Friday, February 2, 2024

TAMIL TALKS EP. 45 - சாதனைகளை பண்ணுவதுக்காகத்தான் இந்த வாழ்க்கை !


ஒரு பெரிய விஷயத்தை ஒரு பெரிய சாதனையை பண்ணவேண்டும் என்றால் எந்த ஒரு கட்டத்திலும் நம்மை நாமே 100 சதவீதம் மாற்றிக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் , ஒரு உடைந்துபோன மெஷின் என்றால் அந்த மெஷின்னுக்கு பதிலாக புதிய ஒரு மெஷின் போடுகிறோம் அல்லவா அதேதான் நம்முடைய வாழ்க்கையிலும் நாம் பண்ண வேண்டும். பெரிய விஷயங்களை பண்ணுபவர்கள் எப்போதுமே நிறைய சாதனைகளை பண்ணுபவர்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் பற்றி கவலைப்படாமல் வாழ்க்கையில் எப்போது தேவைப்பட்டாலும் அப்போதே தங்களை மாற்றிக்கொண்டுவிடுகிறார்கள். நான் இப்படித்தான் என்ற பெர்ஸனல் பிரெஃப்ரன்ஸ் உங்களுடைய தோல்விக்கு காரணமாக இருந்தாலோ அல்லது உங்களுடைய சாதனைகளை தடுக்கும் தடுப்பு சுவராக இருந்தாலோ உங்களை நீங்கள் கண்டிப்பாக மாற்றிக்கொண்டால் மட்டும்தான் நீங்கள் ஆசைப்படும் வெற்றியை பெற முடியும் நீங்கள் சாதிக்க நினைக்கும் சாதனையை செய்ய முடியும்.  நாம் அனைவருமே சூரியனை போல பணத்தாலும் பொருளாலும் யாராலுமே நெருங்க முடியாத உயரத்துக்கு போகவும் யாராலுமே தாக்க முடியாத சக்தியை அடையவும் கடமைப்பட்டு இருக்கின்றோம். நம்ம வாழ்க்கையில் ஒரு சில நேரங்கள் இருக்கிறது , நமக்கென்று எந்த மனக்கசப்பும் வேண்டாம் என்றும் போதுமான சாப்பாடும் நல்ல தூக்கமும் கிடைத்தால் மட்டுமே போதுமானது என்றும் முடிவு எடுப்போம். தப்பான முடிவு , கண்டிப்பாக தப்பான முடிவு, நம்முடைய உடலுக்கு 6-7 மணி நேர தூக்கம் அவசியமானதுதான் ஆனால் இந்த தூக்கத்தை இரவு 9:00 முதல் அதிகாலை 4:00 என்ற அளவுக்குள் இருக்கும் காலகட்டத்தில் முடித்துவிட வேண்டும். கண்டிப்பாக நேரத்துக்கு குளிக்க வேண்டும் , நேரத்துக்கு சாப்பிட வேண்டும் , நம்முடைய உடல் நலத்தை கண்டிப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். மனதுக்குள்ள உறுதி வேண்டும். வாழ்க்கையில் எப்போதுமே தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும். பேசும் வார்த்தைகளில் தெளிவு இருக்க வேண்டும். நம்ம வாழ்க்கையில் சாதனைகளை செய்தாலும் செய்யாமல் போனாலும் வயது முதிர்ச்சி அடையும்போது செரிமானம் பயங்கரமாக குறைந்து சத்துமானம் குறைந்து எதையுமே சாதிக்க முடியாமல் ஒரு மட்டமான உடல் நிலையில் நிரந்தரமாக வாழத்தான் போகின்றோம் நமக்குள் சக்திகள் இருக்கும்போதே சக்திகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் , அப்படியாக பயன்படுத்த வேண்டிய நாட்களில் வெற்றிகளை அடையாமல் வயது முதிர்ந்த பின்னால் வெற்றிகளை அடைவது அவ்வளவாக சிறப்பான விஷயமாக கருதப்படாது. நிறைய பெர் வாழ்க்கையுடைய அர்த்தம் என்ன என்ற முட்டாள்தனமாக இருக்கும் கேள்வியை கேட்டு வாழ்க்கையை குழப்பிக்கொண்டு அலைக்கிறார்கள். ஒரு பொருளை புதிதாக பார்த்தால் அந்த பொருளுக்கு நீங்கள்தான் பெயர் வைக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒரு நெல்லிக்காயை எடுத்துக்கொள்ளுங்கள் , சாப்பிட்டால் கசப்பும் துவர்ப்பும் கலந்து இருக்கிறது ? கசப்பு என்பதன் அர்த்தம் என்ன ? இந்த கேள்விக்கு எங்கேயாவது விளக்கம் கொடுக்க முடியுமா ? ஒரு ஆரஞ்சு பழம் ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது ? ஆரஞ்சு நிறத்தின் அர்த்தம் என்ன ? வெறும் டெக்ஸ்ட் மட்டுமே வைத்து ஆரஞ்சு நிறத்தையோ அல்லது கசப்பு சுவையையோ விளக்க முடியுமா ? இவர்களும் வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று முட்டாள்தனமாக ஒரு கேள்வியை கேட்டு எதையுமே அனுபவிக்காமல் வாழ்க்கையை வாழ்ந்து இறந்தும் போகிறார்கள் ! வேறு என்னதான் சொல்லி இவர்களுக்கு புரிய வைக்க முடியும் ? நீங்களே சொல்லுங்கள் ! உங்களுக்கு வழி தெரியவில்லை என்றால் யாரையாவது கேளுங்கள் ! பாதம் போன போக்கில் போகாதீர்கள் !

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...