Monday, February 5, 2024

TAMIL TALKS - EP. 52 - கொடியதோர் உலகம் செய்யல் !

 





இது சம்பந்தமான நேரடியான அதிகபட்சமாக இருக்கும் யோசனைகளை எல்லாமே சேர்த்துதான் ஒரு முடிவை எடுத்துள்ளேன். நான் என்னை விட்டுக்கொடுப்பதை விடவும் இந்த பிரபஞ்சத்தில் நேருக்கு நேராக தனக்காக போராடிய ஒரு கௌரவமான உயிராக மட்டும்தான் என்னுடைய உயிர் போக வேண்டும். இந்த பிரபஞ்சம் ஜெயித்தாலும் இந்த பிரபஞ்சம் பண்ணிக்கொண்டு இருப்பதெல்லாம் தவறானது. நான் தோற்று போய் இறந்து போனாலும் நான் எடுக்கும் முடிவுகள் சரியானது. சிறிய வயதில் இருந்து எனக்கு கொடுத்த பாதிப்புகளுக்கும் தோல்விகளுக்கும் நேருக்கு நேராக சண்டை போட்டு பழிக்கு பழியாக வாங்க வேண்டும். நான் அடைந்த தோல்வியை விடவும் ஒரு கோடி மடங்கு அதிகமாக வெற்றியை அடைய வேண்டும். வலி என்றால் என்னவென்றே தெரியாத இயந்திர உடம்பும் பசி என்றால் என்னவென்றே தெரியாத சக்தியின் ஊட்டமும் இருப்பதால் பிரபஞ்சத்தில் ஆணவம் அதிகமாக மாறிவிட்டது. இந்த பூமியை பாதுகாப்பாக வைத்து இருந்த உயிர்களும் தாவரங்களும் அழிந்துகொண்டு இருக்கின்றன. டெக்னாலஜி கம்பெனி நான் தொடங்கினால் என்னால் இந்த பிரச்சனைகளை சிறப்பாக சரிபண்ண முடியும். தொடர்ந்து காயங்களையே கொடுத்துக்கொண்டு இருக்கும் பிரபஞ்சத்தை எதிர்த்து என்னால் பாதிக்கப்பட்ட மனிதர்களையும் உயிரினங்களையும் தாவரங்களையும் காப்பாற்ற முடியும்.ஒரு காலத்தில் எனக்கு இருந்த அறிவுத்திறனை விட இப்போது இருக்கும் அறிவுத்திறன் எனக்கு மிகவும் குறைவாக இருக்கிறது. எல்லோரும் டேரா பைட் அளவுக்கு திறன்களை வைத்து இருக்கின்றார்கள் ஆனால் நான் வெறும் மெகா பைட் கணக்கில்தான் திறன்களை வைத்து இருக்கின்றேன். என்னால் முடியவில்லை. பல் துலக்குவது , குளிப்பது , வெளியே நிறைய இடங்களுக்கு செல்வது, வேலை செய்வது, சம்பாதிப்பது, சாப்பிடுவது என்று எல்லா வேலைகளிலும் ஒரு இனம் புரியாத தடங்கல்களும் சோர்வுகளும் பின்னடைவுகளும் இருக்கின்றது. மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. உயிரோடு இருக்கும் ஒரு ஒரு நொடியும் எப்படியாவது வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இது எல்லாமே பிரபஞ்சம் அல்லது கடவுள் நான் சாகவேண்டும் என்று எனக்கு பண்ணுகிறார் என்னும் பட்சத்தில் நான் கண்டிப்பாக சாக கூடாது. இங்கே எவருக்குமே உயிரை கொடுக்கவும் காப்பாற்றவும்தான் உரிமைகள் உள்ளது. உயிரை எடுக்க உரிமைகள் இல்லை.கடவுளின் கையால் சாகவேண்டும் என்றால் என்னை கொல்ல காரணங்களை கடவுள் உருவாக்க வேண்டும். முடிந்த வரையில் என்னுடைய வாழ்க்கையில் நான் சாகவேண்டும் என்ற காரணத்துக்காக என்னென்னமோ சதிவேலைகளை செய்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட வைத்து 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைச்சாலை தண்டனை போல வாழ்க்கையை கொடுத்தாலும் நான் ஜெயித்து காட்டியுள்ளேன்.

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...