த கருத்துக்கள் நான் எழுத அந்த படமும் ஒரு காரணம்தான்.
No comments:
Post a Comment