நான் தனிப்பட்ட ஒரு கருத்தை சொல்லியே ஆகவேண்டும். நான் காலத்துக்கு எதிராக போர் செய்யப்போகிறேன். இன்னைக்கு தேதிக்கு கடந்த 8 வருடங்களாக எனக்கு நடந்த கொடுமைகளுக்கும் அதனால் உருவான பாதிப்புகளுக்கும் நான் பதிலுக்கு எதுவுமே பண்ணவே இல்லை. நான் ரொம்பவுமே நம்பிக்கையாக இருந்தேன் காலம் எனக்கு ஒரு வாய்ப்பை கொடுக்கும் என்று 8 வருடம் காத்திருந்தேன். எனக்கு நடந்த கொடுமைகளில் ஒரு 20 சதவீதம் மட்டுமே எந்த ஒரு சராசரி மனிதனுக்கு நடந்து இருந்தாலும் கூட அந்த மனிதன் அவனுடைய வலியை தாங்காமல் உயிரை விட்டு இருப்பான். நானும் உயிரை உள்ளங்கையில் சுமந்து எனக்கு நடந்த எல்லா கொடுமைகளையும் தாங்கிவிட்டென். இதனை மிகவும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் பணம் அடிப்படையில் எனக்கு இருந்த கஷ்டம்தான்.கடந்த 8 வருடங்களாக நான் இழக்க கூடாததை எல்லாமே இழந்து இருக்கிறேன். பணத்தை காலம் கண்ணால் கூட காட்டவே இல்லை.கொஞ்சமாவது எனக்கு இரக்கமும் கருணையும் மனிதத்தன்மை கொடுத்து இருக்கலாம். அன்பாக இருப்பது அவ்வளவு கஷ்டமா என்ன ? நான் நிரந்தரமாக இழந்த விஷயங்கள் நிரந்தரமாக இழந்ததுதான்.ஒரு குற்றத்தை எப்படி பார்த்தாலும் மன்னித்து விடுவதுதான் சரியானது. இங்கே எனக்கு நடந்த எல்லா விஷங்களிலும் எல்லா சம்பவங்களும் தெரியாமல் நடந்த ஆக்ஸிடென்ட் கிடையாது. எல்லாமே நான் சாகவேண்டும் என்ற நோக்கத்தோடு காலத்தால் வேண்டுமென்றே பண்ணப்பட்ட இன்ஸிடென்ட்ஸ். யாருமே காலம் என்னை எப்படி ஒரு ஒரு நொடியும் நரகம் போல எண்ணெய் சட்டியில் வைத்து வறுத்து இருந்தால் மன்னித்து விட்டு இருக்கவே மாட்டார்கள். ஆனால் நான் மன்னித்தேன். காலத்தை நிரந்தரமாக மன்னித்தேன். ஆனால் நச்சு பாம்பை மன்னித்து விட கூடாது என்று காலம் எனக்கு புரியவைத்து விட்டது. காலம் எனக்கு பண்ணிய குற்றங்களை நான் மன்னித்தேன். ஆனால் காலம் இந்த தேதிக்கு என்னுடைய உடல்நிலையை மிகவும் மோசமாக மாற்றி உயிருக்கே ஆபத்தை விளைவிக்க வேலையை பார்த்துவிட்டது. இனிமேல் நான் என்ன பண்ணனும் ? என்ன பண்ண போகின்றேன் ?
No comments:
Post a Comment