Saturday, May 25, 2024

TAMIL TALKS - EP. 96 - மன நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோமா ? - 2



மன நிறைவான வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான விஷயம் உங்களுடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கிடைக்கும்போது நல்ல கௌரவம் உங்களுக்கு கிடைக்கிறது. ஒரு மோதல் நடக்கும்போது உங்களால் நீங்கள் யாரிடம் மோதுகிறீர்களோ அவர்களை கண்டிப்பாக ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கவேகூடாது. நம்மை விட சக்திவாய்ந்த மனிதர்களிடம் மோதும்போது நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். இழக்க கூடாதவைகளை இழந்துவிட்டு பின்னாட்களில் கடந்த காலத்தை குறை சொல்வது நிச்சயமாக பயனற்ற ஒரு செயல் ஆகும். கடந்த காலம் என்பது முடிந்துபோன விஷயம் , நீங்கள் என்ன விதமான சொதப்பல்களையும் கடந்த காலத்தில் பண்ணி இருக்கலாம் ஆனால் எதிர்காலத்தில் உங்களுடைய சக்திகளை அதிகரித்துக்கொள்ளும் பட்சத்தில் உங்களை பிடிக்காதவர்கள் கூட உங்களை மதித்து உங்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்து கொடுப்பார்கள். சக்திகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அதுவே வெற்றியின் ரகசியமாக மாறுகிறது. உங்களுடைய கடந்த காலத்தை நினைத்து கவலைப்படலாம். இப்போது உங்களுக்கு இருக்கும் கெட்ட பழக்கங்களை கடந்த காலத்தின் ஒரு பகுதி என்று நீங்களே நியாயப்படுத்தலாம். என்னுடைய கடந்த காலம் நன்றாக இருந்தால் நானும் நன்றாக இருந்து இருப்பேன் என்றும் என்னிடம் இப்போது இயலாமையாக உள்ளது என்றும் இந்த நிலை எனக்கு நிரந்தரமாக இருப்பதால் என்னால் ஒண்ணுமே பண்ண முடியவில்லை என்றும் நம்பிக்கை இல்லாமல் கதைகளை விடவேண்டாம். இந்த உலகத்தில் எந்த ஒரு இயலாமையும் மாறக்கூடியது. மனிதன் கைகளை இழந்தால் என்ன ? இயந்திர கைகள் இருக்கிறது , கால்களை இழந்தால் என்ன ? இயந்திர கால்கள் இருக்கிறது , நிறைய விஷயங்கள் இப்படி காலப்போக்கில் உங்களுக்கு கிடைத்துவிடும். குடும்பம் , குழந்தைகளின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் கெட்ட பழக்கங்களை நீங்கள்தான் விடவேண்டும். உங்களுடையை கௌரவத்தை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் கெட்ட விஷயங்களை நீங்கள்தான் விடவேண்டும். கௌரவம் இருந்தாலே உடலும் மனதும் தானாக ஒரு நேருக்கு அமைந்து வந்துவிடும். உங்களுக்கு முக்கியமானது உங்களுடைய கௌரவமான வாழ்க்கையா ? அல்லது கெட்ட பழக்கங்கள் நிறைந்த வாழ்க்கையா என்பதை நீங்கள்தான் முடிவு பண்ண வேண்டும். இதனால் நீங்கள் கெட்ட பழக்கங்களை விடுவதால் உங்களின் மோதலில் நீங்கள் வெற்றி அடைந்து விடுவீர்கள் என்று நம்முடைய கம்பெனியின் சார்பாக உத்திரவாதம் கொடுக்க முடியாது ! உங்களுடைய மோதலின் வெற்றி தோல்வி என்ற விஷயங்கள் கெட்ட பழக்கங்களை விடுவதை விடவும் நிறைய காரணிகளுடன் சம்மந்தப்பட்டது ஆனால் நீங்கள் கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டால் வாழ்க்கையை உங்களால் நன்றாக வெற்றியடைய முடியும். அது வேண்டுமென்றால் கம்பெனி சார்பாக உறுதியாக உத்திரவாதமாக சொல்லலாம். மன நிறைவான வாழக்கையை அடைவதும் தக்கவைப்பதும் கடினமான விஷயம்தான் ஆனால் முடியாத காரியம் இல்லை !

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...