Sunday, May 26, 2024

TAMIL TALKS - EP. 98 - இன்ஸேக்யூரிட்டியை வெல்ல நினைப்பது கடினமானது.

 


இந்த வாழ்க்கையில் இந்த ஒரு விஷயம்தான் மோசமானது ! தொடர்ந்து நம்ம வாழ்க்கையை வாழ்வதற்கே பிடிக்காமல் போக்கக்கூடிய ஒரு நிலை. இந்த நிலை நம்மை வாழ்க்கையில் எப்போதுமே இல்லாத அளவுக்கு ரொம்ப ரொம்ப அதிகமான அளவுக்கு யோசிக்க வைக்கிறது. நம்ம கையில் போதுமான விஷயங்கள் இல்லை. நாம் செய்யப்போகும் விஷயங்களுக்கு நம்முடன் கூடவே இருந்து சப்போர்ட் பண்ண யாருமே இல்லை. இந்த மாதிரியான நிலைப்பாடு நம்ம வாழ்க்கையில் வரும்போதுதான் எல்லா லட்சியங்களையும் மொத்தமாக பின்னுக்கு தள்ளி வைத்துவிட்டு நமக்கு சப்போர்ட் பண்ணக்கூடிய ஒரு பெர்ஸனை நாம் தேடவேண்டும். இங்கே தொலைந்துபோன ஒளிந்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை கண்டுபிடிப்பதை விட கடினமானது நம்மை சப்போர்ட் பண்ணக்கூடிய ஒரு பெர்ஸனை நாம் கண்டறிவது. நம்முடைய ஆசைகள் கனவுகள் மற்றும் செயல்களுக்கு கடவுளே சப்போர்ட் இல்லை என்று சொல்லி நம்மை தீர்த்துக்கட்ட பார்த்தாலும் சப்போர்ட் பண்ணக்கூடிய பெர்ஸன் மற்றும் பெர்ஸன்களுடைய ஆதரவு இருந்தால் நம்மால் கடவுளையும் எதிர்த்து சண்டைபோடமுடியும் மேலும் விதியை மாற்றியும் எழுதமுடியும். இதனை நாம் செய்தே ஆகவேண்டும் ஆனால் நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலைகள் எல்லாம் எப்போதும் போல கத்தியால் முதுகில் குத்தி முடக்கி விடுகிறார்கள். பின்னர் நெஞ்சிலும் குத்திவிட்டு அடிப்படையில் நம்மை காலி பண்ணிவிட்டுதான் மறுவேலை பார்க்கின்றார்கள். நிறைய நேரங்களில் வேலையில் இருந்து தப்பித்து நிதானமாக யோசிக்கும்போது நம்முடைய மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருப்பது என்னவென்றால் தனியாக இப்படி மாட்டிக்கொண்டு இருப்பதுதான். இன்னொரு பக்கம் நமக்காக நம்முடைய கஷ்டத்தையும் சேர்த்து அனுபவித்து நம்மோடு வாழ்க்கையில் கஷ்டப்படாமல் மற்றவர்கள் சந்தோஷமாகத்தானே இருக்கின்றார்கள் ? சூழநிலைகளில் நடக்கும் கடினத்தன்மையை யாராலும் மாற்ற முடியாது. நம்முடன் எல்லோருமே இருப்பார்கள் என்றுதான் நினைக்கிறோம் உண்மையில் நாம் பண அளவில் செல்வம் , கல்வி , பழகும் திறன் , நம்பிக்கை என்று நிறைய விஷயங்கள் இருந்தால்தான் நம்மோடு எல்லோருமே இருப்பார்கள். நம்முடைய கைகளில் எதுவுமே இல்லை என்றால் யார்தான் சப்போர்ட் பண்ணுவார்கள் ? எல்லோருக்குமே நம்முடைய முகத்தை பார்க்க கூட பிடிக்காது. நம்மை யாருமே சப்போர்ட் பண்ணாமல் இருப்பது நமக்கு உண்மையில் பயமாகத்தான் இருக்கிறது. இந்த இன்ஸேக்யூரிட்டியை எப்படியாவது வென்றாக வேண்டும். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...