Monday, February 5, 2024

TAMIL TALKS EP. 51 - மாற்றங்கள் அத்தியாவசியமான விஷயங்கள் !

 



இது எல்லாமேதான் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான நாட்கள் , மார்ட்டல் காம்பேட் வீடியோகேம் போல நான் என்னுடைய வாழ்க்கையை எதிர்த்து என்னுடைய பிரச்சனைகளை எதிர்த்து நேருக்கு நேராக போராடவேண்டிய நாட்கள். இந்த நேரங்களில் வாழ்க்கை என்னை கொஞ்சம் கூட காசு இல்லாத மனிதனாக மாற்றியபோது நான் பட்ட கஷ்டங்களால் நான் எனக்கு கிடைத்த அனுபவங்களை சொல்கிறேன். முன்னதாக படிப்பு , படிப்பு விஷயத்தை பொறுத்தவரை பள்ளிக்கூடம் , கல்லூரி என்று எனக்கு கிடைத்த எல்லா விஷயங்களும் என்னுடைய பொட்டேன்ஷியலை கொடுக்க போதுமானதாக இல்லை. பொருளாதார நஷ்டம் எனக்கு பள்ளிக்கூட காலகட்டத்தில் மிக மிக அதிகமாக இருந்தாலும் ஒரு மிகப்பெரிய கம்ப்யூட்டர் டெக்னாலஜி கம்பெனியை உருவாக்க என்னால் எவ்வளவு போராட முடியுமோ அவ்வளவு போராடினேன். பள்ளிக்கூட காலங்களில் ஃபிஸிக்கல் லெவல்லில் எனக்கு போதுமான வலிமை இல்லை. பொதுவாக ஃபிக்ஷன்னல் வொர்க்ஸ் என்னுடைய மனதை அதிகமாக கவர்ந்தது. நன்றாக யோசித்து பார்த்தால் ஃபிக்ஷன்னல் வொர்க்ஸ்ஸில் இருக்கும் கன்டேன்ட்தான் நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட நிறைய விஷயங்களுக்கு சோர்ஸ் என்று சொல்லலாம். ஒரு கம்ப்யூட்டர் டெக்ஸ்ட்டில் இருந்து ரேஃப்ரேன்ஸ் எடுத்து செயல்படுவது போல நான் மொத்தமாக என்னுடைய வாழ்க்கையையே ஃபிக்ஷன்னல் வொர்க்ஸ்ஸில் இருந்து ரேஃப்ரேன்ஸ் எடுத்தேன். நான் பிறந்த நாளில் இருந்து இன்றைய நாள் வரைக்கும் பணத்துடைய தேவையில் நசுங்கிப்போன ஒரு புதைந்த போர் கத்தியை போலத்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நிரந்தரமான மாற்றத்தை கொண்டுவர வேண்டும். இது சம்மதமான நான் என்ன மாற்றங்களை எனக்குள்ளேயும் என்னுடைய மனதுக்கு உள்ளேயும் என்னுடைய சுற்று சூழல்லிலும் பண்ணினாலும் குறைந்த பட்ச அளவில் பண்ணினால் அதனால் எந்த பிரயோஜனமும் இருக்காது. மறுபடியும் மறுபடியும் வேண்டுமென்றே ஜெயிக்க வேண்டிய என்னை தோற்கடித்து தோற்கடித்து காலம் நிச்சயமாக என்னுடைய மனதை உடைத்துதான் விட்டது. அதுக்காக நான் மிகவும் தெளிவான முடிவுகளை எடுத்தேன். காலமோ அல்லது பிரபஞ்சமோ ஒரு ஒரு முறையும் என்னை கையாலாகாத அன்னாடும் காய்ச்சியாக வைத்து இருக்க எல்லா தவறான காரியங்களிலுமே இறங்கியது. பாதிக்கப்பட்ட என் மேலே உடல் அளவிலும் மனது அளவிலும் சுமத்தப்பட்ட பாரங்கள் மிக மிக அதிகம். கடைசி வரைக்கும் நான் பாதிக்கப்பட்டு இப்படியே இருக்க வேண்டும் ஆனால் எல்லா நேரங்களிலுமே என்னை பாதித்தவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். நான் மன்னிக்கலாம் , மன்னிக்கலாம் , ஆனால் தொடர்ந்து ஒருவருக்கு நம்மை தாக்குகிறார் என்றும் நமக்கு கெடுதல் செய்து விஷமமாக நடந்துகொள்கிறார் என்றும் மன்னித்து விட்டுக்கொண்டே இருந்தால் கடைசியில் மிகவும் பெரிய தவறாக கண்டிப்பாக முடியும். பிரபஞ்சம் ஒரு ஒரு முறையும் என்னை உயிரோடு தின்றுகொண்டு இருக்கிறது. போலியான உறவுகள் அவர்களால் காப்பாற்ற முடிந்த அளவுக்கு சக்திகள் அவர்களிடம் இருந்தாலும் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். கடைசியாக ஒரு விஷயத்தை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் இறந்து போனால்தான் உங்களுக்கு சந்தோஷம் என்றால் என்னுடைய சடலத்தைத்தான் நீங்கள் பார்க்க ஆசைப்படுகிறீர்கள் என்றால் கண்டிப்பாக நான் உயிரோடு இருக்கும்போது என்னால் முடிந்த வரைக்குமே போராடுவேன். நான் போர்க்களத்தை பார்த்து பயப்பட மாட்டேன். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...